Skip to Content

03. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

கர்மயோகி

21. உயரும் வாழ்க்கை

பக்கம் 198, பாரா 1

மனம் அழியும் பகுதியானது. அறியாமை, இரட்டை, அளவு உற்பத்தியாகுமிடம் வாழ்வு. மனம் சத்தியஜீவியத்தின் கரு உருவம். சத்தியஜீவியம் தெய்வீக ஜீவியம் பெற்று சுயம்பிரகாசமானது. பிரபஞ்சம் ஆரம்பிக்கும்பொழுதே தன்னை மறுக்கிறது. அதன் விளைவு மனம். நாம் ஏற்கனவே கூறியபடி, வாழ்வு தெய்வீக சத்தியஜீவிய சக்தியின் கரிய உருவம். வாழ்வின் உயர்ந்த அம்சங்கள், அமரத்துவம், திருப்தியுள்ள ஆனந்தம், எல்லாம்வல்ல வலிமை. வாழ்வு ஜட உலகில் எழுகிறது. இது பிரிக்கும் மனத்தின் சக்தி. வாழ்வு ஆழ்ந்து, அமிழ்ந்து, ஜடத்தில் சிறைப்பட்டது. பசி, மரணம், இயலாமையை உற்பத்தி செய்வது. நாம் பிரபஞ்ச வாழ்வின் பகுதி. இந்த உறவு அந்த முறையை நிர்ணயிக்கிறது. நம் பரிணாமத்தின் முதல், அடுத்தது, முடிவான சட்டங்களை நிர்ணயிக்கிறது. வாழ்வின் முதல் அம்சங்கள் இயலாமை, பிரிவினை. அது சக்தியால் உந்தப்படும் ஆழ்மன உறுதி. அது வெளிப்படையாகத் தெரியாது. அது உடலின் சக்தி ஊமையாகச் செயல்படுவது. ஜட சக்திகட்குட்படும் இயலாமையது. பரிமாறுவதை அது மேற்கொள்கிறது. ரூபமும், சூழலும் பரிமாறுவதே அது. இது ஜடம். இது கண்மூடியான சக்தி. இது சக்தி வாய்ந்த சக்தி. ஜடமான பிரபஞ்சத்தில் அர்த்தமுள்ள அறிகுறிகள் அவை. விஞ்ஞானி இதைக் காண்கிறான். இந்தப் பார்வை வாழ்வு முழுவதும் பரவுகிறது. இது ஜடத்தின் ஜீவியம். ஜடவாழ்வின் முதிர்ந்த வாழ்வின் அம்சம் இது. ஒரு புதிய சமநிலையிது. புதிய சட்டங்கள் குறுக்கிடுகின்றன. இந்த ரூபத்தினின்று வாழ்வு வெளிவரும் அளவில் அதுவும் உயரும். தன்னை அறியும் மனமாக அது பரிணாம உயர்வு பெறும். வாழ்வினுடைய அம்சங்கள் மரணம், விழுங்குவது, பசி, விரும்பி நாடும் ஆசை. அசையப் போதுமான இடமில்லை என்ற உணர்வால் ஏற்படுவது இது. போராடும் திறன் அதிகமாகி, பெருகி, வெற்றி பெற்று ஆட்கொள்கிறது. இந்த மூன்று அம்சங்களும் பரிணாமத்தின் நிலை. டார்வினின் பரிணாம தத்துவம் இதை முதன்முறையாக மக்களுக்கு அறிவித்தது. மரணம் வாழும் முயற்சியை உட்கொண்டது. வாழ்வு மறைந்துள்ள நெகட்டிவ் அம்சமே மரணம், அதன் பாஸிட்டிவ் அம்சத்தை அமரத்துவத்தை நாட அதற்கு ஆசை காட்டுகிறது. பசியும் ஆசையும் போரிட்டு நிலையான பாதுகாப்பை அடைய முயல்கின்றன. வாழ்வின் பாஸிட்டிவ் அம்சம் நெகட்டிவ் அம்சத்திலிருந்து விடுதலை பெறும் உந்துதலே ஆசை. அது தீராத பசி. வாழ்வின் ஆனந்தத்தை முழுமையாகப் பெறும் முயற்சி அது. அளவோடுள்ள திறமை என்பது வளரும் திறமை மறைந்துள்ளது. பிரம்மத்தை அடையும் முயற்சியிது, அடைந்து ஆட்கொள்ள முயல்கிறது. சூழலை அது வெல்லும். அதே போல் குறையும், லிமிட்டும் வாழ்வு தன் பாஸிட்டிவ் அம்சத்தால் நிறைவு பெறும் சூசகங்களே. அது என்றும் உள்ளது. வாழ்க்கைப் போராட்டம் பிழைக்கும் முயற்சி மட்டுமல்ல. நிறைவையும் ஆட்சியையும் தேடுவது அது. சூழலை வென்றால் தான் பிழைக்க முடியும். தானும் மாறி, பிறருக்காகவும் மாற வேண்டும். ஏற்பதும் விட்டுக் கொடுப்பதும் அவசியம். வென்று, மாற்றுவதாலும் அதைச் சாதிக்கலாம். தொடர்ந்து நிலைப்பது இலட்சியம். நிறைவை மேலும் மேலும் தேடுவதால் மட்டும் பெற முடியும். சக்தியுள்ளது பிழைக்கும் என்ற டார்வின் கொள்கை இது.

