Skip to Content

11.லைப் டிவைன் - கருத்து

The Life Divine -கருத்து

In our life, we find the world creates us.

In spiritual life, we create our world.

. பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்.

. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.

. நாலு பேர் ஓடும்பொழுது நடுவில் ஓடவேண்டும்.

. ஊர் ஓடும்பொழுது ஒத்து ஓடவேண்டும்.

. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

. அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி.

. முன்னேர் போன வழி பின்னேர் போகும்.

. ஊருக்குப் பெரியவன் செய்தால் நான் என்ன செய்வேன்

என்ற பழமொழிகள் தனி மனிதன் திறனற்றவன், ஊர் சக்திவாய்ந்தது என்பதைக் கூறுகிறது. பாரதத்தில் திரௌபதிக்கு நியாயம் வழங்க பீஷ்மரோ, துரோணரோ தயாராக இல்லை. 'செஞ்சோற்றுக் கடன்' என அடங்கினர் என்ற செய்தி போன்ற சரித்திர இலக்கியச் செய்திகள் ஆயிரம் மக்கள் மனநிலையைக் காட்டுகின்றன.

. இவ்வளவும் உண்மை என்றாலும், உலகம் இவர்களால் இயங்கவில்லை என்பதைக், குறள், சான்றோரிருப்பதால் உலகம் இயங்குகிறது என்கிறது.

. இன்றுவரை உலகம் முன்னேறியது. புத்தர், சங்கரர், ஏசு, காந்திஜீ போன்று சமூகத்தினின்று விலகி புது வழி ஏற்படுத்தியவரால் முன்னேறியது என்பது தெளிவு.

ஆன்மீக உண்மை இதைப் பற்றியது.

. புறம் தோற்றம், அகத்தின் வெளிப்பாடு.

. அகத்தில் தோன்றி புறத்தில் செயல்படுவதால் ஏற்படுவது உலகம்.

. அகத்தில் தோன்றாமல் புறத்தில் செயல்படுவதில்லை.

இந்த ஆன்மீக உண்மையை அன்பர்கள் தங்கள் வாழ்வில் காணலாம்.

. அன்னையை அறியும்வரை ஜாதகம் பலித்ததையும்,

. அன்னையிடம் வந்தபின் ஜாதகம் பலிக்காததையும்,

. அன்னையிடம் வந்தபின் நடப்பனவெல்லாம் ஏற்கனவே நாம் விரும்பி மறந்துபோன பழைய எண்ணங்கள் எனக் காணலாம்.

. ஜாதகத்திலில்லாத நம் ஆசைகள் ஆழ் மனத்திலிருந்தவை இன்று பலித்தன என்பது நாம் நம் உலகை சிருஷ்டிக்கின்றோம் என்பதாகும்.

. தங்கள் வாழ்விலும், பிறர் வாழ்விலும் இதை அன்பர்கள் காணலாம்.

****


 

புதிய வெளியீடு


 

ரிஷிகள் கண்ட பிரம்மம்


 

விலை : ரூ.150/-


 


 


 


 


 


 


 



book | by Dr. Radut