Skip to Content

சிறு குறிப்புகள்

சென்னை I.G.

1963இல் நேரு அன்னையை வந்து தரிசித்தார். நேரு தரிசனம் என்று வரவில்லை. 1934இல் அவர் புதுவை வந்த பொழுது திலீப்குமார் ராய் என்ற அவர் நண்பர் ஆசிரமத்திலிருந்தார். அவரை நேரு பார்க்க விரும்பினார். ஆனால் ஸ்ரீ அரவிந்தர் அதை அனுமதிக்கவில்லை. அதே ஆண்டு காந்திஜி புதுவை வந்தார். ஸ்ரீஅரவிந்தரைச் சந்திக்க விரும்பினும் ஸ்ரீஅரவிந்தர் மாலை 4மணிக்குச் சந்திக்கச் சம்மதித்தார். தமக்குச் சிதம்பரத்தில் பொதுக் கூட்டமிருப்பதால் மாலை 4மணி வரை காத்திருக்க இயலாது என்று காந்திஜி போய்விட்டார்.

நேரு ஆசிரமச் சாதகர் இல்லை என்பதால் தம் சாதகரை ஸ்ரீஅரவிந்தர் சந்திக்க அனுமதிக்காத காலம் அது.

நேரு 63இல் வந்தபொழுது அன்னையை ஓரிரு நிமிடம் பார்க்க என வந்தவர் 15 நிமிடமிருந்தார், தியானம் செய்தார். அவர் வெளியே வந்தவுடன் அவருடன் வந்த அனைவரும் (நேருவை அனுப்புமுன்) அன்னை தரிசனம் செய்ய பஸ் ஸ்டாண்டில் Qக்குள் சண்டையிடுவதுபோல் முண்டியடித்துக் கொண்டு அன்னை அறையில் நுழைந்த பரிதாபக் காட்சி அன்னையை மனம் உடையச் செய்தது.

சென்னை I.G. அன்னை முன் வந்து நின்றார். "அவர் வந்தவுடன் பெரும் தன்மை என்னை வந்து கவ்வியது'' என்றார் அன்னை. நேருவுடன் வந்தவர்கள் மத்திய அரசு மந்திரிகள், அகில இந்தியத் தலைவர்கள். அவர்களிடம் அன்னை பெருந்தன்மையைக் காணவில்லை.

இன்று வந்தவர்களில் பெருந்தன்மை நிறைந்தவர் அப்போலீஸ் அதிகாரி மட்டுமே

என அன்னை கூறினார். பெருந்தன்மை ஆன்மீகத்திற்குறியது. தொழில் எதுவானாலும் மனம் உயர்வாக இருந்தால் அன்னையிடம் ஆன்மீகப் பலனைப் பரிசாகப் பெறலாம் என்பதை அன்னையின் கூற்று விளக்குகிறது. அன்னைமட்டுமே ஒருவர் ஆன்மீக உயர்வை கண்டு கொண்டு பரிசளிக்க முடியும்.

***********

Comments

சிறு குறிப்புகள் Para  4  - 

சிறு குறிப்புகள்

 Para  4  -  Line 3     -  அவர்களி டம்      -   அவர்களிடம்

motnir



book | by Dr. Radut