Skip to Content

06. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

காஷ்மீரில் 1947-இல் பத்தானியர் ஆக்ரமித்தனர்

கஜினி முகம்மது 17 முறை படையெடுத்தது இந்த இடத்திலிருந்து தான். இரண்டு படையெடுப்பு: 1) முஸ்லீம் 800 ஆண்டு 2) பிரிட்டிஷ் 400 ஆண்டு. இரண்டாவது முதலில் விலகிற்று. முதல் படையெடுப்பு நம் நாட்டு மக்களை அவர்கள் மதத்தைத் தழுவும்படிச் செய்தனர்.

1000 ஆண்டிற்குமுன் பட்டாணியர் கஜனி தலைமையில் 17 முறை இந்தியா மீது படையெடுத்தனர். 1000 ஆண்டு ஆனபின்னும் அந்தப் பழக்கம் 1947-இல் மீண்டும் வந்தது. இது தவிர்க்க முடியாதது. அன்னை சக்தியே இதைத் தவிர்க்கும். முஸ்லீம் ஆண்டபொழுது நம்மை மதம் மாற்றினர். தீண்டாதவர் முஸ்லீம் மதத்தில் தீண்டாமை இல்லாததால் விரும்பிச் சேர்ந்தனர். அதுவே இன்று பாக்கிஸ்தானாயிற்று. நாட்டில் ஜாதி, பேதம், மனத்தில் தீண்டாமை ஒழியாதவரை பாக்கிஸ்தான் உயிருடனிருக்கும்.

 • முஸ்லீம் அரசர் நம்மைக் கட்டுப்படுத்தியதைவிட நம் ஹரிஜன்கள் விரும்பி முஸ்லீமாக மாறினது அதிகம்.

நமது வாழ்வில் அதே அம்சம் இன்று இருக்கும். ஒவ்வோர் இந்தியனுடைய வாழ்விலும் அது இருக்கும். அதை நாம் கண்டு களைந்தால் நாடு ஐக்கியமாகும் கருவியாவோம்.

பணக்காரப் பையனும், ஏழைப்பையனும் சந்தித்தனர். "நாங்கள் வசதியாக இருப்பதால் எங்கள் உறவினர் பொறாமைப் படுகிறார்கள்'' என்று பணக்காரப் பையன் சொன்னதைக் கேட்டு ஏழைப் பையன் சிரித்து விட்டான். அவன் இன்று ஏழையாக இருந்தாலும் 50 ஆண்டுகளுக்குமுன் அவர்கள் வசதியாக இருந்தார்கள். (இன்று பணக்காரப் பையன் இந்த ஏழை அன்று பெற்றிருந்த வசதியைப் போல் 15 மடங்கு வசதியாக இருக்கிறான்). அதனால் அவனுக்கு அவர்கள் பணக்காரர்கள். தற்சமயம் வசதியானவர்கள் ஏழைகள் என்பது அபிப்பிராயம். அதனால் அவன் சிரிக்கிறான். இது தாழ்வு மனப்பான்மை. உயர்ந்த நினைப்பு.

ஏழைக்கு அவர்கள் பணக்காரர், மற்றவர் ஏழை என்பது நினைப்பு.
பணத்தை சம்பாதிப்பவன் புதுப்பணக்காரன்.
அதனால் அவன் மட்டம், ஏழை.
இதுபோன்று நம் மனம் எதைக் கருதுகிறது?
அது புரிவது முக்கியம்.
நம் திறமை, நல்ல குணம் நமக்கு உயர்வு.
அது பேரருள் பெரியதாகச் செயல்படத் தடை.
பொதுவாக நாம் இதை அறிய முடிவதில்லை. அவர்கட்குத் தாழ்வு மனப்பான்மை.
நமக்கு என்ன (complex) மனப்பான்மை?
ஜாமீன் கொடுத்த பத்திரம் அன்பரிடமிருக்கிறது.
கொடுத்தவர் பெற்றுக்கொண்டால் உள்ளதும் போகும்.
இந்த அபிப்பிராயம் தெரிந்து, வேண்டாம் என்று கூறினார் கொடுத்தவர்.
கேட்டால் கொடுத்துவிடலாம்.
அதுவும் அன்பரை ஓரளவு பாதிக்கும்.
பெறுபவர்களை அழித்து விடும்.

