Skip to Content

04. யோக வாழ்க்கை விளக்கம்

யோக வாழ்க்கை விளக்கம்

22/34. சமர்ப்பணமான எண்ணம் பிரபஞ்ச எண்ணமாகும்.

  • சமர்ப்பணம் என்பது ஆயிரம் நிலைகளில் உள்ளது.
  • வீடு, டிரஸ், புத்தகம், ஊர், படிப்பு, மனிதனுக்கு எத்தனை நிலைகள் உண்டோ அத்தனை நிலையும் சமர்ப்பணத்திலுண்டு.
  • அன்னை கூறும் சமர்ப்பணம் நான்கு. தூங்கும்முன், சாப்பிடும்முன், பேசும்முன், செயல்படும்முன் சமர்ப்பணம்.
  • ஒரே காரியத்தைப் பல நிலைகளில் சமர்ப்பணம் செய்யலாம்.
  • தூங்குவதைச் சமர்ப்பணம் செய்தால் நிம்மதியாகத் தூங்கலாம், கெட்ட சொப்பனம் வராது, எழும்பொழுது ஏராளமான சக்தியிருக்கும், மனம் சமர்ப்பணத்தால் குதூகலமாக இருக்கும். தூக்கம் தியானமாகும்.
  • சாப்பிடும்முன் சமர்ப்பணம் செய்தால், தடையின்றி சாப்பிடலாம், சாப்பாடு ருசிக்கும்.
  • சமர்ப்பணம் ஆழ்ந்தால் ஒரு நாள் சமர்ப்பணத்தால் இனி சாப்பாட்டு நேரம் தொந்தரவு தடை வராது.
  • சாப்பாட்டுக்குப் பஞ்சமானவன் ஒரு வேளை சாப்பாட்டைச் சமர்ப்பணம் செய்தால் பஞ்சம் போகும்.
  • ஒவ்வொரு கவளமும் சமர்ப்பணம் செய்வது சாப்பாட்டை யோகமாக்குவது.
  • சமர்ப்பணம் செய்தால் சிடுமூஞ்சி சிரித்த முகத்துடன் பரிமாறுவாள்.
  • சமர்ப்பணம் சர்வ அர்ப்பணம். சமர்ப்பணத்தால் திருடு தெய்வ கைங்கரியமாகும்.
  • சமர்ப்பணத்தையே சமர்ப்பணம் செய்யும் நேரம் உண்டு.
  • ஊரெல்லாம் சொர்க்கம், காண்பவரெல்லாம் தெய்வமாக்கக் கூடியது சமர்ப்பணம்.
  • ஒரு வியாதி வந்தால் குணமாகாது என்று டாக்டர் கூறுகிறார்.
  • இன்னொரு வியாதியை எட்டு மாதத்தில் குணப்படுத்தலாம் என்கிறார்.
  • இன்னொரு வியாதியை ஆப்பரேஷன் செய்து குணப்படுத்தலாம் என்கிறார்.
  • வேறொரு வியாதியைக் குணப்படுத்த treatment வியாதியை விடக் கடுமையானது என்கிறார்.
  • இது போல் எந்த வியாதியும் சமர்ப்பணத்தால் ஒரு படி கடுமை குறையும்.
  • முடியாது என்பது முடியும்.
  • ஆப்பரேஷன் என்பது இல்லாமல் முடியும்.
  • கடுமையான வைத்தியம் கடுமையின்றி முடியும்.
  • ஆபத்தான வியாதி குணமாகியது. அது ஆப்பரேஷனால். 15 நாள் படுக்கையில் தலையை தலையணையில் முகத்தை வைத்துக் கொண்டு படுக்கச் சொன்னார்.
  • சமர்ப்பணத்தால் அதை ஆப்பரேஷனில்லாமல் குணம் செய்தார் ஒருவர்.
  • மேற்சொன்ன எல்லா வியாதிகளையும் மூன்று நாள் பிரார்த்தனையால் குணப்படுத்தியவர் பலர்.
  • வியாதி என்று வந்து விட்டால் பயம் வரும். சமர்ப்பணம் தோன்றாது, அன்னை மறந்து போகும் டாக்டர் மலை போலிருப்பார். குணமானால் போதும் என்றிருக்கும்.
  • யானை வாயில் போன கரும்பு, எதிரியை நம்பி, நண்பனாக நம்பி எல்லாப் பிடியையும் கொடுத்தபின் அவன் எக்காளமிடுகிறான். “உன்னை நடுத்தெருவில் நிற்க வைத்து வேடிக்கை பார்ப்பேன்” என்கிறான்.
