Skip to Content

சாவித்திரி

P.10 This was the day when Satyavan must die

இன்று சத்தியவான் மரணமடைய வேண்டிய தினம்

மேதை என்பதற்குப் பல அடையாளங்களுண்டு. சீனுவாச இராமானுஜம் கணக்கைப் பார்த்ததும் அதைப் போட்டுப் பார்க்காமல் விடையை அறிந்தார். அதுவே அவர் மேதாவிலாசம். பரீட்சை பேப்பரைத் திருத்தியவர் பையன் காப்பி அடித்ததாக நினைத்து பூஜ்யம் மார்க் போட்டார்.

மேதையின் அறிவு சிறப்பாக வெளிவருவதை உலகம் தவறாக அறியும். ஒருவன் சிறப்பை உலகம் தவறு எனக் கண்டால், அவர் மேதை என நாம் அறியலாம். மேற்கண்ட வரியை ஸ்ரீ அரவிந்தர் முழுக் காவியத்திலும் சிறப்பான அடியாகக் கருதினார். அதை ஒரு சாதகர் திருத்தச் சொன்னார்.

சாவித்திரியின் பயணம் சத்தியவானின் மரணத்தில் ஆரம்பிக்கிறது. காவியம் அஸ்வபதியின் யோகத்தில் ஆரம்பித்து, சாவித்திரியின் பிறப்பு, வளர்ப்பு, திருமணம் என்று தொடர்ந்து சத்தியவானின் மரணத்திற்கு வரும். Epic poetry பெருங்காப்பியம் நடுவில் ஆரம்பிப்பது என்பது மரபு, மரபை ஒட்டி ஸ்ரீ அரவிந்தர் காவியத்தை இங்கு ஆரம்பிக்கிறார். முதலில் ஸ்ரீ அரவிந்தர் சாவித்திரி எழுத ஆரம்பித்தது 1920க்கு முன். அதை 14 வரியுள்ள sonnet ஆக எழுதினார். சாவித்திரி மட்டுமே பகவான் இறுதிவரை -1950 -எழுதிய நூல். காவியம் 12 புத்தகம் என்பது மரபு. அவர் திட்டம் அதுவன்று. ஆனால் 12 புத்தகமாகவே சாவித்திரி முடிந்தது. முதலில் தாமே எழுதினார். கையால் எழுதுவதும் உண்டு. டைப் அடிப்பதும் உண்டு. பார்வை மங்கியபின் பகவான் சொல்ல நிரோத்பரன் எழுதினார். 1950 ஜுன்மாதம் பகவான் நிரோத்பரனிடம் 'சாவித்திரியைச் சீக்கிரம் முடிக்க வேண்டும்' என்றார். அதுபோல் முடித்தார். 1950 டிசம்பரில் பகவான் சமாதியான பின்னரே அவர் கூறியதன் அர்த்தம் விளங்கியது. 

  • அமரத்துவத்தின் ஆனந்தம் புவியின் பரிசு.
  • காலத்தின் கடுமையைக் கருதும் மனநிலை.
  • ராஜ்யத்தின் உரிமை தணியாத ஆசை.
  • தீர்க்கமான அலட்சியத்தின் தூரத்துப்பார்வை.
  • வலியின் சிலையான சலனமற்ற தெய்வம்.
  • தணியாத பாதகத்தின் தர்மகர்த்தா.
  • வேதனையான விவாதத்தின் சுணக்கமான மையம்.
  • இருளினின்று பிறக்கும் தெய்வங்கள்.
  • சுவர்க்கத்தின் வேதனையும் போராட்டமும்.
  • சலனமற்ற சக்தியாக அவள் எழுந்தாள்.
  • காலத்தையும் விதியையும் காணும் ஆன்மா.
  • ஜீவராசிகளின் அஞ்ஞானக் குரல்.
  • காலத்தின் கதியை விழித்துணர்ந்தாள்.
  • அமரனின் அரவணைப்பில் மீண்டும் துவக்கினாள்.
  • வேதனையும் ஆசையும் செய்யும் தியாகம்.
  • சிந்தாத கண்ணீரின் நித்திய சடங்கு.
  • தெய்வத்தின் கடுமையால் பீடிக்கப்பட்டாள்.
  • காலம் கடந்த கவலையின் ஆழம் வாழ்வின் லட்சியமன்று.
  • புவியின் வேதனைக்கு வாரிசு.
  • தழலான இதயத்தின் நிழல்.

Comments

சாவித்திரி Para  5  -  Line 

சாவித்திரி

 
Para  5  -  Line  5      -   ள்ர்ய்ய்ங்ற்   -   sonnet
Para  5  -  Line  9      -  நிரோத்பரனிடம் "சாவித்திரியைச்  -   நிரோத்பரனிடம் 'சாவித்திரியைச்
 
 
motnir



book | by Dr. Radut