Skip to Content

12. 40 வருஷம் புகை பிடித்தவர்

40 வருஷம் புகை பிடித்தவர்

ஆசிரமத்தில் பல ஆண்டு தங்கியவர் தம்மூர் திரும்பிய ஓராண்டில் இருமல் தொந்தரவால் டாக்டரிடம் போனார். சோதனை செய்த டாக்டர் “இது T.B. 7, 8 ஆண்டுகளாக இருக்கிறது. எப்படி நீங்கள் வேலைகளைச் செய்கிறீர்கள்?" எனக் கேட்டார். ஆசிரமத்திலிருந்த வரை அப்படி ஒரு தொந்தரவு இருப்பதாக அறியார்.

84 வயதானவர் டாக்டரிடம் போனார். டாக்டர் செய்த சோதனைகளைப் பற்றி அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தபொழுது, "நான் சிகரெட் பிடிப்பவன். இப்பொழுது 10 ஆண்டாக விட்டு விட்டேன்” என்றார். டாக்டர் எத்தனை நாளான பழக்கம் அது? எந்த சிகரெட் பிடிப்பது வழக்கம்? எத்தனை சிகரெட் ஒரு நாளைக்கு பிடிப்பதுண்டு எனக் கேள்வி மேல் கேள்வி கேட்டுவிட்டார்.

40 ஆண்டு புகை பிடித்தேன்.

தினமும் 60 சிகரெட் புகைப்பேன்.

இருமல் வந்ததால் பிறகு அதை விட்டுவிட்டேன் என்றார்.

டாக்டர் நுரையீரலை சோதனை செய்தார். புகை பிடித்தால் - இந்த அளவு - என்னென்ன அடையாளம் எங்கெல்லாம் இருக்கும் என்பது டாக்டருக்குத் தெரியும். அத்தனை சோதனைகளையும் செய்து பார்த்தார்.

நீங்கள் சொல்வதுபோல் எந்த அடையாளமும் தெரியவில்லையே என்றார் டாக்டர். அவருடைய மகன் ஆசிரமத்தில் 30 ஆண்டாகத் தங்கியிருக்கிறார் என்பதால் அன்னை என்றால் என்ன என்று ஒரு முறையும் மகனைக் கேட்காத தகப்பனுக்கு அன்னை கொடுத்த பாதுகாப்பு அது.

 

****

Comments

40 வருஷம் புகை பிடித்தவர்

40 வருஷம் புகை பிடித்தவர்

para 1, line 2 - “இதுT.B - “இது T.B.

from ஆசிரமத்திலிருந்தவரை  to அறியார். - joined to para 1

from 84 வயதானவர் டாக்டரிடம் போனார். - 2nd para.



book | by Dr. Radut