(அன்பரிடம் அடுத்தவர் பத்திரம் சந்தர்ப்பவசமாக ஜாமீனாக வந்தது. கொடுத்தவர் நிலம் ரூ.10,000யிலிருந்து ரூ 50,000 (ஏக்கர்)க்கு உயர்ந்தவுடன் பத்திரத்தைக் கேட்டார். அன்பர் கொடுக்க முயன்று அத்துடன் அன்பர் தொடர்பு அறுந்துவிடும்என்றும் கூறினார் - அன்பர் பெற்ற வேலை முதல் 2 ஆண்டில் முடிந்து விட்டது - இப்பொழுது அந்நிலங்கள் ஏக்கர் 1 கோடியாக உயர்ந்துள்ளன. இதுவே அன்னைச் சூழலின் சக்தி).

திருடனுக்கு அருள் வழங்க காணிக்கையைத் திருட வேண்டும்.

 • கஷ்டம்
  • கஷ்டம் கடந்த காலத்தில் வந்ததற்கு நாம் கஷ்டப்படக் கூடாது. அது அவசியமானது என்ற ஞானம், கஷ்டம் போனபிறகு வரும் என்கிறார் பகவான்.
   • அந்த ஞானம் வந்தபின், அது கஷ்டம் வருமுன் இருந்திருந்தால் அக்கஷ்டம் வந்திருக்காதுஎனவும் தத்துவம் கூறுகிறது.
   • இம்முரண்பாட்டை எப்படி உடன்பாடாக்குவது? என்பது கேள்வி.
   பொதுவாக அந்த ஞானம் வர, பல பிறவிகள் எடுக்க வேண்டும். அந்த ஞானம் தேவை என்ற ஞானம், அதை இன்றே அளித்து விடும்.
  • நடப்பது நடக்கட்டும் நாம் மாற்ற முடியாது என்பதும்,
  • மனம் மாறினால் அனைத்தும் அதே நேரம் மாறும் என்ற ஞானமும் இணையும் இடம் - நம்மையறியாமல் அன்னையில் லயிப்பது. லயித்தால் மாறும்.

   மாறியது நீடிக்க லயம் விழிப்பில் நிலைக்க வேண்டும்.
   அதாவது நெடிய நிதானம் உள்ளிருந்து எழ வேண்டும்.
   எரிச்சல் படக்கூடாதுஎன்பது மட்டுமே முக்கியக் கட்டுப்பாடு.
   அதைவிட முக்கியமானது நாமே விரும்பி ஒரு காரியத்தைச் செய்வது. அப்படிச் செய்ய முனைவதை நிறுத்துபவருக்கு சர்வ ஆரம்பப் பரித்தியாகி எனப் பெயர்.
   பணம் சம்பாதிப்பது திறமை - நல்லது, கெட்டது இரண்டும் திறமை.
   குணம் சம்பாதிப்பது பொறுமை - பொறுக்க முடியாத பொறுமை.
   பணத்தைக் கொடுப்பது தியாகம்.
   குணத்தை விடுவது சாதனை.
   விடமுடியாதவர்க்கு (immediate-boss) முதலாளியை அவரையே அன்னையாகக் கருதிப் பணிவது.
   முதலாளிக்குப் (Boss) பணிவதைவிட அவரிடமுள்ள அன்னைக்குப் பணிவது மேல்.
   நம் மனத்திலுள்ள அன்னை அவரிடமுள்ள அன்னையை அடைவது பணிவை உறவாக்கும்.
   உள்ளம் உறவாடுவதை உயிர் உறவாக மாற்றலாம்.
   உயிரைக் கடந்த ஆத்ம உறவாக்கலாம்.
   அன்னை உறவு அதனினும் சிறந்தது.
   சிறப்பைத் தேடாத மனம் சிறப்பைவிட உயர்ந்தது.
   நிதானம் எதையும் கருதாது.
   கருத்து அழிவது நிதானம் நிலைப்பது.

