Skip to Content

03.லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்''

                                      லைப் டிவைன்

                                              (சென்ற இதழின் தொடர்ச்சி....)                   கர்மயோகி


 

XII. Delight of Existence : The Solution 12.

Page No. 102, Para No. 4

12.ஆனந்தம் - விளக்கம்

The world is still Maya.

உலகம் எப்படியானாலும் மாயை.

It is so because it is not the essential Truth.

அடிப்படையான சத்தியமில்லாததால் அது மாயை.

The essential Truth is of infinite existence.

அனந்தமான வாழ்வு அடிப்படை சத்தியம்.

It is only a creation of self-conscious Being.

உலகம் சத்-புருஷனுடைய சிருஷ்டி.

It is not a creation in a void.

உலகம் சூன்யத்தில் உற்பத்தியாகவில்லை.

It is not a creation in nothing.

இல்லாதது இருப்பதை உற்பத்தி செய்யவில்லை.

It is not out of nothing.

இல்லை என்பது உலகை எழுப்பவில்லை.

It is out of eternal Truth.

உலகம் அழியாத சத்தியத்தினின்று எழுகிறது.

It is the eternal Truth of Self-being.

உலகம் சத்-புருஷனுடைய நிரந்தரச் சத்தியம்.

Its content is the essential.

சாரம் அதன் உள்ளடக்கம்.

Its origin and substance are essential.

அதன் ஆதியும், பொருளும் சாரமானவை.

They are real Existence

அதுவே உண்மை.

Its forms are mutable form of That

அதன் ரூபங்கள் பிரம்மத்தின் மாறும் ரூபங்கள்.

It is a formation to its own conscious perception.

அது தன்னையறிவதன் சொந்த ரூபம்.

It is determined by its own force.

அது தன் சக்தியால் நிர்ணயிக்கப்படுகிறது.

It is a creative conscious-force.

அது சிருஷ்டித் திறனுள்ள தன்னையறியும் சக்தி.

We may call it illusion.

நாம் இதை மாயை எனலாம்.

It is our choice.

அது நம்மிஷ்டம்.

It may be the illusion of infinite consciousness.

அது அனந்த ஜீவியத்தின் மாயையாக இருக்கலாம்.

Our mental sense of subjection can err.

மனம் கட்டுப்பட்டதால் தவறு வரலாம்.

It is incapable

அதற்கு முடியாது.

It may audaciously fling back a shadow.

அது அனாவசியமாக ஒரு நிழலைத் தரலாம்.

It could be the shadow of our mental sense.

அது மனத்தின் நிழலாக இருக்கலாம்.

It may throw the shadow on something greater

தன்னைவிடப் பெரியதன் மீது நிழல் விழலாம்.

It is greater than Mind.

அது மனத்தைவிடப் பெரியது.

Therefore it is beyond subjection to falsehood and illusion.

அதனால் அது மாயைக்கோ, பொய்க்கோ கட்டுப்படாது.

We see the essence and substance.

நாம் பொருளையும் சாரத்தையும் காண்கிறோம்.

They are of Existence.

அவை சத்.

It is not a lie.

அது பொய்யில்லை.

Our consciousness is divided.

நமது ஜீவியம் கண்டம்.

All errors and deformations are of our consciousness.

தவறுகளும் குறைகளும் ஜீவியத்தவை.

Still they represent some truth.

இருப்பினும் அவை சத்தியத்தின் பிரதிநிதி.

It is a truth of the indivisible existence.

அதுவே ஜீவாத்மாவின் சத்தியம்.

It is self-conscious.

அது தன்னையறிந்தது.

Our world is not the essential truth of That.

உலகம் பிரம்ம சத்தியமன்று.

We can say that.

நாம் அதைக் கூறலாம்.

It is a phenomenal truth.

உலகம் தோற்றத்தின் சத்தியம்.

It is a truth of Its free multiplicity.

ஒன்று பலவாகும் தன்மையின் சத்தியம் அது.

It is of the infinite superficial mutability.

மேலெழுந்தவாரியாக அனந்தமான கண்டங்களின் சத்தியம் அது.

It is not the truth of its Unity.

அது ஐக்கியத்தின் சத்தியமன்று.

The Unity is fundamental and immutable.

ஐக்கிய அடிப்படை, சலனமற்றது.

Page No.102 Para No.5


 

On the other hand, we can take another look.

மாறாக, நாம் வேறு வகையாகப் பார்க்கலாம்.

It is a look at world-existence.

அது உலகை நோக்கிய பார்வை.

Let us see it in relation to consciousness only.

ஜீவியத்தோடு மட்டும் பொருத்திப் பார்ப்போம்.

It can be force of consciousness.

அது ஜீவிய சக்தியாக இருக்கலாம்.

We realise it is a movement of Force.

சக்தியின் சலனத்தில் நாம் அதை அடையலாம்.

The Force obeys some secret will.

சக்தி இறைவனின் திருவுள்ளம்.

Or it obeys some necessity.

ஒரு சட்டத்தை சக்தி ஏற்கிறது.

It is imposed on it by the very existence.

வாழ்க்கை அதன்மீது சக்தியைத் திணிக்கிறது.

It is the existence of consciousness.

அது ஜீவியத்தின் ஜீவன்.

The consciousness possesses and regards it.

ஜீவியம் அதை ஆட்கொண்டு பயன்படுத்துகிறது.

It is then the play of Prakriti.

அது பிரகிருதியின் லீலை.

Prakriti is the executive Force.

பிரகிருதி உலகை இயக்கும் சக்தி.

It plays to satisfy Purusha.

புருஷ திருப்திக்கு அது செயல்படும்.

It is a play regarding the Conscious-Being.

சத்-புருஷனுக்குரிய லீலை அது.

It enjoys the Conscious-Being.

அது சத்-புருஷனை அனுபவிக்கிறது.

It is a play of Purusha reflected.

புருஷ லீலையின் பிரதிபலிப்பது.

It is a reflection in the movements of the Force.

சக்தியின் சலனம் பிரதிபலிப்பது

அது.

Thus it identifies himself with it

அவ்விதம் புருஷன் அதனுடன் ஐக்கியமாகிறான்.

World is a play.

உலகம் நாடகம்.

It is a play of the Mother of things.

பொருள்களின் தாயின் லீலை அது.

Mother is moved to cast Herself into forms.

அன்னை தன்னை ரூபமாக வெளிப்படுத்துகிறார்.

She does so forever into infinite forms.

எப்பொழுதும் அன்னை தம்மை அனந்த ரூபங்களில் காட்டுகிறார்.

It is an outpouring of experiences.

அனுபவம் பீறிட்டெழுவதாகும் அது.

It is eternal.

அது காலத்தைக் கடந்தது.

Contd...

தொடரும்....


 

****
 

ஸ்ரீ அரவிந்த சுடர்

தானே மறைந்துகொள்வதை, சிறு சிக்கல்களில் காண முயல்வதே தன்னையறிதலின் முதற்படி.

சிக்கல் சிறு சிருஷ்டி.


ஸ்ரீ அரவிந்த சுடர்

பெற்றோரும் குழந்தைகளும் எதிரான அமைப்புள்ளவர்கள்.

ஆழ் மனதில் எதிரான உணர்வுள்ளவர்கள்.


 


 


 


 



book | by Dr. Radut