பக்கம் 199, பாரா 2

ஜடமான தத்துவத்தை விஞ்ஞானம் வாழ்க்கைக்கும் நீட்ட முயற்சி செய்தது. ஜட வாழ்வுக்கும் ஜடத்துள் புதைந்துள்ள ஜீவியத்திற்கும் அது பொருந்தும். ஒரு புது தத்துவம் எழுந்ததை அவர்கள் காணவில்லை. ஜடத்திற்குப் பணிவதே அது உள்ளதற்குக் காரணம். வாழ்வின் தத்துவம் பெரும் அளவில் தாக்கும் தன்மையுடையது. அது மனிதனுடைய பிராணனின் சுயநலம். தன்னைக் காக்கும் சுபாவம் இம்முறையைக் கைக்கொள்கிறது. தீவிர வாழ்வு தன்னை வலியுறுத்தும் போக்கு இது. இந்த முதலிரண்டு வாழ்வு நிலைகளும் புதிய தத்துவத்தின் விதைகளைக் கொண்டுள்ளன. அடுத்த நிலையும் உண்டு. மனம் ஜடத்திலிருந்து பரிணாமத்தால் எழும் அளவுக்கு இப்புதிய நிலையும் எழும். அது பிராணனுடைய தத்துவம். இங்ஙனம் அது தனக்கேயுரிய தத்துவமாகிறது. மேலும் மனம் ஆத்மாவையும், சத்தியஜீவியத்தையும் நோக்கி வளர்கிறது. வாழ்வு மனத்தை நோக்கி வளர்வது அவற்றையெல்லாம் மாற்றிவிடும். வாழ நடத்தும் போராட்டம் நிரந்தரமாக நிலைக்கும் முயற்சி. மரணம் எனும் தத்துவம் இதற்கு எதிரி. தனி மனித வாழ்வு கட்டாயப்படுத்தப்பட்டு நிலையான நிலையை ஏற்படுத்துகிறது. இது தனக்காக அன்றி மனித குலத்திற்காகச் செய்வது. மற்றவற்றின் ஒத்துழைப்பின்றி அதனால் இதைச் செய்ய முடியாது. பரஸ்பர உதவி, ஒத்துழைப்பு என்ற வித்திலிருந்து அன்பெனும் தத்துவம் எழுகிறது. பிறர் மீதுள்ள பாசம், மனைவி, குழந்தை மீதுள்ள பிரியம், நண்பன், உதவி செய்வோர் தேவைப்படுவது, கூட்டாளிகள் குழு, கூட்டுச் சேரும் பழக்கம் என்பவை பரஸ்பரத்தின் அம்சங்கள். முதலில் அன்பு சுயநலமாக இருக்கும். தன்னை வலியுறுத்தி ஆட்சி செய்யும். பரிணாமம் உயர்ந்த நிலைகளிலும் அது வலியுறுத்தும், அதிகாரம் செய்யும். தனி மனிதன் ஜீவனின் சிறு அம்சம் என்பதே உண்மை. தனி மனிதன் பிரபஞ்சத்தால் வாழ்கிறான். பரிணாமத்தால் வளரும் மனம் அதை அதிகமாக அறியும். அதற்கு அன்பும், வாழ்வும் அனுபவமானதால் அதனால் உண்மையைக் காண முடியும். இது முக்கியம். தலைவிதியை அது நிர்ணயிக்கும். இந்நிலையில் தன்னைக் கடந்த நிலையுண்டென மனம் அறியும். அதை அறிந்ததிலிருந்து அவன் எதிர்காலப் பரிணாமப் பாதை நிச்சயமாக்கப்படுகிறது. அது உயர்ந்ததை நோக்கிச் செல்லும் பாதை. ஆத்மாவை, சத்தியஜீவியத்தைச், சத்தியஜீவனை நோக்கிச் செல்லும் பாதையிது.

