Skip to Content

13.கேள்வித்தாள்

கேள்வித்தாள்

அகில இந்திய போட்டியில் கலந்து கொண்ட 1200 பேரில் ஒருவரே தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அன்பர். 1970இல் அமெரிக்கா போவது இன்று போலில்லை. தேர்ந்தெடுக்கப்பட்டவர் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டார்.

M.Sc.Computer Science மாணவ மாணவிகள் 100 பேருள்ள கல்லூரியில் பெரிய கம்பனி அடுத்த ஆண்டு - பரீட்சை பாஸான பின் - வேலைக்காக மாணவர்களைத் தேர்ந்தெடுக்க வருகின்றனர். ஆரம்பச் சம்பளம் 22,000/- ரூபாய்.

ஒரு மாணவன் அவர்கள் வருமுன் பரீட்சை கேள்வித்தாளைக் கல்லூரிக்குக் கொண்டுவந்து விநியோகம் செய்தான். பார்க்காத மாணவனோ, மாணவியோ இல்லை எனலாம். அன்னை மீது நம்பிக்கையில்லாத அன்பர் ஒரு பெண். அவளுக்கு அன்னையைவிட மனச்சாட்சி, நேர்மை முக்கியம். பெண் புத்திசாலி.  மனச்சாட்சி நிதர்சனமாகத் தெரிவதுபோல், அன்னை தெரிவதில்லை. அவளுக்குத் தெரிந்து அன்னையை ஏற்றவர்கள் எல்லாம் எதுவும் தெரியாமல் மூடநம்பிக்கை உள்ளவர்கள். அன்னைச் சூழலிலிருப்பவர். அனைவரும் பார்த்த கேள்வித்தாளைத் தாம் பார்க்க மறுத்துவிட்டாள்.

- எட்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

- அவர்களுள் 3 பேர் கேள்வியை முன்னரே அறிந்தவர்.

- கேள்வித்தாளைப் பார்க்க மறுத்த இப்பெண் தேர்ந்தெடுக்கப்பட்டாள்.

நாம் மனச்சாட்சியை நம்பினாலும், நாம் சூழலிலிருப்பதால், அன்னை நாம் நம்புவது மூலம் செயல்படுகிறார்.

****

Comments

கேள்வித்தாள்  from

கேள்வித்தாள்

 

from தேர்ந்தெடுக்கப்பட்டவர் to அனுப்பப்பட்டார். - to be joined to para 1

para2, line 3 - ஒரு மாணவன் to பார்க்க மறுத்துவிட்டாள். - para 3



book | by Dr. Radut