Skip to Content

05. லைப் டிவைன்- கருத்து

லைப் டிவைன் -கருத்து

P. 13.The unknown is not unknowable.

          இன்று அறியாதது, என்றும் அறிய முடியாததில்லை.

       ஒரு காலத்தில் அன்று அறிந்ததே முடிவு, அதிகமாக அறிய முயல்வது தவறு என்ற கருத்து இருந்தது. அத்துடன் இனி அறிய ஏதுமில்லை என்ற அபிப்பிராயமும் பலமாக இருந்தது. பழைய மதங்கள் அப்படியிருந்தன. இன்றும் அம்மதங்களில் fundamentalists என்பவர்களைப் பார்த்துப் பேசினால் Bibleஇல் அது இல்லை, மேற்கொண்டு பேசவேண்டாம். கீதை கூறுகிறது, அதைத் தாண்டிய ஞானமில்லை. கொரான் கூறுவதை மறுத்துப் பேசாதே என்ற மனப்பான்மையைக் காணலாம். சுமார் 50 வயது, 60 வயதானவர்கள் கிராமத்தில் செல்வாக்கோடிருந்தால், பேராசிரியர் புகழ் பெற்றவரானால், கட்சித் தலைவர் பிரபலமானவரானால் முடிவான ஞானத்தைக் கண்டுவிட்டோம் இனி பேச எதுவுமில்லை என்ற மனநிலையைக் காணலாம். இன்று உலகம் மாறுவதால் மனநிலை சற்று இடம் கொடுக்கிறது. தங்கள் அறிவின் உச்சத்தை intellectual maximum எட்டியதாலும், தங்கள் அறிவைக் கடந்து எதுவுமில்லை என்ற ஆழ்ந்த அனுபவப்பூர்வமான தெளிவு இருப்பதாலும் அவர்கட்கு இனிமேல் அறிய எதுவுமில்லை என்று தோன்றுகிறது.

       எந்தக் காலத்திலும் உயர்ந்த தீர்க்க தரிசனமுள்ளவர்கள் கற்றது கைம்மண் அளவு எனக் கருதியுள்ளார்கள். ஸ்ரீ அரவிந்தம் கூறுவது,

இதை - இனி அறிய எதுவுமில்லை - கூறுபவர்கள் மனநிலை மனவளர்ச்சியில் ஒரு கட்டம். அதை முடிவாக ஏற்கவேண்டும் என்ற கட்டாயமில்லை.

பிரம்மம் அனந்தமானது infinite. அனந்தம் எனில் அது புனைவதும் அனந்தமானது.

அதனால் மேலும் மேலும் முடிவில்லாமல் சிருஷ்டியிலும், நம் வாழ்விலும் உற்பத்தி செய்யக் கூடியவையுண்டு.

பிரபஞ்சத்தில் அறியக் கூடியது ஒன்றிருந்தால் மனிதனிடம் அதை அறியும் திறமையிருக்கும்.

மனம் பகுதியானதால், அதன் திறனுக்கு முடிவுண்டு.

சத்திய ஜீவியம் முழுமையானதால், அதன் திறனுக்கு முடிவில்லை.

கடந்த நூற்றாண்டுகளில் இதை நினைத்தவர்களை இன்று நாம் நினைத்துப் பார்த்தால், அவர்கட்கு இக்கூற்று பொய் எனத் தெரியும்.

அவர்கட்கு அன்று இது பொய் என்பதுபோல், நமக்கும் இன்று இது உண்மையன்று எனத் தெரியும்.

கீதை நாம் ஆச்ரயிப்பதை அடையலாம் என்பதால், தெரிய முனைந்தால் நாம் தெரிந்து கொள்ளலாம்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

பிரார்த்தனை, பெரும்பலனளிக்கும் சுருக்கமான வழி, தன் பலஹீனத்தைக் கண்டு களைதல் அல்லது தன் வலிமையைச் சற்று உயர்த்துதல்.

நம்மை வலுப்படுத்தினால் பிரார்த்தனை வலுக்கும்.

 

 



book | by Dr. Radut