பக்கம் 200, பாரா 3

தன் சுபாவப்படி வாழ்வு மூன்றாம் நிலையை அடைய வேண்டியிருக்கிறது. சுய வெளிப்பாட்டின் மூன்றாம் நிலை சட்டங்கள் அவை. வாழ்வின் இவ்வுயர்வை நாம் ஆராய்வோம். இங்கு வாழ்வின் பரிணாமத்தினுடைய முடிவான கட்டத்தைக் காண்போம். இதை நாம் மூன்றாம் நிலை என்றோம். தோற்றத்திற்கு இந்நிலை முதல் நிலைக்கு மாறாக இருக்க வேண்டும். அத்துடன் அது எதிரானது. உண்மையில் இந்த மாறுபாடு அதன் நிறைவாகும். மேலும் இது திருவுருமாற்றம். வாழ்வின் ஆரம்பம் அதிகப்படியான பிரிவினையாலானது. அவை ஜடத்தின் இறுகிய ரூபங்கள். அணு இவ்விறுகிய ரூபத்தின் முத்திரை. அதுவே ஜட ரூபங்கட்கு அடிப்படை. அணு மற்றவற்றிலிருந்து மாறுபட்டது. மற்றவற்றுடன் இணையும்பொழுதும் இத்தனித்தன்மை நிலவுகிறது. மரணத்தையும் அறிவையும் அணு எந்த சாதாரண சக்தியிடமிருந்து வந்தாலும் எதிர்க்கிறது. தனித்த அகந்தையின் உடலுருவம் அணு. தன் வாழ்வை அணு அப்படி கூறி இயற்கையில் மற்றவற்றுடன் இணையும் தத்துவத்தைப் பெறுகிறது. இயற்கையில் ஐக்கியத்தைப் போன்றே பிரிவினையும் வலுவான தத்துவம். உண்மையில் அதுவே தலையான தத்துவம், பிரிவினை ஐக்கியத்திற்குட்பட்ட தத்துவம். உட்பட்ட தத்துவங்கள் எப்பொழுதும் உட்பட்டிருக்க வேண்டும், அவசியத்தாலோ, கட்டாயத்தாலோ, உயர்வதாலோ, ஆசைப்பட்டோ அது உட்படுகிறது. இயற்கைக்கே உரிய இலட்சியங்களுண்டு. இயற்கை தன் சிருஷ்டிக்குப் பலமான அடிப்படையை நாடுகிறது. அதற்கு வித்தான நிலையான ரூபம் தேவை. அதனால் மற்றதனுடன் இணைந்து அழிவதை அணு எதிர்க்கும்படி இயற்கை நினைக்கிறது. இணைவதைச் சேர்வதன் மூலம் பூர்த்தி செய்ய இயற்கை அணுவைக் கட்டாயப்படுத்துகிறது. அணுவே முதற்றொகுதி. இதுவே இணைந்த தொகுப்புகளின் முதல் அடிப்படை.

பக்கம் 201, பாரா 4

வாழ்வின் இரண்டாம் நிலை பிராணன் எனப்படும் உயிர். வாழ்வு எளிதில் உயிரை எட்டும். எதிரான தத்துவம் இங்கு தலையாய வேலையைச் செய்கிறது. எனவே உயிரின் அகந்தையின் ஜடமான அடிப்படை கரைகிறது. அது கரையாமலிருக்க முடியாது. அதன் பகுதிகள் உடைந்து சிதறுகின்றன. ஒரு வாழ்வின் அம்சங்கள் அடுத்த வாழ்வின் அம்சங்களுடன் கலக்கின்றன. ஜட வாழ்வின் சாஸ்திரம் எழுகிறது. அதுவே ஜடத்தின் அஸ்திவார சாஸ்திரமாகும். அது தெளிவான வலுவுடையது. எதிர்காலத்தில் மனத்தின் சாஸ்திரம் எழும் வாய்ப்புண்டு. அதுவே ஆன்மீக வாழ்வின் சாஸ்திரம். இந்தத் தத்துவம் இயற்கையில் பெரும்பாலும் செயல்படுகிறது. உயர்ந்த சாஸ்திரம் எழுந்த பின்னரே அவை விளங்கும். மனிதன் மற்றவர் வாழ்வில் பங்கு கொள்கிறான். நம் உடலின் பகுதிகள் அதைச் செய்கின்றன. சூட்சும உயிரின் பகுதிகளும் அதைச் செய்கின்றன. பாசம், முயற்சி, திறமை, ஆசையின் சக்தி, வாழ்வின் சக்தி ஆகியவையும் அப்படிப்பட்டவையே. வாழ்விலும், மரணத்திற்குப் பின்னும் இப்படி நடக்கிறது. இதைப் பொதுவாகக் காணலாம். முன்னோர் இதை அறிந்து நமக்குச் சொல்கின்றனர். நமக்கு உடலும், உயிரும் உண்டு. மரணத்தில் இவையும் கரைந்து அழிகின்றன. அடுத்த உயிருள்ள உடல்களுக்கு ஆதரவாகின்றன அவை. நம் வாழ்நாளில் நம் வாழ்வின் சக்தி பிறருள் நுழைகின்றன. தொடர்ந்து அது நடைபெறுகிறது. நமக்கு மன வாழ்வுண்டு. சிந்திக்கும் உயிரினங்கட்கெல்லாம் மன வாழ்வுண்டு. அவர்களும் அப்படிப்பட்ட சட்டத்திற்குட்பட்டவரே. மனம் அதிர்ந்து மற்ற மனத்தைத் தாக்குவது எப்பொழுதும் நடப்பது. அது உடல் கரைந்து பரவுவதை நிலையாகச் செய்கின்றன. உடனே அவை மீண்டும் ரூபம் பெறுகின்றன. தொடர்ந்து பரிமாறவும் இணைந்து ஐக்கியம் பெறவும் அவை உதவுகின்றன. கலந்து பரவுவதும், ஐக்கியமாவதும் எந்த நேரமும் உண்டு. இது வாழ்வு வாழும் வகை, வாழ்வின் சட்டம்.

