Skip to Content

06.பரநலம் பரமனின் நலம்

"அன்பர் உரை"

 பரநலம் பரமனின் நலம்

(சென்னை மாம்பலம் தியான மையத்தில் 9.6.2002 அன்று திருமதி விஜயா நாராயணன் நிகழ்த்திய உரை)

பரநலம் பரமனின் நலம் என்பதைச் சுயநலம் எப்படிப் பரநலமாவது என்று மாற்றிக் கூறலாம். 8, 10 வயதுக் குழந்தைகட்கு அவர்கள் விளையாட்டு தெரியும். மற்ற அவர்கள் விஷயங்கள் தெரியும். வேறு விஷயங்கள் வீட்டில் நடப்பது தெரியாது. சூதாடுபவனுக்கும், பெண்களை நாடுபவனுக்கும் வீடு என்று ஒன்று இருப்பது தெரியாது, ஏனெனில் அவன் சூதாட்டத்தில் உலகை மறந்திருப்பான். தகப்பனார் சுயநலமானால், அவருக்கு அவர் விஷயங்கள் சிறியவை கூட மறக்காது. மனைவிக்கோ, குழந்தைகட்கோ உடல்நலம் சரியாக இல்லை, பரீட்சை வருகிறது என்பவை கூட மனதில் படாது. மறந்து செயல்படுவார்.

குழந்தைகள் தெரிய முடியாது என்பதாலும், சூதாடி தன்னைச் சூதாட்டத்தில் இழந்துவிட்டான் என்பதாலும், பிறரை அறியமாட்டார்கள். சுயநலமிக்குப் பிறரையறியும் திறமையே பிறக்கவில்லை. அடுத்தவரும் மனிதராயிற்றே என்ற எண்ணம் இருக்காது. எதிரில் மனிதரிருப்பது கண்ணில் படாது. கண்ணில் பட்டால் மனதில் படாது.

எலக்ஷனில் நேரு ஊர் ஊராகப் போய் பேசும்பொழுது அந்தத் தொகுதி வேட்பாளரை அறிமுகப்படுத்துவார். உத்திரப் பிரதேசத்தில் அப்படி அவர் சுற்றுலா வரும்பொழுது ஒரு தொகுதி வேட்பாளர் மேடைக்கு வரவில்லை. “எங்கே வேட்பாளர்?” என நேரு கேட்ட பொழுது இது உங்கள் தொகுதி என்றனர். பரநலம் சுயநலமறியாது. சுயநலம் பரநலமாவது, மனம் சத்திய ஜீவியத்தை நோக்கி அடி எடுத்து வைப்பதாகும். சுயநலம் பரநலமாவது அதிர்ஷ்டம். பகவான் ஸ்ரீ அரவிந்தர் சுயநலத்தைக் கண்டிப்பதில்லை. நாம் அதனின்று விலக வேண்டும் என்பார்.

The Life Divineஇல் எல்லா அத்தியாயங்களிலும் முரண்பாடு எனவும், ஜடம் எனவும், அகந்தை எனவும், வேதாந்த ஞானம் எனவும், இருதயச் சமுத்திரம் எனவும் சுயநலத்தின் அடிப்படையான தத்துவத்தைக் கூறுகிறார்.

ஜடம் Matter என்ற அத்தியாயத்தில் ஜடம் உற்பத்தியான வகையை விளக்கி முடிக்கும் கடைசி வரியில் இக்கருத்தைக் கூறுகிறார்.

  • ஜடம் என்பது சச்சிதானந்தம்.
  • சத் ஆனந்தத்தை உணர சித் மூலம் ஆனந்தமாகவே மாறியது.
  • சத், மனம், வாழ்வு மூலம் ஜடமாயிற்று.
  • ஜடம் சத் என்ற அகத்தின் புறம்.
  • சத் என்ற அகம் ஆன்மா என்ற புறமாயிற்று.
  • ஆன்மாவே ஜடம் என்பதால் ஜடம் ஆரம்பத்தில் சத்தாகும்.
  • சத் ஆனந்தம் பெற சச்சிதானந்தமாயிற்று.
  • கீழுலகில் சத் தலைகீழே மாறி ஜடமாயிற்று.
  • அகமான சச்சிதானந்தம் தலைகீழே மாறி புறமான ஜடமாயிற்று.
  • ஜடம் சச்சிதானந்தத்தின் ஆனந்தமயமான புறம்.

இது தத்துவம். இது புரியலாம். புரியாமலிருக்கலாம். பெற்றோர், மனைவி, மக்கள், வீடு என்பதை மனதில் வாங்கிக் கொள்ளாத சுயநலமியை நாம் அறிவோம். 1 மாதமாக இருமும் குழந்தை எதிரிலேயே இருந்தாலும் அவன் இருமல் காதில் அவனுக்குப் படாது. சொன்னால், "எல்லாம் சரியாகிவிடும்” என்பான். தனக்கு ஒரு முறை இருமல் வந்தால், டாக்டரிடம் காட்டுவான். எல்லா நண்பர்களிடமும் எப்பொழுதும் கார் இரவல் வாங்குவான். வேலை முடிந்த பிறகு ஓரிரு நாள் வைத்திருப்பதும் உண்டு. பெட்ரோல் போட்டுக் கொடுக்கும் நண்பர்களும் உண்டு. ஆனால் தன் காரை எவரும் கேட்கக் கூடாது, கேட்பது அநாகரீகம் என்பான். பிறர் சொத்து வாங்கும்பொழுது எனக்குப் பாதி நீ பணம் போட்டுக் கடனாக வாங்கிக் கொடு என்பான். அவருக்கே சைக்கிள் ஒரு நாளைக்குக் கொடுக்கமாட்டான். இது போன்ற சுயநலமிகளை நாம் ஏராளமாக அறிவோம்.

