Skip to Content

இம்மாதச் செய்தி

கை, கால், உடலின் பகுதி என்பதால் உடலை விட்டு அவற்றால் பிரியமுடியாது. அன்பால் இணைக்கப்பட்ட குடும்பத்தினர் அதன் உயிரின் பகுதி என்பதால் குடும்பத்திலிருந்து அகல முடியாது. நம் நம்பிக்கைகள் அறிவின் பகுதி என்பதால் ஒரு வினாடி கூட முக்கியமான நம்பிக்கைகளை அகற்ற முடியாது. பக்தன் பக்தியால் இறைவனுடைய பகுதியாய் விட்டான். அவன் ஆத்மா இறைவனின் பகுதி. அடுத்த உயர்ந்த கட்டத்தில் அவன் மனம் இறைவனின் மனத்தின் பகுதி. கடைசிகட்ட உயர்வில் பக்தனின் உடல் இறைவனின் உடலின் பகுதியாகும். ‘ க்ஷணம் கூட அவை பிரிந்திருக்க முடியாது, பிரிந்தால் உயிர் பிரிந்துவிடும்.

"அன்னையே என் உயிரையும், உடலையும் உன் உயிரிலும் உடலிலும் ஏற்றுக்கொண்ட பராசக்தியே, கனவிலும், நனவிலும், தியானத்திலும், நிஷ்டையின் சமாதியிலும் கூட நான் உன்னை விட்டகல முடியாதன்றோ? அதற்கறிகுறியாக என் தலை மீது கிரீடமாக வைத்தது உன் பாதாரவிந்தமன்றோ? உன் சாம்ராஜ்ய சட்டம் எது அம்மா?''

அன்பு அன்னையின் அவசரச் சட்டம்.

(Divine Love is the Law of HER Kingdom)



book | by Dr. Radut