பக்கம் 202, பாரா 5

வாழ்வுக்கு அப்பொழுது இரு தத்துவங்கள் உள. அவற்றுள் ஒன்று தனிப்பட்ட அகந்தை வாழும் அவசியம். அது தனியாக வாழ வேண்டும். தன் தனித்தன்மையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அடுத்தது இயற்கை எழுப்பும் கட்டாயம். பிறருடன் இணையும் அவசியமது. ஜட உலகில் முந்தையதை அது வற்புறுத்தும். இயற்கை நிரந்தரமான தனித்த ரூபங்களை உற்பத்தி செய்ய வேண்டும். இயற்கை ஓயாமல் அசையும் சலன அலைகளாலானது. அது அனந்த ஐக்கியம் பெற்றது. தனித்த வாழ்வை ஏற்படுத்தி நிலைநிறுத்துவது இங்கு பிரச்சனை. அணு அளவில் தனி உருவம் நீடிக்கிறது. அதுவே அடிப்படை. மற்றவற்றுடன் இணைந்து அதைச் சாதிக்கிறது. சேர்ந்த தொகுப்புகள் தொடர்ந்து வாழும் நிலையது. மனத்திலும் உயிரிலும் தனித்தன்மை பெற அதுவே அடிப்படை. சீக்கிரம் இயற்கை போதுமான பலம் பெறுகிறது. இயற்கையின் தாழ்ந்த செயலுக்கு அது பாதுகாப்பு தரும். உடனே இயற்கை தன் முறையைத் தலைகீழே மாற்றிக் கொள்கிறது. தனி ரூபம் அழிகிறது. அழியும் ரூபங்களால் தொகுப்புகள் பலனடைகின்றன. இது முடிவல்ல. அவை இரண்டும் சுமுகமானால்தான் அதை எட்ட முடியும். தன் ஜீவியத்தில் உறுதியாக நிலைத்தும் மற்றவருடன் இணையுமானால், அது முடியும். காப்பாற்றும் சம நிலையைக் கலைக்காமல் அவனால் செய்ய முடியும். அது வாழ்வில் குறிக்கிடுவதுமில்லை. மேற்சொன்னவை விஷயத்தின் இரு கூறுகள். அவை மனம் எழுவதை அறிவிக்கின்றன. உயிருக்குத் தன்னை அறியும் மனமில்லை. அந்த நிலையில் நிலையான சமத்துவமில்லை, தற்காலிகமான சமநிலையிருக்கும். அது நிலையற்றது. அது உடலின் மரணத்தில் முடியும். தனி மனிதன் அத்துடன் அழிவான், அவன் அம்சங்கள் பிரபஞ்சத்தில் பரவும். ஜட வாழ்வுக்கு இயற்கையுண்டு. அது தனித்தன்மை உருவாவதைத் தடுக்கும். தன்னையறியும் மனம் போல் தொடர வலியுறுத்தினால்தான் தனித்தன்மை உருவாகும். தனித்தன்மை அணுக்களாலானது. அவை தொடர வலியுறுத்தும். மனத்தின் ஜீவனில் சைத்திய புருஷனுண்டு. அதுவே ஆதரவான மையம். அது இரகஸ்ய ஆத்மாவை வெளிப்படுத்த முயன்று வெளிப்படுத்தும். அதற்குக் கடந்தகாலத்தை நிகழ்காலத்துடன் இணைக்க முடியும். கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவை ஒரே நீரோட்டத்தின் பகுதிகள். அவற்றை இணைக்கும் திறனுக்குத் தொடரும் சக்தியுண்டு. மனிதன் இறந்தால் உருவம் அழிகிறது. எனவே நினைவு அழிகிறது. ஆனால் மனத்தின் ஜீவன் அழியவில்லை. மனத்தின் ஜீவன் நினைவு ஏற்படுத்திய இடைவெளியை நிரப்பும் பாலம், மரணம். மறு ஜென்மத்தால் அது ஏற்படுகிறது. இப்பொழுதும் மனத்தின் ஜீவன் கடந்தகால, எதிர்கால சுமையைத் தாங்குகிறது. இருப்பினும் அது குறையுடையது. அது தூய மனமில்லை, மனிதப் பிறப்புக்கு உரிய மனம். வாழ்வையும் உடலையும் கடந்த உணர்வு அது. அது தனி மனிதனுடைய கடந்த காலத்தை அறியும். தன்னை உற்பத்தி செய்தவருடைய வாழ்வை அறியும். அவன் அவர்களிலிருந்து வந்தவன். எதிர்கால வாழ்வின் மாறிய ரூபம் அவன். அவன் வாழ்வு அவற்றிலிருந்து எழுகிறது. கடந்த எதிர்கால கூட்டு வாழ்க்கையை அவன் அறிவான். அவன் வாழ்வு அவற்றூடே இழையாக ஓடுகிறது. இதை விஞ்ஞானம் அறியும். இதைப் பரம்பரை என்கிறார். மனத்தின் ஜீவனுக்குப் பின்னால் வளரும் ஆத்மாவுக்கு இது தெரியும். இதைத் தொடரும் பர்சனாலிட்டி என்கிறார்கள். மனத்தின் ஜீவன் ஆத்ம ஜீவியத்தை வெளிப்படுத்துகிறது. அதுவே தொடரும் மனிதனுடைய மையம். அதுவே தொடரும் கூட்டு வாழ்வின் மையம். அவனுக்குச் சுமுகமும் ஐக்கியமும் முடியும்.

