Skip to Content

10.அஜெண்டா

Agenda

Vol.I P.120 - Knowledge of past life comes from an identification with the origin

                      ஆதியோடு இணைந்தால் பூர்வஜென்ம ஞானம் வரும்

பூர்வ ஜென்ம ஞானம் சம்பந்தமாக அன்னை வாழ்விலுள்ளவை.

எவருடைய பூர்வ ஜென்மத்தையும் அறிய விரும்பினால் அறியும் திறனுடையவர் அன்னை.

பலருடைய பூர்வ ஜென்ம அனுபவங்களை அன்னை விளக்கியுள்ளார்.

அது தேவையில்லை என ஸ்ரீ அரவிந்தர் கூறியதால் நிறுத்திவிட்டார்.

தமக்கே தம் பூர்வ ஜென்மம் தெரிவது பலன் தரும். பிறர் கூறுவதால் பலனில்லை என்று அன்னை கூறுகிறார்.

அன்னையை அறிந்து யோகப் பலன் பெறுபவர் பல ஜன்மப் பலனை அடைகிறார்.

பொதுவாக ஆணாய்ப் பிறந்தவர் தொடர்ந்து ஆணாகப் பிறப்பார்.

ஆன்மாவுக்கு மாறும் - பெண் ஜன்மம் ஆண் ஜன்மமாக - திறனிருந்தாலும் பெரும்பாலும் மாறுவதில்லை.

என்றும் உயிரோடுள்ளவரை நாம் இறந்தவர் என்கிறோம்.

       அறியாமையை 7 வகைகளாகப் பிரித்து முதல் வகை என்ன செய்வது என்று தெரியாத அறியாமை என்றும் முடிவானதை ஆதியை அறியாதது எனவும் கூறிய பகவான்,

       ஆதியை அறிந்த பின்னரே என்ன செய்வது எனத் தெரியும் என்கிறார். அன்னை,

       ஆதியை அறிந்தால் பூர்வ ஜென்ம ஞானம் பிறக்கும் என்கிறார். எனவே,

       இன்று அடுத்த நிமிஷம் என்ன செய்யவேண்டும், எதைச் செய்தால் தவறே வாராது என அறிய பூர்வ  ஜென்ம ஞானம் உதவும் என அறிகிறோம்.

       மறு பிறவியிருப்பதால் ஆன்மா வளர முடிகிறது. ஒரே பிறவியில் ஆன்மா தனக்குரிய முழு வளர்ச்சியைப் பெற முடியாது என்கிறார் பகவான் ஸ்ரீ அரவிந்தர்.

பிரம்ம ஞானம் என்பது ஆதியான பிரம்மத்தை அறிவது.

பூர்வ ஜென்ம ஞானம் பிரம்ம ஞானத்திற்கு உதவும்.

எதைச் செய்தால் தவறே வாராது என்பது பூர்வ ஜென்ம ஞானத்தைப் பெற்ற பிரம்ம ஞானத்திலிருந்து எழுவது.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

அருள் தன்னைச் சூழ்ந்துள்ளதை உணர்பவனுக்கு ஆபத்து வருவதில்லை. அருள் மீது நம்பிக்கையுள்ளவர் தன்னுடன் விபத்து நிகழ முடியாத சூழலைக் கொண்டு வருவார்.

விபத்தை விலக்கும் அருளின் சூழல்.

 



book | by Dr. Radut