Skip to Content

07.காரிய சித்தி

"அன்பர் உரை"

காரிய சித்தி

(கும்பகோணம் தியான மையத்தின் ஐந்தாமாண்டு விழாவில் 2.6.2002 அன்று

திரு.P.V,சங்கர் நிகழ்த்திய உரை).

வாழ்க்கைக்கு முக்கியமானவற்றுள் ஒன்று நாம் செய்வது கூடிவருவது. தேவை, கடமை, ஆசை என்பவை வாழ்க்கைக்குரியவை. தேவைகள் பூர்த்தியாகாமலிருந்தால் வாழ்வேயில்லை. கடமைகள் பூர்த்தியாகாவிட்டால் உயர்ந்த வாழ்வில்லை. இவையிரண்டையும்விட ஆசை பூர்த்தியாகவேண்டும் என்பதே மனிதனுக்கு முக்கியம். இவை மூன்றுக்கும் பொதுவானது செய்வது கூடிவருவது. சில நாடுகள் வசதியாக இருக்கின்றன. பல நாடுகள் வறுமையிலிருக்கின்றன. வசதியான நாட்டில் ஏழைகளும், வறுமையான இடங்களில் செல்வரும் உள்ளது, வசதி சூழ்நிலையை மட்டும் பொருத்ததில்லை என்று தெரிவிக்கிறது. வாழ்வில் வெற்றி, தோல்வியில் பொதுவான உண்மைகளும், குறிப்பான விதிகளும், இரண்டிற்கும் விலக்கானவையும் உண்டு. இவற்றையெல்லாம் அறிந்த சிலரில் வசதியானவர்கள், அது குறைந்தவர்களும் உண்டு. வெற்றி தனி மனிதனையும் பொருத்தது என்று நாம் தெரிந்துகொள்கிறோம். சூழலுக்கும், தனிமனிதச் சுபாவத்திற்கும், எல்லாக் காலத்திற்கும்,எந்த இடத்திற்கும் பொதுவான உண்மையிருந்தால் அவற்றை நாம் அறியலாம்.

. உள்ளும் புறமும் நிறைவானால் நிறைவான வெற்றி என்றும் நிச்சயம்.

. இவ்விரண்டும் குறையானால் வேலையை ஆரம்பிக்க முடியாது.

. புறம் நிறைந்து அகம் குறைவானால், சிறப்பாக ஆரம்பித்து குறையே நிலையாகும்.

. அகம் நிறைந்து புறம் குறையானால் ஆரம்பம் சிரமம், பூர்த்தியாவது நிச்சயம்.

சரித்திரமும், இலக்கியமும், தத்துவமும் எல்லா நாட்டுப் பண்புகளும் இவற்றை அவர்கள் பாணியில் கூறுகின்றனர்.
 . அன்பர்கட்கு இதே சட்டங்களை அன்னை உயர்வாகப் பூர்த்தி செய்கிறார்.

. நம்பிக்கை அதிகமாக உள்ளவர்க்கு குறையை நிறைவாக மாற்றுகிறார் அன்னை.

. அன்னை அகம், நாம் புறம்.

மேற்கூறியவை தவிர காரியம் என்பதற்கு ஆர்வம், சக்தி, உறுதி, திறமை, செயல்திறமை என்பவை தேவை. முடிவான பலனை நிர்ணயிப்பவை இவை. இவைகளும், அகத்தைப் பொருத்தும், புறத்தைப் பொருத்ததுமாகும். இவ்வளவும் உலகில் இயற்கை செயல்படும் நியதிக்குட்பட்டவை. அதுவும் ஆண்டவனின் அமைதிக்குக் கட்டுப்பட்டது. இதுவரை உலகம் அறிந்தது. ஸ்ரீ அரவிந்தம் கூறுவது புதியது, இன்றுவரை உலகம் அறியாதது. அதை, "இயற்கையில் இறைவன் வெளிப்பாடு'' என்று பகவான் கூறுகிறார்.
 . காரிய சித்தியின் சட்டத்தை, கடைசிக் கட்டத்தில் அறிய முடியும்.

. அறிந்ததைச் செயல்படுத்த முடியும் என்பதை அன்பர்கள் அன்னையை அறிந்தவுடன் அன்னை நடத்திக்கொடுக்கிறார்.

. நமக்கு நடந்ததை நாம் முற்றிலும் அறிவது வாழ்வு முழுமை பெறுதலாகும்.