பக்கம் 203, பாரா 7

இந்தப் புதிய தொடர்புக்குப் பவர் உண்டு. வளர்ச்சிக்குரிய தத்துவமாக அது பிறகு மாறும். இது வாழ்வின் மூன்றாம் நிலை. இதற்கு ஒரு இரகஸ்ய தத்துவம் உண்டு. இந்த வகை பரிணாமத்தால் எழும் பொழுது இது சிகரமாகும். இது அன்புடன் தொடர்பு கொள்வதால் வருவது. தனித்தன்மையை முயன்று விழிப்பாக காப்பாற்ற வேண்டும். தேவையும் பரிமாறலும் நாம் அறிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். அது மற்றவர்க்கு அர்ப்பணம் செய்யவும், அவரோடு இணையவும் உதவும். அதன்பின் தத்துவம் செயல்பட இது இன்றியமையாதது. இரண்டில் ஒன்றில்லையானால், அன்பு செயல்படாது. எது நடந்தாலும் இது உண்மை. மனத்தின் ஜீவனுக்கு ஒரு உந்துதலுண்டு. அது ஓர் எண்ணம். வாழ்வின் மூன்றாம் நிலையைக் கடந்த வளர்ச்சியிது. தன்னை முழுவதும் அழித்துக் கொள்வதால் நிறைவுண்டு. அழிவு என்று அதைத் தவறாக நினைக்கலாம். இது மனத்தின் ஜீவனின் எண்ணம். வாழ்வு ஒரு போராட்டம். நாம் தொடர்ந்து வளரும் நிபந்தனையது. அது வாழ்க்கைப் போராட்டத்தைக் கடக்க உதவும். பரஸ்பரம் விழுங்குவதால் அது ஏற்படும். தகுதியுள்ளது பிழைக்கும் என்பதே இலட்சியம். மூன்றாம் நிலை அத்தகையது. பரஸ்பர உதவியால் மேலும் மேலும் போராட்டம் நிகழ்கிறது. பரஸ்பரம் ஒத்துப் போவதால் சுயமாக நிறைவு அடையும் வழியிது. அது பரிமாறுதலையும், இணைவதையும் பயன்படுத்திக் கொள்கிறது. ஜீவனை வலியுறுத்துவது வாழ்வு. அகந்தை வளர்ந்து வாழ வாழ்வு உதவும். ஆனால் அது பிற ஜீவன்கள் தேவைப்பட்ட ஜீவன். வாழ்வு பிற அகந்தைகளை நாடும் அகந்தை. அவற்றையும் தன் வாழ்வில் ஏற்றுக் கொள்ளும். பிறருடன் இணைந்து வாழும் சட்டம் தனி மனிதர்களால் உருவாக்கப்படுகிறது. அதைத் தொகுப்புகளும் செய்யும். பொதுவான உதவியின் அன்பிற்குரிய சட்டமது. பிரியம், நட்பு, ஐக்கியம், இனிமையுடைய சட்டமிது. பிழைப்பதையும், பரஸ்பரம் அர்ப்பணிப்பதையும் அவை வெற்றிகரமாக சுமுகமாகச் செய்கின்றன. தனி மனிதன் தொகுப்பை வளர்ப்பதும், தொகுப்பு தனி மனிதனை வளர்ப்பதும் சட்டம். அத்துடன் மனிதன் மனிதனை வளர்ப்பதும், தொகுப்பு தொகுப்பை வளர்ப்பதும் சட்டம். பரஸ்பரம் அர்ப்பணிப்பதாலும், பரிமாறுதலாலும் அது ஏற்படுகிறது. பரிணாமத்தின் மூன்றாம் நிலையிது. அது மிகப் பொருந்தும்.