    அன்பர்க்குச் சமர்ப்பணத்தில் நம்பிக்கையுண்டு.
    எதிரி கூறியது அத்தனையும் நடந்தது, அவனுக்கே நடந்தது, அபரிமிதமாகவும் நடந்தது, ஆயுள் முழுவதும் நடந்தது.
  • சமர்ப்பணமான எண்ணம் பிரபஞ்சமான எண்ணமாகும் எனில் அன்பருக்குக் கிடைத்தது அவர் மூலம் அனைவருக்கும் கிடைக்கும் என்று பொருள்.
  • தமிழ் நாட்டில் ஒரு இன்ஜீனியரிங் காலேஜ் 500 ஆகியது.
  • ஆறு பைசா கூலி வாங்கியவர் 600 ரூபாய் கூலி வாங்குகிறார்.
  • கிழிந்த புடவை கிடைக்காதவருக்குப் புதுப்புடவை ஏராளமாக வருகிறது.
  • ஒரு வேளை சாப்பாடில்லாதவர்க்குச் சொந்தமாக ஆறு வேளை சாப்பாடு வருகிறது.
  • ஒரு மகாநாடும் நடத்தாத academy இருபது மகாநாடு நடத்துகிறது.
    சமர்ப்பணம் பெரியது. அளவில் பெரியது.
    தரத்தில் பெரியது. பிரபஞ்சம் முழுவதும் பரவுவது, ஒரு கட்டுரை எழுத ஆசைப்பட்டால் சமர்ப்பணம் 800 கட்டுரைகளை வெளியிடுகிறது.
  • இது எண்ணம் சமர்ப்பணமாகும் பொழுது. அடுத்த கட்டத்தில் உணர்ச்சி சமர்ப்பணமாகும். அதற்கடுத்த கட்டத்தில் செயல் சமர்ப்பணமாகும்.
    முடிவான கட்டத்தில் ஜீவன் சமர்ப்பணமாகும்
    ஒரு அன்பரின் ஜீவன் சமர்ப்பணமானால் உலகில் அனைத்து மக்கள் ஜீவனும் சமர்ப்பணமாகும்
  • ஒருவர் சிறப்பு உலகைக் காக்கும் என்று சாவித்திரியில் பகவான் கூறுகிறார்.
  • கடந்த கால கர்மம் உண்டு என நம்புபவர்கட்கு அத்தனை கர்மங்களும் சமர்ப்பணத்தால் புண்ணியமாகும்.
  • சமர்ப்பணம், பிரபஞ்சத்தைத் தழுவும், அதைக் கடந்த பிரம்மத்தைத் (Transcendent) தழுவும்.
  • சமர்ப்பணம் என்பது யோகப் பரிபாஷை.
  • பரிபாஷை எல்லாத் துறைகட்கும் உண்டு.
  • டாக்டர், வக்கீல், இன்ஸுரன்ஸ், வைஷ்ணவர், சைவர், ஆசிரியர், படிக்காத பெண்கள் எனப் பல வகையானவரிடம் அவரவர்க்குரிய பரிபாஷை உண்டு.
  • அப்படி மாறியவை நாம் அறிவோம். நமஸ்காரம் போய் வணக்கமும், அது போவதற்கு முன் நமஸ்தேயும், அதன் பின் ஹல்லோவும், தற்பொழுது ஹாய் வந்ததும் பரிபாஷை காலத்தால் மாறுவதாகும்.
  • சமர்ப்பணம் என்ற சொல் ஆரம்பத்தில் எதைக் குறிக்கிறது?
  • எவரும் ஒரு விஷயத்திற்குக் கட்டுப்பட்டவர். இளைஞன் குடும்பத்திற்குக் கட்டுப்பட்டவன். மனிதர்கள் ஊருக்குக் கட்டுப்பட்டவர். எவரும், எந்த நல்லவரும் தர்மத்திற்குக் கட்டுப்பட்டவர், அரசியல்வாதி கட்சிக்குக் கட்டுப்பட்டவன். சுயநலம் எதற்குக் கட்டுப்பட்டாலும், அதையும் கடந்து சுயநலத்திற்குக் கட்டுப்பட்டவன்.
  • திறமைசாலி, சுயநலமானால், அவன் பரோபகாரம், பெருந்தன்மை, ராஜதர்மம் எதுவும் அத்துறையில் செயல்பட்டாலும் அங்கும் இலட்சியத்தைக் கடந்து, திறமை, திறமையாகச் செயல்படும் பொழுது தன் செயலால் பிறர் எவர்க்கும் ஒரு துளி வசதியும் வராமல் கண்காணிப்பவன் சுயநலத்திலும் சிகரமான சுயபல லட்சியமுள்ளவன்.