இக்கட்டுரையில் காரிய சித்தி எனக் குறிப்பிடுவது ஒன்று. அது வேறு வகையாகவும் கருதப்படலாம். முதலில் கூறுவது அடிப்படை. இரண்டாவதாக அறியப்படுவது அனைவர் மனத்தையும் கவருவது.

. எந்தக் காரியமானாலும் - சிறியது, பெரியது - எடுத்த காரியம்

தவறாது முடிப்பது காரிய சித்தி என்பது முதல்.*

. இரண்டாவது, காரிய சித்தியின் சூட்சுமம் அறிந்தவர், பெரிய

காரியங்களைச் சாதிக்கலாம்.

காரியம் என்பதற்குரிய அம்சங்கள் அடுக்கடுக்காய் 4, 5 நிலைகளில் உள்ளன. 1. செய்யவேண்டும் என்ற அக்கறை அல்லது ஆர்வம், 2. அதனால் எழும் சக்தியே energy காரியத்தை முடிக்கும் சக்தி, 3. இந்த சக்தி பல திசைகளிலும் சிதறிப்போகக் கூடியது.அதை நம் மன உறுதியால் ஒருமுகத்தினதாக்கினால் -ஒருமுகப்படுத்தப்பட்டால் - அது force சக்தியாகிறது. இது சக்தியை (energy) சிதறடிக்கவிடாது. Energy மாறி force ஆனாலும் forceக்குச் சாதிக்கும் திறனில்லை. புதுப்பணக்காரனுக்குப் பணம் வந்துவிட்டால் அதை எப்படிச் செலவு செய்வது எனத் தெரியாது. அதற்கு, செலவு செய்யும் திறமை வேண்டும். அதற்கு, செலவு செய்த அனுபவம் தேவை. Forceஐ நம் வாழ்வில் organise செய்தால் அது power ஆகும். Power நேரடியான பலன் தாராது. Skill செயல்பட்டால் power அதன்மூலம் results தரும். Results வந்தால் காரியம் சித்தியாயிற்று எனப் பொருள். இதை வேறு விதமாகக் கூறலாம்.

1. மனிதன் எதையாவது சாதிக்க வேண்டும் என்றால் தெம்பு வரும். காரியத்தில் குறியாக இருந்தால் அதற்கேற்ப பெரிய காரியங்களைச் சாதிக்க முடியும்.

2. எந்த அளவுக்கு energy பெருகுகிறதோ அந்த அளவுக்குக் காரியம் பெரியதாக முடியும்.

3. கட்சியானாலும், கடையானாலும், எந்தக் காரியமானாலும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இதை மட்டும் கவனித்தால், கவனிப்புக்கேற்ற பலன் உண்டு.

கவனம் அதிகமானால் பலன் அதிகம்.

4. கடை என்றால் அது முறையாக இருக்கவேண்டும், கட்சி எனில் நிர்வாகம் தேவை.

நிர்வாகம் சக்தியை power ஆக மாற்றும்.

5. எலக்ஷனில் ஜெயித்தபிறகு, கடை வியாபாரம் பெருகியபின் அதன் பலனைப் பெற political skill, commercial skill பெற்றதைப் பலனாகப் பெறும் திறன் தேவை.

இத்தனைக் கட்டங்களும் நம் வாழ்விலும், செயலிலும் உண்டு. இவற்றிற்கெல்லாம் கருவாக மேலே *குறியிட்ட இடத்தில் நாம் ஒன்றைக் கூறினோம். அதுவே ரகஸ்யம், சூட்சுமம். எடுத்த காரியம் தவறாது முடிய 'நாம்' காரியத்திற்கு அடங்கி, காரியத்தை முடிக்கும் திறனுடையவர்களாக இருக்கவேண்டும். முதலில் நாம் காரியத்திற்கு அடங்கவேண்டும். அடக்கம் தேவை. இரண்டாவது காரியத்திற்குத் தேவையான அனைத்தும் (physical details) தவறாதிருக்க வேண்டும். மனத்தில் குறை என்பது காரியத்தைப் பொருத்தவரை கூடாது. மனம் நிறைவாக இருக்கவேண்டும்.

அகமும் புறமும் நிறைந்திருக்க வேண்டும்.

