Skip to Content

பிரார்த்தனை பலிக்க வேண்டும்

தம்பி - Mother is infinity அன்னை என்பது அனந்தம், அதிர்ஷ்டம் என்பதை சேல்ஸ் மூலமாகச் சொல்லியது போல், வேறு வழியாகவும் சொல்ல முடியுமா?

அண்ணன் - இந்தப் புதிய Doman method டோமான் முறை பள்ளியைப் பார்த்திருக்கிறாய் அல்லவா? அதில் infinity அனந்தம் தெரியவில்லையா? பார்த்ததைச் சொல்லேன்.

தம்பி - 3 வயதில் பேசாத குழந்தைகளும் உண்டு.கொஞ்சம் பேசும் குழந்தைகளும் உண்டு. இந்த பள்ளியில் 2 முதல் 3 வயது குழந்தைகள் 4 மாதத்தில் ஏராளமாகக் கற்றுக்கொள்கின்றன.இந்தியாவின் 22 மாநிலங்களின் பெயர்கள், நதிகள் பெயர்களை எல்லா குழந்தைகளும் அறியும்.இங்கு A,B,C,D சொல்லித் தாராமல் நேரடியாகச் சொற்களைச் சொல்லித் தருகிறார்கள்.அம்மா அப்பா என்ற இரு வார்த்தைகள் மட்டும் பேசிய குழந்தைகள் 3 ஆம் மாதம் "Happy hippos live in African swamps" என்பதை சரளமாகப் படிக்கின்றன.3 வயது 2 மாதமான குழந்தை இதுபோல் 12 வாக்கியங்களைப் படிக்கிறான்.150 ஆங்கில சொற்களை 4  மாதத்தில் கற்றுக் கொண்டிருக்கிறான்.  Cushy, sofa, snow , spring போன்ற சொற்கள் அவை.

குழந்தைகட்கு இங்கு கட்டுப்பாடில்லை.பாடம் நடத்தும்பொழுது ஒரு குழந்தை எழுந்து சற்று தூரத்தில் போய் விளையாடியது. ஆசிரியர் கண்டிக்கவில்லை.

வகுப்பு முடிந்தவுடன் வகுப்பில் நடந்த பாடத்திற்கு மற்ற குழந்தைகள் சொல்லும் பதிலை இக்குழந்தையும் சொல்கிறது.

கண்டிக்காவிட்டால் எழுந்து விளையாடப் போன குழந்தையும் பாடத்தைக் கேட்டுக்கொண்டிருந்து கற்றுக்கொள்கிறான். இம்முறையில் படித்த 11 வயதுப் பெண்ணைப்பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.750 பக்க ஆங்கில நாவலை ஒரே மூச்சாக ஒரே நாளில் படித்துவிட்டாள். எதை வேண்டுமானாலும் கேளுங்கள் சொல்கிறேன் என்கிறாள்.

அண்ணன் - இதில் infinity அனந்தம் தெரியவில்லையா?14 வருஷம் ஆங்கிலம் பயின்று SSLC முடித்த பிள்ளைகள் ஆங்கிலத்தில் பெறும் அறிவை குழந்தைகள் குறுகியகாலத்தில் பெறுவது அனந்தமல்லவா?இதையே தொடர்ந்தால் 10 வயதில் குழந்தைகட்கு B.A.,M.A., அளவு அறிவு எளிதாக வருமல்லவா?

அன்னை முறையின் தத்துவம் இதுதான்.இதன் அம்சங்கள் இரண்டு

  1. Education must be perfectly organised.படிப்பை முறைப்படுத்த வேண்டும்.
  2. The child should learn out of curiosity.நாமே சொல்லிக் கொடுக்காமல் குழந்தை தானே ஆசையாகக் கற்றுக்கொள்ள வேண்டும்.

தம்பி - அதுபோல் நாம் அன்னையிடம் செய்ய வேண்டியது என்ன?

அண்ணன் -

  1. நாம் செய்யும் காரியங்களை முறைப்படுத்தி organise செய்து முடித்துவிடவேண்டும்.
  2. அன்னை மீது ஆர்வத்துடன் நம் செயலில் செயல்படும்படி அழைக்க வேண்டும்.