ஆத்மா அறிவுறுத்தும் சகுனம்

 • பார்க்கும் டெலிவிஷன், படிக்கும் கதை, கேட்கும் சொல், மனத்தில் எழும் எண்ணம் அனைத்தும் ஆத்மா அறிவுறுத்தும் சகுனம்.
  • சரணாகதியையும் (surrender) “நாம்” செய்யவேண்டும் என்ற அளவிலும் "நாம்" வாராமலிருப்பது நல்லது.
   "நினைவு” உள்ளவரை "நாம்” அழியாது.
   அந்த நினைவுக்குப்பின் வயிற்றுக்கு இல்லாதவன் வசதியானவரைப் பார்த்துச் சிரிக்கும் சிரிப்பிருக்கும்.
   நாம் சிரிக்காவிட்டால், சிரிக்கும் திறமையிருக்கும்.
   அதைக் காண்பது (sincerity) உண்மை.
   "சத்தியம் என்றால் என்ன?'' என்ற கட்டுரை சத்தியத்தின் தத்துவத்தைக் கூறும்.
   கேலியாகச் சிரிக்கும் ஏழைப் பையனிடம் அன்னையைப் பற்றிப் பேசிப் பலன் பெறலாம் என்ற நினைவு ஊழலான அரசியல்வாதியை ஊழலை ஒழிக்கப் பயன்படுத்தலாம் என்ற நினைவு.
   கேலியாகக் குத்தலாகச் சிரிக்கும் ஏழைப்பையனை மாற்ற முயல்வது சிறுபிள்ளைத்தனம் (childishness) என்கிறார் அன்னை.
   அதை எதிர்பார்க்காமல், அவன் மாறும் அளவுக்கு நம்மால் மாற முடியுமா என முயன்றால் முடிவான பலன் நமக்குக் கிடைக்கும்.
   எதைச் செய்வது என்பது (choice) தட்டுப்படாதது போலிருக்கும்.
   சூட்சுமத்திலிருப்பதால் (subtle plane) தட்டுப்படாது.
   தட்டுப்பட்டால் அன்னை பிடிபடுவார்.
   இது உயர்ந்த பரிசோதனை.
   இது பலித்தால் பல ஆண்டு சிரிப்பவனே மாறி நடப்பான்.
   அது நிலையாக இருப்பது அருளன்று; பேரருள்.
   திருட்டு மனிதர் திருட்டைவிட்டு வேலை செய்ய ஆரம்பித்தது போன்றது.
   திருடு தொடர்ந்தால் பொய் எழும்.
   பொய் திருட்டைவிடத் தவறு. பொய் சொல்வது ஒன்று.
   பொய்யைக் கொள்கையாகச் சொல்வது வேறு.
   அதையே வாழும் வழியாகக் கொள்வது (organised falsehood) பொய்யால் வாழ்வது.
   அது பொய்க்கு உயிரளித்து, வாழ்வளிக்கும்.
   அப்படிப்பட்டவர் தவறாமல் ஜெயிலுக்குப் போவார்கள்.
   மேல்நாட்டார் பொய் சொல்ல மாட்டார்கள்.
   அவர்கள் அன்னைக்குப் பொய்யாக இருந்தால், சிரிக்கும் ஏழைப் பையன் போலிருப்பார்கள்.
   அவர்களை எவரும் ஒன்றும் செய்ய முடியாது.
   நாம் வேறல்லர். அதை அறிவது அடக்கம்.
   நமக்கு அந்த அடக்கமிருக்குமா?

