Skip to Content

2. ஜே. கிருஷ்ணமூர்த்தி JK

ஜே. கிருஷ்ணமூர்த்தி JK

13 பிள்ளைகள் பெற்ற தகப்பனாருக்கு 10வது பிள்ளையாக இவர் ஆந்திராவில் பிறந்தார். அன்னிபெசண்ட் கனவில் இது தெரிந்து அவர் வந்து இவரையும், இவருக்கு நேர் மூத்தவரையும் அழைத்து வந்து இங்கிலாந்தில் படிக்க வைத்தார். படிப்பு முடிந்து தியசாபிகல் சொஸைட்டி வந்து சேர்ந்ததும் இவர் World Teacher ஜகத்குரு என காண்பவர் அறிந்தனர். உலகெங்குமிருந்து இவருக்கு பணம் பல திசைகளினின்றும் வந்தது. 1930இல் அப்படி இவர் பெற்றது 6 கோடி ரூபாய். இவர் பணத்தை ஏற்கவில்லை. திருப்பிக் கொடுத்துவிட்டார். அன்றிலிருந்து 95 வயது வரை உலகைச் சுற்றி வந்து சொற்பொழிவாற்றினார்.

  • இவர் எந்த மதத்தையும் சார்ந்தவரில்லை. ஆன்மீகவாதி.
    ஆன்மீக சக்தியுள்ள இடத்தை நோக்கிச் செல்வம் வரும்.

நாமெல்லாம் எளிய அன்பர்கள். பெரிய ஆத்மாக்கள் பெற்றதை நாம் பெற முடியுமா என்பது அன்பர்கள் ஐயம். பாண்டி மகாராஜா பெரியவர். நாம் எளியவர். ஆனால் இன்றைய விஷயங்கள் - போன் பேசுவது, காரில் போவது - அன்றைய மகாராஜாக்களுக்கில்லாத வசதி இன்று சாமானியனுக்குண்டு. அன்றிருந்த ரிஷிகள் பெறாத ஆன்மீக பாக்கியத்தை அன்னை நமக்களிக்கிறார். அன்று எந்த மகாராஜாவும் கர்மத்திற்குக் கட்டுப்பட்டவர். இன்று எந்த அன்பனையும் கர்மம் பாதிக்காது.

  • நாம் அன்னையை மட்டும் பாராட்டினால் ஆன்மீகம் பலிக்கும். அப்படிப் பலிக்கும்பொழுது JK வாழ்வில் நடந்தவை அன்பர் வாழ்வில் நடக்கும்.
  • அன்னையை ஏற்பது வேறு, அன்னையை மட்டும் ஏற்பது வேறு.
  • அன்னையை ஏற்பது அருள் பெறுவது. அன்னையை மட்டும் ஏற்பது அருளுக்கு உற்பத்தி ஸ்தானமாக இருப்பது.

******



book | by Dr. Radut