Skip to Content

06. அன்னை அன்பர்களுக்கு உதவக்கூடிய கற்பனைத் திறன்

அன்னை அன்பர்களுக்கு உதவக்கூடிய கற்பனைத் திறன்

N. அசோகன்

அன்னை சமாதி அடைந்து பல வருடங்கள் ஆகிவிட்டதால் அவரை நாம் இப்பொழுது நேரடியாகப் பார்க்க முடியாத நிலையில் இருக்கின்றோம். இருந்தாலும் நம்முடைய கற்பனாசக்தியைப் பயன்படுத்தி அன்னையோடு நாம் மானசீகமாக தொடர்பு கொண்டு அவருடைய அருளாசிகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

நமக்கு என்னவெல்லாம் பிரச்சனைகள் இருக்கின்றனவோ மற்றும் வாய்ப்புகள் தெரிகின்றனவோ அவற்றை அன்னையோடு சம்பந்தப்படுத்தி நாம் காட்சிகளை மனதில் பார்க்கலாம். அந்த காட்சிகள் நிஜமாகி, நாம் விரும்பும் பலனை நமக்குக் கொடுக்கும். அந்த அடிப்படையில் கீழ்க்கண்ட வாழ்க்கை பிரச்சனைகளுக்கு ஏற்ற காட்சிகளை நம் மனதில் கொண்டு வந்து நல்ல பலனைப் பெற்றுக் கொள்ளலாம்.