தம்பி - சொல்வது சரிதான்.நானும் ஒரு சில உதாரணங்களைப் பார்த்துள்ளேன். organisation & sincerity முறையும், உண்மையுமிருந்தால் தொழில் அளவிறந்து பெருகும்.இதுபோல் செய்த வேலையில் 1 1/2 ஆண்டில் முதல் 30 பங்கு பெருகியது.10ஆம் வகுப்பு பையன், M.A. பையனை விட சிறப்பாக 1 வருடத்தில் ஆங்கிலம் எழுதக் கற்றுக்கொண்டான்.

அண்ணன் - வீடு, ஆபீஸ், தொழில், நட்பு என்பதில்லை.துறை எதுவானாலும் மனம் உண்மையாகவும், செயல் சிறப்பாகவுமிருந்தால் அங்கு அன்னை அளவிறந்து செயல்படுவார்.அன்பர்கள் வீடுகள் அனைத்தும் அபரிமிதமான வருமானத்தைப் பெறும் வழி. மாதம்தொறும் லட்சக்கணக்காக வரும்.இந்த இரண்டும் இருக்குமா?

உண்மை, சிறப்பான செயல்

தம்பி - உண்மையைப்பற்றி நாம் இவ்வளவு பேசுகிறோமே, உண்மையான அதிகாரியிடம் file எடுத்துப் போனால் எரிந்து விழுகிறாரே ஏன்?அதிகாரி கேட்ட விஷயங்களைச் சரிவரச் சேகரித்துக்கொண்டு, அவரைத் திருப்திப்படுத்தும் எண்ணத்துடன் அவரிடம் போனால் திட்டுகிறாரே?ஏன்?

அண்ணன் - விவரமாகச் சொல், யார் இது?

தம்பி - மந்திரி P.A.,. எல்லாப் புள்ளிகளையும் ஒன்றுவிடாமல் சேகரம் செய்துகொண்டு கொடுத்தால் சந்தோஷப்படுவார் என்று போனான்.திட்டினாராம்.

அண்ணன் - தன்மீது சந்தோஷப்படுவார் என்று போனானா? கேட்டியா?

தம்பி - ஆமாம் அதுதான்.

அண்ணன் - மந்திரி தன்னை மெச்சுவார் என எதிர்பார்த்தால், பலன் தலைகீழே வருவது நம் சட்டப்படி நியாயம்தானே. வேலையைச் சரிவரச் செய்துவிட்டு எதிர்பார்ப்பில்லாமல் போனால், திட்டு வாராது.சந்தோஷப்படுவார். எதிர்பார்ப்பது வேலைக்குரிய அழகல்ல.நாம் போகும் பாதை வேறு.அன்னை செயல்படும் பாதை வேறு.

தம்பி - இது நான் அடிக்கடி கேள்விப்படுகிறேன்.விவரமாகச் சொல்லுங்கள்.

தொடரும்...

 

 

யோக வாழ்க்கை

"யோக வாழ்க்கை" Life Divine உடைய முக்கிய கருத்துகளை வாழ்க்கைவாயிலாகத் தெரிவிப்பது.

********

 

பஸ் பிரயாணம்

இரவு மணி 2.மதுரை பஸ் ஸ்டாண்ட்.இரு பெண்கள் தங்கள் பயணம் செய்த பஸ்ஸில் பையையும், பர்ஸையும், வைத்துவிட்டு இறங்கிப் போனார்கள்.அவர்கள் வருமுன் பஸ் புறப்பட்டுப் போய்விட்டது.இவர்கள் தரிசனம் முடித்துப் போகின்றவர்கள்.ஒரு பெண்ணை, கணவன் உத்தரவுடன் அனுப்பியிருக்கிறான். பெண்ணின் மாமியாருக்குத் தரிசனம் பிடிக்கவில்லை.மறுநாள் காலை 9 மணிக்கு அவள் வீட்டில் இல்லாவிட்டால் களேபரம் நடக்கும். இருவருக்கும் பயம் பிடித்துக் கொண்டது.பயத்தை மீறி அன்னையைக் கூப்பிட்டனர்.கூப்பிட்டுக் கொண்டேயிருந்தனர். வேறொரு பஸ் கண்டக்டர் இவர்கள் மீது அனுதாபப்பட்டு விவரம் கேட்டார்.தம் பஸ், அவர்கள் பஸ்ஸில் பின்னால் போவதால் வேகமாகப் போய் பிடிக்கலாம் என்று தைரியம் கூறினார்.அடுத்த ஊருக்குப் போன் வழி செய்தியை அனுப்ப போன் வேலை செய்யவில்லை.

