Skip to Content

1. குரு - சிஷ்யன்

குரு - சிஷ்யன்

காருகுரிச்சி அருணாசலம் ராஜரத்தினம் பிள்ளை சிஷ்யன். குரு மதுரைக்கு வந்திருக்கிறார்என செய்தி வந்தால், காருகுரிச்சி எழுந்து நிற்பார். முதலாளியிடம் போனில் பேசும் மானேஜர் எழுந்து நின்று பேசுபவரும் உண்டு. இது மரியாதையின் கடைசி கட்டம்.

நாம் ஏற்கும் கருத்தை மனம் ஏற்கிறது - அது நம்பிக்கை தரும், தெளிவு.

அதையே உணர்ச்சி ஏற்றால் பக்தி ஏற்படும் - மரியாதை எழும்.

அதை உயிரும் ஏற்றால் நம்பிக்கை ஆழ்ந்து ஜீவனையும் உடலையும் தொடும்.

அந்த நிலையில் உடல் தன்னையறியாமல் மரியாதை செலுத்தும்.

இது கற்பு நெறியின் உச்சி; சிகரம்.

சத்தியஜீவியம் மேலுலகிலிருந்து இறங்கி வந்தால் முதலில் நம் மனம் ஏற்கும்.

அப்பொழுது தலையுள் பொன்னொளி தியானத்தில் தெரியும்.

பொன்னொளி பகவான் சமாதியானபின் அவர் உடலில் இறங்கியது. அது நடக்க வேண்டும்என்று பகவான் தன் பூத உடலை நீத்தார். தியானத்தில் வெள்ளொளி தெரிவதுண்டு. பொன்னொளியும் தெரியும்.

பொன்னொளி உடலுள் நுழைந்தால் அது கிரீம் கலராக மாறும்.

காருகுரிச்சியின் சிஷ்ய பாவம் பூரண யோகத்தில் சரணாகதி பலிக்க உதவும்.

நாதஸ்வர குரு T.N.ராஜரத்தினம் பிள்ளை ஆன்மீகக் குருவில்லை. ஆன்மீகக் குரு தருவது ஞான ஒளி. வெண்மையாக இருக்கும்.

பொன்னொளி சத்தியஜீவிய ஒளி.

அதுவும் உடல்வரை பாயுமானால் அவருக்குச் சரணாகதி பலித்தது எனப் பொருள்.

அவர் நினைத்தது (at one level) நினைத்தவுடனே நடப்பதைக் காணலாம்.

******



book | by Dr. Radut