பக்கம் 204, பாரா 8

மனத்தின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் வளர்கிறது. மேற்சொன்ன முக்கியத்துவம் இந்த வளரும் முக்கியத்திற்கு அறிகுறி. மனம் வாழ்வைத் தன் சட்டத்தால் கட்டுப்படுத்துகிறது. ஜட வாழ்வில் மனம் அது போல் நாளுக்கு நாள் அதிகமாகச் செயல்படுகிறது. மனம் அதிக சூட்சுமமானது. கிரகிக்க மனம் விழுங்க வேண்டும் என்ற அவசியமில்லை. மனம் வளர வேண்டும், முன்னேற வேண்டும் என்ற அவசியமில்லை. எவ்வளவு மனம் கொடுக்கிறதோ அவ்வளவு பெறும், பெறுவது வளரும். பிறருடன் அதிகமாக இணையும், பிறரை அதிகமாகத் தன்னுடன் இணைத்துக் கொள்ளும். இவ்விதம் தன் ஜீவன் வளரும் அளவை அதிகப்படுத்திக் கொள்ளும். ஜட வாழ்வு அதிகமாகக் கொடுத்தால் சோர்ந்துவிடும். அதிகமாக விழுங்குவது ஜட வாழ்வுக்கு அழிவு தரும். மனம் ஜடத்தைப் பாராட்டினால் அதே போல் தளரும். எந்த அளவுக்குச் சோர்வு என்பது எந்த அளவுக்கு ஜடத்தை நாடுவது என்பதைப் பொறுத்தது. மனம் தன் சட்டத்தைத் தானே வகுத்துக் கொள்ளும். அந்த அளவிலே மனம் தன் வரையறையைக் கடக்கும். மனம் தன் ஜடமான வரையறையை எந்த அளவுக்குக் கடக்கிறதோ அந்த அளவில் அது கொடுப்பதும், பெறுவதும் ஒன்றாகும். சச்சிதானந்த சிருஷ்டிக்குத் தெய்வீகச் சட்டம் உண்டு. பிரிவினையில் ஐக்கியம் அது. அந்த ஐக்கியம் தன்னையறிந்தது. மனம் தன் சட்டமான வளரும் கதியை நாடுகிறது.