 நாட்டு நிகழ்ச்சிகள், உலகில் பெரிய திருப்பங்கள், வரலாற்றிற்குரியவை ஆகிய இடங்களில் இந்த நிபந்தனை - அகமும் புறமும் நிறைவானால், பூரண வெற்றி என்பது - விலக்கின்றிச் செயல்படுவதைக் காணலாம்.

இது விலக்கில்லாத விதி.

இதேபோல் மற்ற 3 நிபந்தனைகளையும் விலக்கில்லாத விதி எனக் கூறலாம்.

வரலாற்று நிகழ்ச்சியொன்று, இலக்கியத்திலிருந்து ஒன்று, இன்று நடைமுறையில் நடந்தது மற்றொன்று என நாம் விதியைச் சோதனை செய்வது பலன்தரும்.

 

2

     1

+ -

+ +

- -

- +

3

      4

 

அவற்றை எல்லாம்விட நமக்குப் பூரண வெற்றி, பூரணத் தோல்வி, தோல்வியில் ஆரம்பித்து வெற்றியில் முடிந்தது, வெற்றியாக ஆரம்பித்துத் தோல்வியாக முடிந்தது ஆகியவற்றைக் கருதினால் நான்கு பகுதிகள் உள்ள இவ்விதி,

விலக்கில்லாத விதி

எனத் தெரியும். விலக்கு என்று கண்டால், விதி புரியவில்லை எனப் பொருள்.

B.B.Cயில் வந்த T.V.serial சுமார் 15 ஆண்டுகட்குமுன் பிரபலமான Yes Minister, Yes Prime Minister என்பவை. சுமார் 20 (episodes) நிகழ்ச்சிகளாலானவை. Jim என்பவர் மந்திரியாகிறார்.அவருக்குப் பெரிய திட்டங்களை அமுல்படுத்த ஆசை. புதிய பதவி என்பதால் அனுபவமில்லை. இலாக்கா, அதிகாரிகளால் நடத்தப்படுகிறது. அதிகாரிகள் நிரந்தரமானவர்கள். சராசரி ஒரு மந்திரி 11 மாத காலம் பதவி வகிப்பார். மந்திரி அனுபவம் பெறுமுன் அவர் பதவி முடிவுக்கு வந்துவிடும். இலாக்கா, சர்க்கார், பார்லிமெண்ட் நடைமுறைகள் ஏராளம், சிக்கல் வாய்ந்தவை. பொது வாழ்வு பத்திரிக்கை உலகத்திற்குக் கட்டுப்பட்டது. அரசியல்வாதிகளின் சொந்த வாழ்வில் மறைக்கக்கூடிய பிரச்சினைகளும், மறைக்க முடியாத பிரச்சினைகளும் உண்டு. எவரும் தம் குறைகளை அறிய முடியாது என்று ஒரு மந்திரி நினைக்கும்பொழுது C.I.D. அவரைப் பற்றிய தகவல்களை அனைத்தும் சேகரித்து உரிய அதிகாரியிடம் கொடுப்பதை அவர் அறிவதில்லை. மந்திரிகளுடைய குடும்பத்தார் மந்திரியாக நடந்துகொள்வதாலும், இளைஞர்கள் மந்திரிக்கு அடங்காமல் நடந்துகொள்வதாலும் ஏற்படும் பிரச்சினைகள் எவருக்கும் கட்டுப்பட்டவையல்ல. பிரிட்டிஷ் மந்திரி சபை என்பதால் உலகில் எங்கு, எது நடந்தாலும், அவர்கள் அதனால் பாதிக்கப்படுவர். எதிரான வல்லரசு ஒன்றிருப்பதால் அநியாயமாக நடக்கும் ஒரு நாட்டாரின் அர்த்தமற்ற கோரிக்கையை இயல்பாக நிராகரித்தால் எதிர்க்கட்சி வல்லரசு ஆதரவு தர முன்வரும்.

இதுபோன்ற ஏராளமான நிகழ்ச்சிகளும், இலாக்காக்கட்குள் உள்ள போட்டியால் எதையும் நேரடியாக செய்ய முடியாத நிலை. பத்திரிகைகள், T.V., போன்றவை மந்திரி பேசுவதை அவர்கள் அபிப்பிராயப்படி மாற்றி எழுதுவதால், மந்திரியாக வேலை செய்வது கடினம். அனுபவமற்ற மந்திரி அவசரமாக, ஆர்ப்பாட்டமாக செயல்படுவது அரசியல்வாதியின் பண்பு. இவற்றால் மந்திரிகள் நடைமுறையில் அதிகாரிகளை மீறிச் செயல்பட முடிவதில்லை. அதிகாரம் மந்திரியிடம், அனுபவம் அதிகாரிக்கு. அதனால் மந்திரி அதிகாரிக்குப் பணியும் நிலை நிரந்தரமாகிவிட்டது.