  1. கடனுக்கு ஆளாகியுள்ள அன்பர்கள் தானும் தனக்குக் கடன் கொடுத்த மற்றவர்களும் அன்னை முன் நிற்பது போலவும், தான் பட்ட கடனுக்குண்டான தொகையை அன்னை அந்த கடன்காரர்களுக்குப் பணமாகவோ அல்லது காசோலையாகவோ திருப்பித் தருவது போலவும், அவர்களும் அன்னைக்கு நன்றி சொல்லி பணத்தைப் பெற்றுக் கொண்டு செல்வது போலவும் பார்க்கலாம்.
  2. புதிதாக ஒரு வீடோ மற்றும் அடுக்குமாடி குடியிருப்போ வாங்க விரும்புகின்றவர்கள் அன்னையே அவர்களை அப்படி ஒரு வீட்டிற்கோ, குடியிருப்பிற்கோ அழைத்துச் செல்வது போலவும், புது வீட்டிற்குண்டான சாவி மற்றும் பாத்திரங்களை அவ்விடத்திலேயே அன்னை அவர்களிடம் கொடுப்பது போலவும் கற்பனை செய்யலாம்.
  3. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் அன்னையே அவர்களிடம் அவரவர் விருப்பத்திற்கேற்ப பிறந்த ஒரு நாளான ஆண் அல்லது பெண் குழந்தையை அவர்கள் கையில் கொடுப்பது போன்றும், அவர்கள் சந்தோஷமாக வாங்கிக் கொள்வது போலவும் கற்பனையாகப் பார்க்கலாம்.
  4. திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றவர்களுக்கு விருப்பத்திற்குத் தடையாக எதிர்ப்புகள் எழும்பினால் அவ்வெதிர்ப்புகளை முறியடிக்கும் வகையில் அன்னை முன் நின்று மாலை மாற்றிக் கொள்வது போலவும், அன்னை கொடுக்கின்ற மோதிரங்களை இருவரும் அன்னையிடமிருந்து வாங்கி ஒருவர் கையில் மற்றொருவர் அணிவிப்பது போலவும் பார்க்கலாம்.
  5. தேர்வில் நல்ல மதிப்பெண்கள் வாங்க விரும்பும் மாணவ, மாணவிகள் அன்னையிடம் ஒரு வெற்று மதிப்பெண் பேப்பரைக் காண்பிப்பது போலவும், அவர்கள் விரும்புகின்ற மதிப்பெண்களை அன்னையே எழுதி மொத்த மதிப்- பெண்களைக் கணக்கிட்டு தன் கையெழுத்திட்டு ஆசீர்வதித்துத் திருப்பித் தருவது போலவும் பார்க்கலாம்.
  6. வெளிநாடு செல்ல விரும்பும் அன்பர்கள் அன்னையிடம் தன்னுடைய பாஸ்போர்ட்டை காண்பிப்பது போலவும் அந்த பாஸ்போர்ட்டில் அவர்கள் எந்த நாட்டிற்குச் செல்ல விரும்புகின்றார்களோ அந்த நாட்டு விசாவை அன்னை முத்திரையிட்டு தன் கையெழுத்திட்டு திருப்பி தருவது போலவும் கற்பனையாகப் பார்க்கலாம்.
  7. உறவில் சுமுகம் கெட்டுப் போய்விட்ட நிலையில் இருப்பவர்கள் யாரோடு மீண்டும் அந்தச் சுமுகத்தை பெற விரும்புகின்றார்களோ அவர்களும் தானும் அன்னை முன் நிற்பது போலவும், அன்னை அவர்கள் இருவரிடமும் அன்பாகப் பேசி சமாதானம் செய்வது போலவும், அதனால் பழைய சுமுகம் மீண்டும் மலர்வது போலவும் கற்பனையாகப் பார்க்கலாம்.
  8. பணம், நகை, பாஸ்போர்ட், கிரெடிட் கார்டு மற்றும் கைபேசி போன்ற முக்கியமான பொருட்களையும், ஆவணங்களையும் தொலைத்தவர்கள் அன்னையே அந்தப் பொருட்களை பத்திரமாகத் திருப்பித் தருவது போலவும், இனிமேல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்குவது போலவும் கற்பனையாகப் பார்க்கலாம்.
  9. உடல்நலம் குன்றியிருப்பவர்கள் தங்கள் தலைமேல் அன்னை தன்னுடைய கையை வைத்து ஆசீர்வாதம் செய்வது போலவும், அன்னையின் கை வழியே அவருடைய ஒளி தங்களுடைய உடம்பில் இறங்கி நோயைக் குணப்படுத்துவது போலவும், மீண்டும் பழைய தெம்பு திரும்பி வருவது போலவும் கற்பனையாகப் பார்க்கலாம்.
  10. தங்களுடைய வியாபாரம் மற்றும் தொழிற்கூடங்கள் போதிய ஆர்டர் இல்லாமல் மந்தமாக இருக்கின்ற நிலையில் உள்ளவர்கள் நிறைய ஆர்டர்கள் கொடுக்கக்கூடிய கஸ்டமர்களுடன் அன்னை தங்களுடைய அலுவலகங்- களுக்குள்ளும், தொழிற்கூடங்களுக்குள்ளும் நுழைவது போலவும், இதன் பலனாக வியாபாரமும், தொழிற்கூடமும் மீண்டும் சுறுசுறுப்பு அடைவது போலவும் கற்பனையாகப் பார்க்கலாம்.
  11. சரியான சாலை பராமரிப்பு இல்லாத இடங்களில் குடியிருக்கின்ற அன்பர்கள் சாலை போடும் பணியாளர்களுடன் அன்னை அங்கு வந்து அவர்களை சாலை போட வைப்பது போலவும், மின் தடையால் அவதிப்படுகின்ற அன்பர்கள் அன்னை வீட்டுக்குள் நுழையும் பொழுதே மின்சாரம் மீண்டும் வருவது போலவும் கற்பனையாகப் பார்க்கலாம்.
  12. சில காரணங்களால் வருத்தத்திலும், சோகத்திலும் ஆழ்ந்து இருக்கின்ற அன்பர்கள் சின்னஞ்சிறு குழந்தை போல் அன்னை மடியில் அமர்ந்திருப்பது போலவும், தாய்மார்கள் குழந்தை- களைச் சமாதானப்படுத்துவது போல அன்னை தங்களுக்கு ஆறுதல் சொல்லுவது போலவும் கற்பனையாகப் பார்க்கலாம். இதனால் தங்களுக்கு மீண்டும் சந்தோஷம் வருவது போலவும் பார்க்கலாம்.

********

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
சுதந்தரத்தை உறுதியாக நாடலாம். பிடிவாதமாக நாட முடியாது.
 
 
 
******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
தவணையில் பெற்றால் கட்ட வேண்டும் என்ற கடமை ஏழ்மையைக் கடக்கும்.
இல்லாததைக் கேட்பது ஏழ்மை.
இருப்பதைப் பெற முயல்வது அதிர்ஷ்டம்.
 
 
******



book | by Dr. Radut