வேலை

 • வேலை என்று ஆரம்பிக்குமுன் சூழல் கீழிறங்கினால் முதலில் அதை உயர்த்த வேண்டும்.
  இன்று 11 மணிக்கு ஒரு நண்பன் வருகிறான்.
  இரவு கனவு - விசேஷமில்லை - உடல் அடித்துப் போட்டது போலாயிற்று.
  இப்படியிருந்தால் முதலில் சூழல் மேலே வரவேண்டும்.
  அதை எப்படிச் செய்வது?
  முதற்காரியமாக அதற்காக வருத்தப் படக்கூடாது.
  எக்காரணத்திற்காக வருத்தப்பட்டாலும், எல்லாக் காரியங்களும் கெடும்.
  குறைப்பட்டாலும் அதுவே பலன்.
  எக்காரணத்தை முன்னிட்டும் வருத்தப்படக் கூடாது, குறைப்படக் கூடாது என்பது பெரிய சித்தி - சித்தி பெற்றவர்க்கே அது கஷ்டம்.
  சித்தி பெற்றவர் பெறாததை, பெற முடியாததை அன்னை அன்பர்கட்கு அருள் பாலிக்கிறார்.
  அன்னையை அழைத்தால் சூழல் மாறினால் நாம் சரியாக இருப்பதாக அர்த்தம்.
  வருத்தத்தை நாடுவது மேல்மனம்.
  வருத்தப்படக்கூடாதுஎன அறிவது உள்மனம்.
  சந்தோஷப்பட வேண்டும் என அறிவது அடிமனம் - ஜீவியம் Consciousness.
  சந்தோஷப்படுவது - அடிமனம் - பொருள் Substance.
  அப்படி, சூழல் மாறினால் ஜெயித்து விட்டோம்என சந்தோஷப்படுகிறோம்.
  மாறாவிட்டால் தோற்றோம்என வருத்தப்படுகிறோம்.
  சந்தோஷப்படுவதும், வருத்தப்படுவதும் நாம்.
  நாமில்லாமல், சந்தோஷம் தானே உற்பத்தியாவது அன்னை.

  (It is causeless joy) இனம் புரியாத இன்பம் இகவாழ்வில் இறைவன்.
  இதைத்தான் திட்டினால் தித்திக்கும் என்பது.
  சண்டைஎன்பது நெருக்கம், அன்பாக நெருங்க முடியாதவர் நெருக்கத்தை விரும்பினால் சண்டை போடுவர்.
  ஐக்கியத்தை அன்பாகப் பெறுவது உயர்வு.
  ஐக்கியத்தை மட்டமாகத் தேடுவது அடி, உதை.
  உயர்வோ, மட்டமோ, மனிதன் தேடுவது ஐக்கியம்.
  வாழ்வும் ஐக்கியத்தை இரு வகைகளிலும் நாடுகிறது.
  அதிர்ஷ்டம் வாழ்வின் நல்ல ஐக்கியம்.
  தரித்திரம் வாழ்வுடன் தவறான ஐக்கியம்.
  மனிதன் மனிதனுடன் நெருங்கி ஐக்கியமாக முனைகிறான்.
  அதைச் செய்ய ஆரம்பிக்கும்பொழுது அவனை சந்தேகப்படுகிறான், அவனுடன் சண்டை போடுகிறான். அப்படி ஆரம்பித்து நெடுநாள் கழித்து அவனுடன் ஐக்கியமாகி நட்புக்கொண்டாடுகிறான்.
  • இறைவனுடன் அதுபோன்ற ஐக்கியம் சமாதி.
  • மேல்மனம், உள்மனம், அடிமனம், சைத்தியபுருஷன் என்பவை 4 நிலைகள்.
   • மேல்மனம் நமக்குரியது.
   • உள்மனம் ரிஷிக்குரியது.
   • அடிமனம் பிருந்தாவனத்தில் கிருஷ்ணலீலை செய்தது. சைத்தியபுருஷன், கிருஷ்ணாவதாரத்தின் அடுத்த உயர்ந்த கட்டம்.
    • இந்த 4 நிலைகளையும் ஒவ்வொன்றையும் இரண்டாகப் பிரிக்கலாம்.

