Skip to Content

05. அஜெண்டா

"Agenda"

 

Each illness has its vibratory mode It is the exact measure of resistance in Matter, to the very atom

ஒவ்வொரு நோய்க்கும் உரிய குணம் உண்டு ஜடம் எதிர்ப்பதைத் துல்லியமாகக் காட்டும் அணுவரை அது தெரியும்

- அஜெண்டா

 

  • புரியாத பாடம் தலை வலி தரும்.
    பயத்தைக் கிளப்பும், செய்தி வயிற்றைப் புரட்டும்.
    அதிர்ச்சி உடலை நடுங்க வைக்கும்.
    திடீரெனவரும் பயங்கரச் செய்தி மூச்சை நிறுத்தும்.
  • கெட்டது வேண்டாம். கெட்டதை எதிர்ப்பதைப்போல், நாம் நல்லதையும் எதிர்ப்போம்.
    நமக்கு வேண்டியது நல்லதில்லை, சௌகரியமானது வேண்டும்.

    பெரிய நல்லது உள்ள நிலைமையை உடைக்கும்.
    அருள் அதிர்ஷ்டமாக வருவது எவருக்கும் பொறுக்காது.
    நம் ஜீவனும், உடலும் நமக்கு வரும் அருளை எதிர்ப்பதால் நோய் வருகிறது.

  • பரீட்சையில் பாஸ் செய்தால் வேலைக்குப் போகலாம்.
    பரீட்சை வந்தால் ஜுரமும் கூடவே வரும்.
  • எலக்ஷன் வந்தால், நம் தொகுதிக்கு MLA, M.P. உண்டு.
    நமக்கும் அது உண்டு.
    எலக்ஷன் வந்தால் அரசியல்வாதிக்குப் பீதி எழும்.
  • பெரிய பிறந்தநாள் பொற்கிழி பெற்றவர் முகம் அன்று கறுத்து விட்டது.
    அதிர்ஷ்டம் அவருக்கே பொறுக்கவில்லை.
  • அன்னையை அறிவது அதிர்ஷ்டம்.
    அன்னை வீட்டிற்கு வந்தவுடன், ஒருவருக்குத் தலை சுற்றியது, வயிறு ஆப்பரேஷனாகும் அளவுக்குக் கோளாறாயிற்று, பயம் அலையலையாக எழுந்தது.

    அன்னைக்குரிய எதிர்ப்பு நோய்.

  • ஒரு கோடி ரூபாய் தொழில் செய்தவருக்கு 800 கோடிக்குத் தொழில் க்ஷணத்தில் பெருகியது.

    அவர் குணம் கெட்டுவிட்டது.
    அதைச் செய்தவரை நிந்திக்க ஆரம்பித்து விட்டார்.

  • "நல்லது சொன்னால், பதிலாகக் கெட்டது பேசுவது'' சிலருடைய குணம்.
    இவர்களால் அதிர்ஷ்டத்தையோ, அருளையோ ஏற்க முடிவதில்லை.
  • பெரிய பாராட்டுவிழா நடத்தி, அதன் சிகரமான நிகழ்ச்சிக்குத் தலைவரை அழைத்துப்போக வந்தவரிடம், தலைவர்

    "அந்த இடத்திற்கு நான் வரவில்லை" என்றார்.

  • 60 வயதுவரை அரசியலில் தொண்டராகவே இருந்து எந்தச் சிறிய பதவியும் பெறாதவர் அன்னைச் சூழலில் வந்தபின், அவரைச் சூழ்ந்துள்ள ஒளியைக் கண்டு

    "நீங்கள் முனிசிபல் சேர்மனாக வேண்டும்".

    என்று கூறியவரைக் காரமாக அவர் திட்டினார். அதையும் மீறி முனிசிபல் கவுன்சிலரானார்.

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
பிரகிருதியின் அசைவுகள் சமர்ப்பணமானால் சைத்திய புருஷன் வளர ஆரம்பிப்பான்.
 
சமர்ப்பணத்தால் வளரும் சைத்திய புருஷன்.

*****



book | by Dr. Radut