  • பூனை எலியைக் கொல்வது ஒரு செயல். அது பசிக்காகக் கொல்கிறது. அதுவே அதன் தர்மம். யோக பாஷையில் - பரிபாஷையில் - பூனை எலியைக் கொல்வதைத் தன் பசிக்குச் சமர்ப்பணம் செய்கிறது எனலாம்.
  • போர் வீரன் மனம் மலர்ந்து மகிழ்ந்து போரில் உயிர் விடும் பொழுது அவன் தன் உயிரை நாட்டிற்குச் சமர்ப்பணம் செய்கிறான்.
  • தம்பி மீது பொறாமையால் தகப்பனாரிடம் கோள் சொல்லும் அண்ணன் தன் செயலை பொறாமைக்குச் சமர்ப்பணம் செய்கிறான்.
  • உலகில் வாழ்வு ஓராயிரம் நிலைகளில் உள்ளது. ஒவ்வொரு நிலைக்கும் சமர்ப்பணமுண்டு. சமர்ப்பணம் அந்த நிலைக்குரியது.
  • தலைப்பு பிரபஞ்ச எண்ணத்தைக் கூறுகிறது.
  • வேலை செய்பவன் முதலாளிக்குப் பணிகிறான். அவன் வேலை முதலாளிக்குச் சமர்ப்பணமாகிறது.
  • முதலாளிக்குச் சமர்ப்பணமாகும் வேலை, ஊருக்குச் சமர்ப்பணமாகலாம், உலகுக்குச் சமர்ப்பணமாகலாம், சட்டத்திற்குச் சமர்ப்பணமாகலாம், தர்மத்திறகும் சமர்ப்பணமாகலாம்.
  • பிரபஞ்சம் தர்ம நியாயத்தைக் கடந்தது.
  • சமர்ப்பணம் தர்ம நியாயத்தைக் கடந்த நேரம் பிரபஞ்ச எண்ணமாகும்.
  • பிரபஞ்சத்தைக் கடந்தால், பிரபஞ்சத்தைக் கடந்த பிரம்ம எண்ணமாகும் (transcendent thought).
  • இந்த எண்ணத்துள் (all is all, all in each, each in all) அனைத்தும் உண்டு.
  • இதைக் கடந்தது பிரம்மம், சுத்த பிரம்மம், தூய பிரம்மம், மூலம், அங்கு எண்ணமில்லை. எண்ணம் மௌனமாகும்.
    அது நாமறிந்த மௌனமாகாது. அது பிரம்ம மௌனம். அங்குச் சமர்ப்பணம் பிரம்ம மௌனத்திற்குரியது.
  • எண்ணம் என்பது மனம் தன் உணர்ச்சிக்கு (mental sensation) உருவம் தருவது.
  • இதயம் என்ற நெஞ்சு, மனஸ் என நாம் கூறுவது தன் எண்ணத்திற்குத் தரும் உருவம் உணர்ச்சி (feeling, Joy). அதுவே அங்கு ஆத்மாவுடன் தொடர்பு கொண்டால் (love) அன்பாகும், பிராணனுடன் தொடர்பு கொண்டால் (sensation) உடலுணர்வாகும்.
  • ஒவ்வொரு நிலைக்கும் சமர்ப்பணம் உண்டு. சமர்ப்பணம் சர்வ அர்ப்பணமாகும்.
  • மனிதன் தானே செயல்பட முடியாது.
  • அடுத்தவருடன் தொடர்பு கொள்வதே செயல்.
  • அடுத்ததுடன் தொடர்பு கொள்வதே செயல்.
  • செயலில்லாமல் நிகழ்ச்சியில்லை.
  • நிகழ்ச்சியின்றிச் சமர்ப்பணமில்லை.
  • நாம் உள்ள நிலையிலேயே சமர்ப்பணம் செய்ய முடியும்.
  • மனத்திலிருந்து மேலேயோ, கீழேயோ சமர்ப்பணம் செய்ய முடியாது.
  • ஒருவர் ஒரு மொழியில் பேசுவதை அதே மொழியில் எழுதலாம்.
  • அடுத்த மொழியில் எழுத இரு மொழியிலும் பாண்டித்தியம் தேவை.
  • எழுதுவது எழுத்திற்குச் சமர்ப்பணம் செய்வதாகும்.
  • அடுத்த மொழியில் எழுதுவது மொழி பெயர்ப்புக்கு - தமிழாக்கத்திற்குச் - சமர்ப்பணம் செய்வதாகும்.

***************



book | by Dr. Radut