Skip to Content

03. சாவித்ரி

"சாவித்ரி"

P.104 Our middle terms sketched out in prescient lines

குறி சொல்லும் கோணத்தின் நடு மையக்கோலம்

  • முடிவான பலனை முன்கூட்டியறியும் ஜீவன்
  • இறங்கிவரும் லோகத்தின் மினுமினுக்கும் கூரை
  • மோட்சம் தரும் வரத்தைத் தடை செய்யும் பூசாரி
  • பெருவெளியின் சூறாவளி சுவாசத்தைச் சிறுதுவாரத்தால் அனுமதிக்கும்
  • தங்கவலைமூலம் தவழும் நறுமணத்தென்றல்
  • மண்ணின் மனத்தை மச்சாக மறைக்கும்
  • அணையாத சூரியன், பொழியும் கடவுளின் பேரருள்
  • வினோதமான வண்ண ஒளி கால்வாயாக நுழைந்தது
  • நம் வாழ்நாளை நடத்திச் செல்லும் சக்திக்குப் பாதை
  • முரடான இயற்கைச் சுவரின்பின் மறைந்துள்ள சக்தி
  • மனமும் ரூபமும் மணக்கும் திருமணப்பந்தல்
  • வண்ணத்திரையின்பின் மறந்து
  • வையகம் காட்டிய வழி திரையூடே திருட்டுத்தனமாக வந்தது
  • புறப்பொலிவு எழும் அகவுணர்வு
  • உயர்ந்த ஜீவியத்தின் உணர்ச்சிக்கோடுகள்
  • நம் ஸ்பர்சமறியாத அதன் சூட்சுமம்
  • நம்மால் உணரமுடியாத அதன் உணர்வின் தூய்மை
  • மூலத்தின் ஒளியை மூலையில் சந்திக்கும்
  • அழியும் பூமியின் அரைக்ஷண முயற்சி உந்தும்
  • அழகொழுகும் சிறப்பான அமைப்பின் வடிவம்
  • பிறந்த தெய்வத்தின் சக்தி நடமாடும் அறை
  • பிரம்மத்தின் குழவி தவழும் விளையாட்டு
  • சிறகடித்துப் பறக்கும் சிந்தனையின் தொகுப்பு உந்தி எழும்
  • நிலையான அற்புத வண்ணத்தின் ஒளியை ருசிக்கும்
  • தெளிவான காற்றைப் பேசவிடும் தாலாட்டு
  • காலத்தை வென்ற மரத்தில் கனவுலக நிறம் தோய்ந்து
  • புவியின் காலமெனும் சமுத்திரத்துள் பாய்ந்து நீந்தும்
  • நாம் காண்பதன் அழகுருவம் அங்கே எழுந்தது
  • நெஞ்சு நினைத்தால், அறிவு செப்பனிட்டது
  • மூலத்தின் அழகை இழந்து
  • புவியில் நாடு கடத்தப்பட்டு, அதை வணங்கி ஏற்று
  • களை பொருந்திய கவர்ச்சி இருப்பதை ஏற்று
  • தவறற்ற அமரத்வ எல்லையின்கண் நின்று
  • அழகு அங்கு பெற்றது அமரவாழ்வு.

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
(Perfect) சிறப்பானதைத் தவிர மனம் மற்றதை ஏற்காது. பூரணச் சிறப்பில்லாவிட்டால் மனம் மகிழ்வுறாது. தேவையைப் பூர்த்தி செய்வதால் உடல் ஏற்றுக்கொள்ளும், சிறப்பை நாடாது.
 
மனம் இலட்சியவாதி, உடல் யதார்த்தவாதி. மனத்தைக் கடந்து சத்தியஜீவியத்தை அடைந்தால், இலட்சியமும், யதார்த்தமும் சேர்ந்து இலட்சிய நடைமுறையை ஏற்படுத்தும்.

******



book | by Dr. Radut