     மேலேயுள்ளது சிறியது - Consciousness.
     கீழேயுள்ளது பெரியது - Substance.

   இந்த 8 நிலைகட்கும் உரிய உதாரணம் பூரணயோக ஞானம்.
   அவை நம் வாழ்விலிருந்து ஏற்பட்டால், அதிகமாகப் புரியும், பலிக்கும். ஒரே நிகழ்ச்சியில் இந்த 8 உதாரணங்களும் நம் வாழ்வில் நடந்ததானால் அது பூரண ஞானம்.
   ஒவ்வொன்றும் தலைகீழாக மாறும் - Reversal.
   அந்த ஞானத்தை ஏற்பது சித்தி.

உதாரணங்கள்:-

 1. முரண்பாடு உடன்பாடாவது மேல்மனத்தின் மேற்பகுதி - Consciousness. எந்தப் பிள்ளை எதையும் செய்ய மறுக்கிறானோ, அவனே பிறகு அதிகம் சம்பாதிப்பான். அது நடக்க நாம் அவனை வெறுக்கக் கூடாது. பொறுத்திருக்க வேண்டும். பொறுமை 10 வருஷத்திலோ 10 நாளிலோ பூர்த்தியாகும். பொறுமை பூர்த்தியான க்ஷணம் பிள்ளை மாறுவான்.
 2. பெருநஷ்டம், பெரிய எதிர்ப்பு பெரிய அதிர்ஷ்டம், அருளுமாகும். இது மேல்மனத்தின் ஆழம் – Substance.

  தொழிலதிபருக்கு வாரண்ட் வந்துவிட்டது. அத்துடன் எல்லாம் முடிந்துவிட்டது. நான் செய்த வேலைக்குரிய தண்டனையை நான் அனுபவிக்கிறேன்என ஏற்றுக் கொண்டான். வாரண்டை ரத்து செய்ய முயன்றபொழுது முதல்வர் பரிச்சயம் ஏற்பட்டு ஏராளமாகச் செல்வாக்குப் பெற்றனர்.

  • தவறான பாதைக்கும், நேரான பாதைக்கும் சட்டம் ஒன்றே.
   நாம் நல்லதை நாடவேண்டும்.
   திருடனுக்கும், தொழிலதிபருக்கும் திறமை பொது.
 3. நோன்பு, விரதம் (discipline, austerity) போன்ற வாழ்வு.
  நெறியான வாழ்வு. நெறி கடுமையானது.
  இது உள்மனத்தின் ஜீவியத்திற்(consciousness)க்குரியது. முறை, நெறி பலன் தரும்.
  பலனின் அளவு பர்சனாலிட்டி personalityயைப் பொருத்தது.
  எந்த அளவு சித்தித்தாலும் முடிவை நிர்ணயிப்பது பர்சனாலிட்டி personality.
  அதனால் பர்சனாலிட்டி personalityயைப் பெரிதாக்க வேண்டும்.
  எந்த நல்லதும் - அறிவு, பொறுமை, நிதானம், etc. பர்சனாலிட்டியைப் பெரியதாக்கும்.

தொடரும்....

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
சமூகத்திலுள்ளவரை, திருமணத்தைப் புறக்கணிக்க, சமூகம் மனிதனை அனுமதிக்காது என்பது உண்மையானாலும் மனம் மனைவியை நாடுவதை மனிதனால் தவிர்க்க முடியாது என்பதால் திருமணம் முன்னேற்றத்தைத் தரும் கருவியாகிறது.
 
மனைவியை நாடும் மனம், முன்னேற்றத்தை நாடுகிறது.

*********book | by Dr. Radut