பக்கம் 204, பாரா 9

பசியும், ஆசையும் மனம் தன்னையறியும் முதல் அறிகுறிகள். இது இரண்டாம் நிலை. வாழ்வில் ஆரம்ப முழு நிலையில் இது இரண்டாம் கட்டம். இதிலிருந்து மூன்றாம் கட்டம் எழுகிறது. இது ஒத்துழைக்கும் தத்துவத்தால் உற்பத்தியாகிறது. அது அன்பு வளர்வதால் ஏற்படுகிறது. இது ஆசையின் சட்டத்தை அழிக்காது. மாறாக, இது அன்பாகத் திருவுருமாறி தன்னைப் பூர்த்தி செய்து கொள்கிறது. அன்புக்கொரு சுபாவமுண்டு. தன்னைப் பிறருக்கு அர்ப்பணம் செய்வது அது. மேலும் பதிலாக அன்பு பிறரை ஏற்க விரும்புகிறது. ஜீவனுக்கும் ஜீவனுக்கும் இடையே ஏற்படும் பேரம் அது. ஜட வாழ்வுக்கு அர்ப்பணம் தோன்றுவதில்லை. அது பெற மட்டும் விழைகிறது. ஜட வாழ்வைக் கொடுக்கக் கட்டாயம் எழுகிறது. அது பெற மட்டும் விழையும் வாழ்வு. அதனால் கொடுக்க முடியாது. எனவே அது வறண்டு, வாடி அழிகிறது. வாழ்வின் முழுமையில் இது சாத்தியமா? இங்கு இவ்வுலகில் அது முடியுமா? உண்மையில் அதற்கு விருப்பமில்லை, அது கட்டாயப்படுத்தப்படுகிறது. அது இயற்கையின் ஆழ்மன உந்துதல்களைப் பணிகிறது. அது விரும்பி அதை ஏற்கவில்லை. அந்நிலையில் அன்பு குறுக்கிடுகிறது. அன்பின் அர்ப்பணம் ஆரம்பத்தில் ஜீவனற்றதாகும். அந்தச் சுபாவம் நீடிக்கும். இது அணுவின் ஆழ்மன உறுதி. அன்பே முதலில் பசியின் சட்டத்தைப் பணிகிறது. பெறப் பிரியப்படுகிறது. பிறரிடமிருந்து கட்டாயப்படுத்திப் பெறுகிறது. அடுத்தவர்க்கு அன்பு சரணடைந்து அர்ப்பணம் செய்வதில்லை, பெறுவதின் நிபந்தனையாக அன்பு ஆரம்பத்தில் கொடுக்க சம்மதிக்கிறது. தான் விரும்பும் பொருளைப் பெற அது தரும் விலை. இந்நிலையில் அன்பு இன்னமும் தன் சுபாவத்தை அடையவில்லை. அது உண்மையான சட்டம் பெறுவதும் தருவதும் சமமாக இருப்பது. அந்நிலையில் பெறும் இன்பமும், தரும் இன்பமும் சமமாக இருக்கும், முடிவில் கொடுக்கும் இன்பம் பெறுவதைவிட அதிகமாகும். பிறகு அந்நிலையையும் அது கடக்கும். சைத்திய புருஷனின் தழல் எழுந்து செயல்படும். அங்கு முழு ஐக்கியம் பெற்று நிறைவு பெறும். அதுவே பெரும் சத்தியத்தை அடைவது. இதுவரை புறம்பானது, இனி தன் பெரிய அகமாக, இனிமையானதாக ஆகும். இது தனித்தன்மையைவிடப் பெரியது. அன்பின் சட்டத்திற்கு வாழ்வின் ஆரம்பம் உண்டு. இது ஒரு உந்துதல். பிறரில் தன்னையறிந்து பூர்த்தி செய்யும் உந்துதல் அது. இதைப் பிறர் பூர்த்தி செய்கின்றனர். நிறைவால் இது நிறைவுபடுகிறது. அடுத்தவரை ஆண்டு தன்னை ஆட்கொள்ள அனுமதிக்கிறது. தன்னைப் பிறர் ஆட்கொள்ளாமல் தான் பிறரை ஆட்கொள்ள முடியாது.