Jim என்பவர் திடீரென்று பிரதம மந்திரியாகிவிட்டார். மந்திரிக்கும், பிரதம மந்திரிக்கும் உள்ள தூரம் அதிகம். பிரதம மந்திரியான பின்னும் Jim தம் அதிகாரியின் கைக்குள்ளிருந்தார்.அதிகாரம் அதிக அளவில் உயர்ந்தபொழுது, எச்சரிக்கையும் அதிக அளவில் தேவைப்படுகிறது. குறைந்தகால அனுபவத்தில் Jim அதிகாரியை தமக்கு அடக்கமாக்க விருப்பப்பட்டார். அது ஆபத்தான நிலை. சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது Jim நிதானமாகச் செயல்படுகிறார். ஆனால் நிலைமை அவரை எப்பொழுதும் மீறுகிறது. சூழ்நிலையில் மேற்கூறிய அம்சங்கள் தவிர,

. இங்கிலாந்திற்கேயுரிய integrity நேர்மை அதிகாரிகளிடமும், அரசியல்வாதிகளிடமும் அபரிமிதமாக உள்ளது.

. அரசியலுக்கேயுண்டான எல்லா அனர்த்தங்களும் நாட்டில் காணப்படுகிறது.

. நேர்மை அரசியல்வாதிகளிடமும், அதிகாரிகளிடமும், பொது மக்களிடமும் அபரிமிதமாகக் காணப்பட்டாலும், விஷயத்தை மறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் அடிக்கடி எல்லா முக்கிய விஷயத்திலும் எழுந்தபடியிருக்கிறது.

. இந்த சூழ்நிலையில் அனுபவமில்லாத அரசியல் தலைவர் அனுபவமுள்ள அதிகாரியின் பிடியிலிருந்து விடுபட எடுக்கும் முயற்சிகள் பகீரதப் பிரயத்தனம்.

. Jim பெரிய அளவுக்கு வெற்றி பெற ஆரம்பித்து, முடிவில் முழு வெற்றியும் பெற்றதை இந்த T.V. நிகழ்ச்சிகள் தத்ரூபமாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன. முன்னாள் பிரதமர் Thatcher இதைப் பார்த்துவிட்டு, "இது எனக்கு அமிர்தப்பிரவாகமாக இருந்தது, gave me hours of pure joy'' என்கிறார்.

எந்த ஒரு நிகழ்ச்சியிலும் சுமார் 30, 40 decisions முடிவுகள் எடுக்கப்படுகின்றன. வெற்றி பெற்ற நிகழ்ச்சியானாலும், தோல்வியுற்ற நிகழ்ச்சியானாலும் இத்தனை நிகழ்ச்சிகளும் இந்த விதிப்படி நடந்தவை. விலக்கு என்பதேயில்லை. எத்தனை உயர்மட்ட அரசியலும், எவ்வளவு சிக்கலிருந்தபொழுதும், எதுவும் தெரியாத நிலையிலும், எதுவும் தெரிந்துகொள்ள முடியாத நிலையிலும் விதி, விதிப்படி செயல்படுகிறது. இந்த விதிகட்குட்பட்டு அன்னை செய்யும் அற்புதங்களும், இந்த விதிகளையும் அன்னை விதிக்கு உட்படுத்தும் ஆச்சரியத்தையும் அன்பர்கள் சொந்தக் காரியங்களை விமர்சனம் செய்வதால் அறியலாம்.

****
 

ஸ்ரீ அரவிந்த சுடர்

அனுபவித்தல் அவசியம், விலக்க வேண்டிய அநியாய ஆசை என்பவற்றைப் பிரித்துப் பார்க்க அவை நம்மை நாடுகின்றனவா, நாம் அவற்றைத் தேடிப் போகிறோமா என்று பார்த்தால் தெரியும்.

. நாடுபவை நல்லவை.

. தேடுதலை விலக்க வேண்டும்.


 


 book | by Dr. Radut