Skip to Content

07.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

ஸ்ரீ அன்னைக்கு நமஸ்காரம். அன்புடன் எழுதும் நன்றிக் கடிதம்.

ஸ்ரீ அன்னைக்குச் சமர்ப்பணம். ஸ்ரீ அன்னை எனக்கு எண்ணற்ற பரிசுகள் கொடுத்துள்ளார்கள். அவற்றுள் சிலவற்றைத் தெரிவிக்க ஆவலாய் உள்ளேன். ஸ்ரீ அன்னை அறிவுத் தெய்வம். என் சுவாசத்தில் கலந்த சுகந்தமான தென்றல். நான் 1998 Sep. மங்கையர் மலரில் ஸ்ரீ அன்னையை அனுப்புதல் என்ற கட்டுரை மூலம் அறிந்தேன். உடனே மங்கையர் மலருக்கு கடிதம் எழுதினேன். அவர்கள் மதர்ஸ் சர்வீஸ் சொஸைட்டி முகவரி கொடுத்தார்கள். நான் 1990லிருந்து தொகுப்பு ஊதியம் மட்டுமே பெற்று வந்தேன். Sep.98இல் ஸ்ரீ அன்னை அவர்களுக்குச் சம்பளம் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தோம். மூன்று மாதத்தில் 1999 ஜனவரி 1ஆந்தேதியிலிருந்து 9 வருடமாகப் போராடி கிடைக்காத சம்பளம் S.G.T.pay கிடைத்தது அன்னையின் அதிர்ஷ்டம், அருள். ஸ்ரீ அன்னைக்குச் சமர்ப்பணம். ஸ்ரீ அன்னைக்குக் கோடான கோடி நன்றிகள்.

அதே வருடம் 1999 Nov 3ந்தேதி என் மாமனார் இறைவனடி சேர்ந்தார். அன்று நான் பாத்ரூமில் உயிர் நிலையில் அடிபட்டு உயிருக்குப் போராடினேன். அன்று டாக்டர் மிகவும் கஷ்டம், blood clot ஆகியுள்ளது, எலும்பில் அடிபட்டுள்ளதோ என்னவோ உடனே minor operation செய்யவேண்டும் மிகவும் வீக்கமாக உள்ளது என்று கூறிவிட்டார். மாமியார் வீட்டில் மாமனார் இறந்த வேளை. என் கணவருக்குத் தம் தந்தை இறந்த துக்கம், நான் மனைவி, என்ற துன்பம். நானும் அவரும் ஸ்ரீ அன்னையே காப்பாற்றுங்கள் என்று வேண்டினோம். The Mother's Service Societyக்கு இரவு 10 மணிக்கு phone செய்தோம். அம்மா, ஸ்ரீ அன்னைக்குச் சமர்ப்பணம் செய்த மலர்களை அடிபட்ட இடத்தில் வைத்துக் கட்டினால் ஸ்ரீ அன்னை குணமாக்குவார் என்றார். அவ்வாறே மனமுருகி மிகுந்த நம்பிக்கையுடன் செய்தேன். பூரண குணம் பெற்றேன். ஸ்ரீ அன்னை என் உயிரைக் காப்பாற்றினார். நன்றி அன்னையே!

மேலும் நாங்கள் விரும்பும் கோரிக்கைகள் யாவும் ஸ்ரீ அன்னை அருளால் நடந்துள்ளது. நம்பிக்கையுடன் ஸ்ரீ அன்னை பாதங்களில் வீழ்ந்தால் நிச்சயம் அருளுடன் அதிர்ஷ்டமும் தருவார் ஸ்ரீ அன்னை.

நீண்ட நாட்களாக நான், என் கணவர், என் முதல் பெண் குழந்தை மூவரும் எனக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கணும் என்று வேண்டி வருகிறோம். நிச்சயமாக ஸ்ரீ அன்னை எங்களுக்கு அருள் புரிவார், அதிர்ஷ்டம் தருவார் என்ற நம்பிக்கையுடன் எழுதுகிறேன். ஸ்ரீ அன்னை கேட்டதைக் கொடுப்பவர். கேட்கத் தெரியாததையும் கொடுப்பவர். கலியுகத்தின் கண்கண்ட தெய்வம். எனக்கு இக்கடிதம் எழுத வைத்த அன்னைக்கு எனது இதயப்பூர்வமான நன்றி.

 

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

 பற்றாக்குறையில் தேவைகள் பூர்த்தியாவதில்லை. உபரியான நேரத்தில் பொருள்கள் முழுவதையும் பயன்படுத்த முடிவதில்லை. இரு நேரங்களிலும் பூர்த்தியாகாத தேவை நிலைக்கிறது.

 அனைத்தையும் பூர்த்தி செய்யும் அன்னை.

**** 

Comments

அன்பர் கடிதம் para 2, line 6

அன்பர் கடிதம்

para 2, line 6 - 1990லி ருந்து - 1990லிருந்து

 do.     do.  9 - 1ஆந் தேதியிலிருந்து  - 1ஆந்தேதியிலிருந்து

do. 3,  do.  4 - min or  - minor

 



book | by Dr. Radut