Skip to Content

03.லைப் டிவைன்

 “ஸ்ரீ அரவிந்தம்”

லைப் டிவைன்

கர்மயோகி

X.Conscious Force                                                                                                            

10. சித் - சக்தி

                        Page No.81, Para No.3

We are aware of forms of Matter.

ஜடத்தின் உருவங்களை நாம் அறிவோம்.

All of them are physical.

அவை அனைத்தும் தொடு உணர்ச்சிக்குரியவை.

Even the most subtle is physical.

மிக சூட்சுமமானதிலும் ஜடத் தன்மையிருக்கும்.

All of them are built by their combinations.

அவை பூதங்களின் கலப்பால் உருவாகின்றன.

The five elements so combine.

பஞ்சபூதங்கள் அப்படி உருவாயின.

Our experience is sensible.

நம் அனுபவம் உணர்வாலானவை.

It depends on them.

இவ்வனுபவங்கள் அவற்றை நம்பியுள்ளன.

We receive the vibration.

நாம் அதிர்வைப் பெறுகிறோம்.

This is sense of sound.

இது சப்தமாகும்.

This is a world of vibrations.

இவ்வுலகம் அதிர்வுகளாலானது.

These are vibrations of Force.

அவை சக்தியின் அதிர்வுகள், கதிர்கள் எனலாம்.

The sense of touch arises by contact of things.

பொருள்கள் ஒன்றையொன்று தொடுவதால் தொடு உணர்வு வருகிறது.

Next is the sense of sight.

அடுத்தது பார்வை.

It is sustained by the force of light, fire and heat.

ஒளி, நெருப்பு, சூடு ஆகியவற்றால் பார்வை உண்டாயிற்று.

It is by the action of light.

இது ஒளியின் செயல்.

Light outlines and hatches forms.

ஒளி வரைந்து ரூபங்களை உற்பத்தி செய்கிறது.

There is a fourth element.

4ஆம் பூதம் உண்டு.

It is the sense of taste.

அது ருசி.

The fifth is the sense of smell.

ஐந்தாம் உணர்வு நுகர்வு, வாசனை.

All these are essentially responses.

இவையெல்லாம் அடிப்படையில் எதிரொலிகளாகும்.

They are responses to vibratory contacts.

அதிர்வுகளின் தொடர்புக்கு எழும் எதிரொலிகள் இவை.

The contacts are between force and force

சக்தி சக்தியைத் தீண்டுவதால் ஏற்படும் தொடர்பு இது.

The human mind wants to understand.

மனித மனம் புரிய முயல்கிறது.

It tries to understand forms.

அது ரூபங்களை அறிய முயல்கிறது.

These forms are real to its senses.

இந்த ரூபங்களைப் புலன்கள் அறியும்.

They are solid and durable.

அவை திடமானவை, நாட்பட்டு வருபவை,

In truth they are only temporary phenomenon.

உண்மையில் அவை எழுந்து மறையும் இயல்புடையவை.

It is like pure energy.

சுத்த சக்தி போன்றது உணர்வுகள்.

To the senses they are non-existent.

அவை புலன்கட்குப் புலப்படாதவை.

Also intangible and incredible.

கைக்கோ, மனத்திற்கோ தட்டுப்படாதது.

Man wonders about them.

மனிதனுக்கு அவை ஆச்சர்யம் தருபவை.

How can they be one permanent cosmic reality?

பிரபஞ்சத்தில் எப்படி இவை நிலையாக இருக்க முடியும்?

There is a gulf between Force and its modifications.

சக்திக்கும் அதன் முடிவான உருவத்திற்கும் இடையே வெளியுண்டு.

The Force is pure.

சக்தி சுத்தமானது.

Modifications go through several stages.

மாறும் உருவம் பல நிலைகளைக் கடந்து செல்லும்.

The ancient thinkers bridged that gap.

வேத காலத்து ஆராய்ச்சியாளர்கள் இடைவெளியைச் சரிப்படுத்தினர்.

Thus they satisfied themselves.

அது அவர்கட்குத் திருப்தி அளித்தது.

The ordinary human mind does not understand this gap.

எளிய மனிதன் இவ்விடைவெளியை அறியமாட்டான்.

It is prevented from understanding the gap.

இடைவெளியை அவன் அறியத் தடையுண்டு.

 Page No.81, Para No.4

There is the problems of consciousness.

சித் (ஜீவியம்) இருக்கிறது.

Our theory does not solve it.

நாம் அதை விளக்கவில்லை.

Vibrations of Force come into contact.

சக்தியின் அதிர்வுகள் தொடர்பு கொள்கின்றன.

This gives rise to consciousness.

அதன் ஜீவியம் இதன் மூலம் எழுகிறது.

They are conscious sensations.

அவை ஜீவனுள்ள உணர்வுகள்.

It is not explained how.

எப்படி எனத் தெரியவில்லை.

The Sankhyas were analytical thinkers.

சாங்கியம் என்பது ஆராய்ச்சி.

They saw behind the five elements two things.

பஞ்ச பூதங்களின் பின்னால் இரண்டைக் கண்டனர்.

They were Mahat and Ahankara.

அவை மகத், அகங்காரம்.

They were non-material principles.

அவை ஜடமான தத்துவங்களில்லை.

Mahat is Force.

மகத் என்றால் சக்தி.

It is the vast cosmic principle of Force.

பிரபஞ்சம் முழுவதும் பரவிய சக்தி அது.

The other is Ego.

அடுத்தது அகந்தை.

It is a formation.

அது ஓர் உருவம் அல்லது உருவகம்.

It is a divisional principle.

இது பிரிக்கும் தத்துவம்.

There is one more principle.

மேலும் ஓர் தத்துவம் உண்டு.

It is intelligence.

அது புத்தி.

They all three becomes active in consciousness.

இம்மூன்றாம் ஜீவியத்தில் (சித்தில்) செயல்படுகின்றன.

It is not by virtue of Force itself.

இவை சக்தியால் செயல்படவில்லை.

But it is by virtue of Conscious-Soul.

இவை ஆத்மாவால் செயல்படுகின்றன.

Conscious-Soul is inactive.

ஆத்மா சலனமற்றது.

These principles are reflected in it.

இம்மூன்று தத்துவங்களும் ஆத்மாவில் பிரதிபலிக்கின்றன.

That reflection changes these principles.

பிரதிபலிப்பு தத்துவங்களை மாற்றுகிறது.

That change is the hue of consciouness.

அம்மாற்றம் ஜீவியம் எனப்படும்.

                                                                   contd...

தொடரும்...

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

இன்னல்களைக் கடந்து, சவாலை ஏற்று வாழ்வில் முன்னேறுவது வாழ்வில் இன்பம். தனக்கே சவால் எழுப்பினால் அதைவிடப் பெரிய இன்பம் காத்திருக்கிறது. ஆன்மா, அளவு கடந்த இன்பத்தைத் தேடி, தன்னை அறியாமையிலிருந்து மீண்டும் கண்டுபிடிக்க முயல்கிறது. அதுவே துணை.

 

உலகிலில்லாத இன்பத்தை நாடுவது லீலை.

ஸ்ரீ அரவிந்த சுடர்

இடைவிடாத அழைப்பு முடிவு. அதன் முன் படிகளான முன்னிலைகள் : அழைப்புக்குள்ள திறமை, அழைக்க விருப்பம், ஆன்மா பரமனை அறிதல், முடிவாக இறைவனின் “அழைப்பு” அவனிதயத்தை எட்டியது.

 

 

 இறைவனை எட்டுவது அழைப்பு.

 

 

 

 

 

 book | by Dr. Radut