Skip to Content

08."சாவித்ரி"

"சாவித்ரி"

P.39. Bared with a stab of flame the closed Beyond.

மூடிய உலகை நெருப்பின் பிழம்பெனும் கத்தியால் திறந்தான்


 

. குரலை இழந்த சமாதியின் சிகரத்தில் விழித்தெழும் பார்வை.

. கற்பனையைக் கடந்த நிலையில் மனம் தொட்டிழுத்தது.

. ஆபத்தான தாண்டவம் ஒரே தாவலில் கடந்தது.

. உயர்ந்த கருந்திரை பரமனை மறைத்தது.

. உற்சாகமாகப் பேசி உள்ளே வந்தாள்.

. கடந்தவனின் கரை கடந்த பண்ணையைக் கொள்ளையடித்தாள்.

. அணுவெனும் சத்தியத் துளிகளைத் தேடி எடுப்பவள்.

. முடிவற்ற அனுபவத்தை எடுத்து முடிச்சுப் போடுபவள்.

. உலக அரங்கின் உயர்ந்த இரகஸ்யங்களை ஊடுருவினாள்.

. அவள் மந்திர மாயங்கள் ஆயிரம் திரைகளைக் கிழித்தெறிந்தன.

. இழந்த இரகஸ்யங்களைக் காலம் சுட்டிக்காட்டுவதைச் சட்டெனப் பிடித்தாள்.

. உயர்ந்து செல்லும் பாதையில் புழுதி எழும் புது உலகம்.

. அவசரப்படும் மனத்தின் கைவிடப்பட்ட கனவுகள்.

. கைவிடப்பட்ட காலம் - புதைக்கப்பட்ட நினைவுச் சின்னம்.

. தூரத்து இலட்சியம், பார்வையைக் கடந்த பாதாளம்.

. சொர்க்கமும், நரகமும் சொந்தமாக்கும் பாதைகள்.

. வேட்டை நாயென மோப்பம் பிடிக்கும் ஞானம்.

. விவேகியின் வீராவேசம் எழுதப்பட்டுப் பேசப்பட்டது.

. மேலுலகச் சொற்பொழிவின் பளிச்சிடும் மணித்துளிகள்.

. சூட்சும மனத்தின் மூடிய கதவுகளைத் தாண்டிச் சென்றது.

. புதிரான சத்தியத்தின் புனித உடலை ஞானிக்கும், தீர்க்கதரிசிக்கும் தந்தது.

ஜீவாத்மா உடலுள் புதைந்து, வாழ்வில் மறைந்து, மனத்திரையின் பின் உள்ளது.

ஜீவாத்மா எழுந்து வெளிவருவது பரிணாமம்.

அங்கு மனம் படும் பாடு, அதன் அவலங்கள், வாழ்வு எழுப்பும்

பிரச்சினைகள் பல.

வாழ்வையும், மனத்தையும் மீறி வளரும் ஆன்மா வெளிவரும் பாங்கு பெரியது.

நம் வாழ்வில் நாம் செயலைக் காண்கிறோம்.

செயலின் அடிப்படையை நாம் காண்பதில்லை.

அடிப்படையுள் அமிழ்ந்துள்ள பிரம்மத்தையும் காண்பதில்லை.

கண்ணுக்கும், அறிவுக்கும் தெரியாதது ஆத்மா.

ஆத்மாவும் அசைவற்ற நிலையில் அறியாதது வளரும் ஆன்மா.

வளரும் ஆன்மா வாழ்வின் வளர்ச்சியன்று, மலர்ச்சி.

அதைக் கண்ணுற கண் புனிதப்பட்டுப் பூவாக மலர்தல் வேண்டும்.

****


 


 


 


 



book | by Dr. Radut