  • சுயநலமான மனிதன் ஜடம்.
  • பரநலமான மனிதன் ஆனந்தமான ஜடம்.

சுயநலம் பரநலமானால், மனம் சத்திய ஜீவியமாகும். காலம், காலத்தைக் கடந்த நிலையையும் கடந்து செல்லும். பரநலம் அதிர்ஷ்டம் என்பதால் சுயநலமி அதை நாடினால், அதுவும் சுயநலத்திற்காகவே நாடுகிறான் எனப் பொருள்.

நமக்கெல்லாம் சுயநலம் உண்டு. சற்று பரநலமும் கலந்திருப்பதுண்டு. நல்லவர்கட்கு அதிகமாக நல்லதிருப்பதுண்டு. முழுச் சுயநலமாக இருப்பவரும் உண்டு. அவர் அன்னையை வழிபட ஆரம்பித்தால்,

  • அவருடைய எல்லாப் பிரார்த்தனைகளும் சுயநலமான பிரார்த்தனைகளாக இருக்கும். ஒன்று தவறாமல் பலிக்கும்.
  • சுயநலத்திற்குத் திறமை அதிகம் என்பதால், திறமை மூலம் அன்னை அதிகமாகப் பலிப்பார்.
  • அன்னை அதிகமாகப் பலிப்பதால், சுயநலம் பரநலமாகி விடாது.
  • பரநலத்தின் பிரார்த்தனை சுயநலமான பிரார்த்தனையைவிட அதிகமாகப் பலிக்கும்.
  • அதையும் பரநலத்திற்காகச் செய்வதே முறை.
  • பரநலம் பரமனின் நலம் என்றறிவது ஞானம்.

மையம் நடத்துபவர்கள், பல நண்பர்களை அன்னைக்கு அறிமுகப்படுத்துபவர்கள் “நான்தான் அன்னை. நான் சொல்வதைக் கேள்” என்று கூறுவதும் உண்டு. இவர்கள் மையமும் சிறப்பாக, சுத்தமாக, மௌனமாக இருப்பதுண்டு. எல்லாப் பிரார்த்தனைகளும் பலிப்பதுண்டு.

  • சுயநலமும் அன்னைச் சூழலில் உள்ளவரை பிரார்த்தனை பலிக்கும். பையன் சுயநலமாக இருந்தாலும், பெற்றோர் அவன் நன்றாக இருந்தால் போதும் என்று அவன் சுயநலத்தை ஆதரிப்பதைப்போல், அன்னை அவர் சூழலில் உள்ளவரை சுயநலமியின் பிரார்த்தனையை ஏற்பார்.
  • சுயநலம், அன்னைச் சூழலைவிட்டு அகன்றால், அந்த மையத்தில் பிரார்த்தனைகள் பலிக்கா.
  • அன்னை, ஸ்ரீ அரவிந்தர் படம் இருளடையும்.
  • மழை அவரால் தடைபடும்.
  • பிரார்த்தனைக்கு எதிரான பலன் வரும்.
  • சமாதி தரிசனம் செய்து திரும்பும்பொழுது சாக்கடையில் விழுந்தேன். அன்னை அருளால் உயிர் பிழைத்தேன் என்ற நிகழ்ச்சி நடக்கும்.
  • சுயநலம் போய் பரநலமானால், பிரார்த்தனை தவறாது பலிக்கும்.
  • சமாதியின் சூழல் வீட்டிலும், மையத்திலும் இருக்கும்.
  • அன்னை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளின்பின் அசம்பாவிதங்கள் நடக்கா.
  • சுயநலமி, சூழலைவிட்டு வந்தபின், அவர் மனதில் அன்னை இருக்கமாட்டார். முகம் கறுத்துவிடும்.

பரநலத்திற்குப் பொறுப்புண்டு, பொய் சொல்லமுடியாது. பிறர் பணத்தைத் தம் பணம்போல் பொறுப்பாக நிர்வாகம் செய்வார்.

  • பரநலமிருந்தால் அவர் செய்யும் காரியம் ஆயிரமாயிரங்கள் மீண்டும் நடக்கும்.
  • பரநலம் சுத்தமான பணம் சம்பாதிக்கும். பணம் வேண்டாம் எனக் கூறினால் போதாது. பணத்தைச் சரியாகச் சம்பாதிக்க முடியாதவன் திறமையில்லாமல் வேண்டாம் என்பது பொருத்தமாகாது.
  • பரநலம் பணம் சம்பாதிக்கும், பெரும்பணம் சம்பாதிக்கும், பரநலத்தின் பணம் பெருகும், அளவு கடந்து பெருகும்.

**** 

Comments

"அன்பர் உரை" பரநலம் பரமனின்

"அன்பர் உரை"

 பரநலம் பரமனின் நலம்

para 6, line 1 - புரியாமருக்கலாம். - புரியாமலிருக்கலாம்.

After

 para 8, 1st bullet point , line 2 - பக்கும். - பலிக்கும்.

             3rd   do. பலி ப்பதால் - பலிப்பதால்

             4th   do.  பலி க்கும். - பலிக்கும்.

After

para 9, 1st bullet point, line 1 - சூழல் - சூழலில்

                      do.          do.  - பலி க்கும் - பலிக்கும்

                      do.          do. 4 - சூழல் - சூழலில்

            7th bullet point  -  பலி க்கும் - பலிக்கும்

 



book | by Dr. Radut