இந்த பஸ்ஸில் இருவரும் ஏறிக்கொண்டனர்.கண்டக்டர் தம் இடத்தில் அவர்களை உட்காரவைத்தார்.டிக்கட் வாங்கவில்லை. வாங்க முடியாது.பணமில்லை.அடுத்த ஊர் போவதற்குள் செக்கிங் வந்தால் கண்டக்டர் பாடு கஷ்டம்.உதவப் போய் தொந்தரவு.முன் பஸ் கிடைக்கும் என நிலையில்லை.இடைவிடாது அன்னையைத் தீவிரமாக அழைத்தனர் இருவரும்.

கோவில்பட்டி பஸ் ஸ்டாண்டில் இந்த பஸ் நுழையும்பொழுது, முன் பஸ் வெளியே வருகிறது.பையும், பர்ஸும் அப்படியே இருந்தன!

அன்னை தவறுவதில்லை

அழைப்பு தவறியதேயில்லை.

அழைக்க மனிதன் தவறுவதுண்டு.

********

 

சைத்தியப் புருஷன்

பூரண யோகத்தை Spiritual communism என ஒருவர் எழுதினார். காரல்மார்க்ஸ் தத்துவப்படி சோஷலிசம் என்றால் ஒருவன் உழைத்து, உழைத்ததன் பலன் முழுவதும் எவரும் ஏமாற்றாமல் பெறுவதாகும். அடுத்த நிலை கம்யூனிசம்.அங்கு தன்னால் முடிந்த உழைப்பைத் தந்து, தனக்கு வேண்டிய அனைத்தையும் பெறுவது. ஒருவன் பாக்டரியில் உழைப்பதால் 3 பேர் சாப்பிடமுடியுமானால், அவன் வீட்டில் 9 பேரிருந்தால் அவனுக்கு 9 பேருக்குத் தேவையான கூலியை பாக்டரி அளிக்கும். காரல்மார்க்ஸ் கூறியது அது.ரஷியாவில் நடந்தது முதல்நிலை, சோஷலிஸம்.

நல்ல குடும்பங்களில் இதே தத்துவத்தை நாம் காண்கிறோம். யார் சம்பாதித்தாலும், தேவையுள்ளவர் பயன்பெறுவது குடும்பம். 3 அண்ணன் தம்பிகள். முதல்வருக்கு 9 பிள்ளைகள், அடுத்தவர்க்கு 1 பையன், கடைசி தம்பிக்கு 2 பெண்கள். பாகம் சமமாகப் பிரிப்பது சட்டம்.spiritual communism சமபாகம் தாராது. தேவைப்பட்டதைத் தரும்.அதிகப்பிள்ளைகள் உண்மையில் சமபாகம் பெற்றால் சிறுபலன் பெறுவார்கள்.9 பிள்ளைகளுள்ளவர்க்குச் சமபாகம் தாராமல், அதிகமான சொத்தை தம்பிகள் கொடுத்தார்கள்.இது குடும்பம், பிஸினஸில் இது நடக்குமா என்பது கேள்வி.