பக்கம் 205, பாரா 10

வாழ்வுக்கு முதல் நிலையுண்டு. ஜடமான அணு வாழ்வு அதன் திறன். அது தன்னை ஆட்கொண்ட நிலை. அது ஜட வாழ்வுக்குப் பணிந்தது. ஜட வாழ்வு புறவாழ்வுக்குப் பணிந்தது. இரண்டாம் நிலை எழுகிறது. அது தன் அளவை அறியும். அது அகவாழ்வு, புறவாழ்வு இரண்டையும் ஆட்கொள்ள விரும்புகிறது. அவற்றைத் தன் ஆதிக்கத்திற்குள் கொணர முயல்கிறது. இது இரண்டாம் நிலை. மூன்றாம் நிலை இங்கிருந்து ஆரம்பிக்கிறது. ஆரம்ப காலத்து அம்சங்களை அது திருவுருமாற்றுகிறது. அது சுமுகமான நிறைவு. அந்நிலை முன்னிலை அம்சங்களை மீண்டும் வெளிப்படுத்துகின்றன. அவை எதிராகக் காணப்படுகின்றன. புற வாழ்வு பெரு வாழ்வாக அறியப்படுகிறது. தொடர்பு கொள்வதாலும், அன்பாலும் அது எழுகிறது. அது சட்டத்திற்கு உட்பட விரும்புகிறது. அது தேவை. தொகுப்பின் வாழ்வு வளர்வதால் ஏற்படும் உந்துதல் அதன் வழிப் பூர்த்தியாகிறது. இந்த உந்துதல் தனி மனிதனைக் கிரகித்துக் கொள்ள முயல்கிறது. வேறொரு ஆதிக்கமுண்டு, தனி மனிதன் பிறர் வாழ்வை ஆட்கொள்வது, அவனுடையது எனக் கொள்ளும் அனைத்தையும் அது அவனுக்குக் கொடுக்கிறது. தனி மனித ஆதிக்கத்திற்கு அது எதிரான உணர்வு. அது பரஸ்பரம் உள்ள தொடர்பு. தனி மனிதனும் அவன் வாழும் உலகத்திடையேயுள்ளது. இரு மனிதரிடையே அதை ஸ்தாபிக்கிறார்கள். இரு தொகுப்பிடையேயும் அது உண்டு. அதை வெளிப்படுத்தவோ, முழுமைப்படுத்தவோ முடியாது. தனி மனிதனுக்கும் தொகுதிக்குமிடையே அதே உறவை ஏற்படுத்தாதவரை அது நிலையாகாது. வாழ்வுக்கும் ஜடத்திற்குமிடையே உள்ள பிணக்கே அடிப்படை. மனிதன் சுமுகத்தை நாடுகிறான். அவன் சுதந்தரத்தையும் தன்னை வற்புறுத்துவதையும் நாடுகிறான். இவற்றால் அவன் தன்னை ஆட்கொள்கிறான். எதிர்ப்பிடையே சகஜ நிலையை உண்டு பண்ணுகிறான். தனி மனிதன், தொகுப்பு எதிரானது. அன்பும் தொடர்பும் கருவிகள். நட்பும் உறவும் அதை சாதிக்கின்றன. தொகுப்பிலுள்ள மற்றவர்க்கு இதன் மூலம் மனிதன் தன் அர்ப்பணத்தைச் செலுத்துகிறான். இவை முன்கூட்டி நிர்ணயிக்கப்பட்டவை. இது இயற்கையின் ஆதியிலிருந்து எழுகிறது. இவை வாழ்வின் பிரச்சனை. மனத்தின் உயர்ந்த தத்துவம் தீர்வு காண்கிறது. மனம் மட்டுமே சுமுகத்திற்கு வழி செய்யும். உண்மையில் சுமுகம் மனத்தைக் கடந்து சக்தியிடம் உள்ளது.

பக்கம் 206, பாரா 11

மனம் பிரம்மத்தை உலகில் வெளிப்படுத்தும் அம்சம். ரூபம் உலகுக்கு வரப் பயன்படும் கருவி மனம். உலகுக்கு வந்த மனம் தனி மனிதனில் ரூபம் உறைய உதவுகிறது. இரண்டாவதாக மனம் வாழ்வு சத்தியத்தை நாடி உயரும் கருவி. ரூபம் சத்தியத்தை உடலாக வெளிப்படுத்துகிறது. மனிதனின் தனித்தன்மை அதன் பிரதிநிதி. எனவே இலக்கு மனத்தைக் கடந்த தத்துவத்தில் உறைகிறது. அதுவே பாதையின் முடிவு. நமது ஆராய்ச்சியின் ஆரம்பம் அதை நமக்குணர்த்திற்று. அன்பில் உறைவது உறவு. பரிமாறுதலும் சரிசெய்வதும் உள்ளன. மனத்திற்கும் வாழ்விற்கும் உரிய சட்டங்களுண்டு. பரிபூரண தீர்வை இவைகளெல்லாம் எட்ட முடியாது. உணர்ச்சியின் சட்டமும் உதவாது. அது வாழ்வின் நாலாம் நிலையிலிருந்து எழ வேண்டும். இங்கு ஜீவாத்மாவின் காலம் கடந்த ஐக்கியம் சித்திக்கும். இங்கு வாழ்வுக்குரிய எல்லா அஸ்திவாரங்களும் தெளிவாக இடப்படுகின்றன. உடலின் பகுதிகளில் அவை உறையவில்லை. பசியின் வேகத்தில், உயிரின் பாசத்திலும் அவையில்லை. மனத்தின் நிறைவற்ற சுமுகத் தொகுப்புகளிலும் அவையில்லை. இவை அனைத்தும் சேர்ந்து அதை உற்பத்தி செய்ய முடியாது. ஆத்மாவின் ஐக்கியத்திலும் சுதந்தரத்திலும் உறைவது அது.

முற்றும்.

*******



book | by Dr. Radut