Skip to Content

04.சாவித்ரி

சாவித்ரி”

P. 19. A colonist from immortality.

          சொர்க்கத்திலிருந்து இங்குக் குடியேறியவர்

       அவதார புருஷர்களை, அற்புதமான மனிதர்களை நாம் தெய்வப்பிறவி என்கிறோம். வானுலகில் பிறந்து மண்ணுலகில் வாழ்பவர்கள் என்ற விளக்கம் நெடுநாளாகப் பயன்படுவது. ஸ்ரீ அரவிந்தர் அந்த உபமானத்தை சாவித்திரியில் பயன்படுத்துகிறார். வேறோரிடத்தில் சாவித்திரியில் கூறுகிறார். “தெய்வலோகத்தில் ஏராளமான ஜீவன்கள் புவியில் பிறக்க விழைகிறார்கள். அதற்குரிய கருவைத் தாய் வயிற்றில் கண்டால் கரு மூன்று மாதமான பின் அதனுள் இத்தெய்வப்பிறவிகள் நுழைய விரும்புகிறார்கள்”. கருவடைந்த பெண்கள் மனம் தெய்வ சிந்தனையால் நிரம்பி, இனித்து பக்குவப்படுவதை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

       தெய்வலோகத்திலுள்ளவர்கள் அங்கேயே இருக்கலாம். இறைவனை அவர்களால் அடைய முடியாது. இறைவனையடைய அவர்கள் விரும்பினால் அவர்கள் புவியில் மனிதர்களாகப் பிறக்க வேண்டும்.

- உலகை உய்விக்க தெய்வம் புவிக்கு வருகிறது என்பது நாமறிந்தது.

- இறைவனை அடைய தெய்வம் பூமியில் மனிதனாய்ப் பிறக்கிறது என்பது ஸ்ரீ அரவிந்தம்.

இப்பக்கத்திலுள்ள இதர கருத்துகளில் சில.

உலகத்தின் ஆசையால் உந்தப்பட்டு அவள் பிறந்தாள்.

நினைவுக்கெட்டாத நாளிலிருந்து தேடுவதில் முன்னணியில் உள்ளவள்.

புரியாத புதிரான நாடகத்தின் முதன்மையான பாத்திரம்.

உருவமற்றவன் உருவத்தால் தன்னையே தேடுகிறான்.

குருட்டு சூன்யம் வாழ முயன்று, கண் திறந்து பார்க்க முயல்கிறது.

இலட்சிய வெளியின் சிந்தனையாளரின் உழைப்பு.

பூமியின் ஊமைக் கனவிற்கு ஜோதிமயமான ஆற்றல் வருகிறது.

பெருவெளியினின்று இறங்கி வந்த பெரிய ஆத்மா.

க்ஷணத்தில் மறையும் சாம்ராஜ்யம்.

பூமாதேவியின் புலப்படாத பாதைகளில் சுடர்விளக்கான ஒளி.

அவனுடைய பிறப்பு ஆண்டவனின் சகுனம்.

மனித உடல் ஒளி ஊடுருவும் ஆடையலங்காரம்.

குருட்டு உலகை நடத்தும் பரமனை மூடி மறைப்பது.

பிரபஞ்சத்தின் காலமும், இடமும் அணைத்து ஆதரிப்பன.

இறைவன் பட்ட கடனை மனிதனுக்கும் பூமாதேவிக்கும் தீர்ப்பவன்.

தெய்வீக உரிமையான பெரிய பிதிரார்ஜிதம்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

தோல்வியின் காரணத்தைத் தன்னிடம் காண்பது, பூரணயோகம். ஒரு செயல் பலர் கலந்திருப்பதால், காரணத்தை மற்றவர் மீது சுமத்துவது எளிது.

வெற்றிக்கு இறைவனும், தோல்விக்கு நாமும் காரணம்.

 

 

 

 



book | by Dr. Radut