அமெரிக்கர்கட்குப் பணம் முக்கியம்.உறவன்று, $20,000 டாலருக்கு ஒருவர் சிறுகம்பனியில் ஷேர் வாங்கினார்.இவர் ஓய்வுபெற்ற அதிகாரி.கம்பனி 12 மடங்காகியது.இவருடைய ஷேர் $240,000 மதிப்பாயிற்று.வேறு ஊர் போக அவர் தீர்மானித்தார்.எந்த ஊர் போனாலும் ஷேரை விற்க அவசியமில்லை.இந்தக் கம்பனி முதலில் நஷ்டப்பட்டு பிறகு பெரியதாயிற்று.அப்படி கம்பனி வளர உதவியவர் ஒரு அக்கௌண்டண்ட், ஒரு சேல்ஸ்மேன்.இந்த அதிகாரி ஊரைவிட்டுப் போகும்பொழுது தம் ஷேர்களை, கம்பனியைக் காப்பாற்றிய இந்த இருவருக்கும் விற்க விரும்பினார். "நீங்கள் இக்கம்பனிக்கு தூண் போலிருந்ததால் என் ஷேரை நான் வாங்கிய $20,000 விலைக்கே ஆளுக்குப் பாதியாக விற்க விரும்புகிறேன்'' என்றார்.அவர்களிடம் $10,000 பணமில்லை.கம்பனி முதலாளி ஷேர் $20,000க்கே வருகிறது என்றவுடன் ஆவலாக வாங்க விரும்பினார்.ஆனால் விற்பவரின் மனநிலையை அறிந்து விலகினார். யாருக்கு விற்கப் பிரியப்பட்டாரோ, அவர்களிடம் பணமில்லை என்றவுடன் முதலாளி அவர்கள் ஷேரை சொற்பவிலைக்கு வாங்கிப் பயனடைய வேண்டும் என்று தாம் அவ்விருவருக்கும் அப்பணத்தை கடனாகக் கொடுத்தார்!

பணத்தை முதன்மையாக அனைவரும் கருதினாலும், சைத்தியப்புருஷன் விழிப்பாகச் செயல்பட்டால் இதுபோல் நடப்பான்.இது நம் நாட்டில் பண்புக்குரியது. இதுபோல் செயல்பட விரும்புகிறவர்கள் அன்னைக்குரியவர்கள்.

  • நம்மால் முடிந்த அளவு உழைத்தால், அன்னை நமக்கு வேண்டிய அனைத்தையும் தருவது அன்னை சட்டம்.
  • நாம் பிறருடன் அதுபோல் செயல்படுவது அன்னையை வணங்குவதற்கு அறிகுறி.

*********

Comments

பிரார்த்தனை பலிக்க

பிரார்த்தனை பலிக்க வேண்டும்
 
Para  2   -   Line  1   -  methodடோமான்               -      method டோமான்
Para  2   -   Line  1   -  பள்üயைப்                         -      பள்ளியைப்
Para  3   -   Line  3   -  மாநிலங்கüன்                    -     மாநிலங்களின்
Para  4   -   Line  1   -  கொண்டிருக்கிறான்.         -     150 ஆங்கில சொற்களை 4  மாதத்தில் கற்றுக் கொண்டிருக்கிறான்.
Para  3 &  Para 4     -  இரண்டு Paragraph-களையும்   இணைக்கவும்
Para  7   -  Line 3     -  நாüல்                                        - நாளில்
Para 14  -  Line 1     -  செயல்படும்படி அழைக்க வேண்டும்.  -  2) அன்னை மீது ஆர்வத்துடன் நம் செயலில் செயல்படும்படி அழைக்க வேண்டும்.
Para  15 &  Para 16     -  இரண்டு Paragraph-களையும்   இணைக்கவும்
Para  21 -  Line 1         -  புள்üகளையும்                  -  புள்ளிகளையும்
 
பஸ் பிரயாணம்
 
Para 3   -   Line  1       -   வெüயே                              -   வெளியே
 
சைத்தியப் புருஷன்
 
Para 1  -    Line  6       -     அüக்கும்                           -   அளிக்கும்
Para 1  -    Line  7       -     சோஷஸம்                      -   சோஷலிஸம்
Para 2  -    Line  1       -     குடும்பங்களி ல்              -   குடும்பங்களில்
Para 3  -    Line  8       -     அவர்கüடம்                      -   அவர்களிடம்
Para 3  -    Line  9       -     முதலாü                           -    முதலாளி
 
 
motnir
 



book | by Dr. Radut