Skip to Content

01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

ஆங்கிலம்: லெஸ்லி ஜேக்கப்ஸ்

தமிழாக்கம்: வித்யா ரங்கன்

திருத்தம்: ஸ்ரீ கர்மயோகி

II/1. Indeterminates, Cosmic Determinations and the Indeterminable

Page 304

Para 9

II/1. பிரபஞ்ச சிருஷ்டி பிரம்ம சிருஷ்டி

Suppose this hypothesis proved to be tenable.

நாம் தாற்காலிகமாக ஏற்றுக் கொண்ட இக்கருத்து நிலையாக ஏற்றுக் கொள்ளக் கூடியதாக நிரூபணம் ஆகலாம்.

All the unexplained processes of Nature would

find their meaning and their place.

அப்படியானால் விளக்காமல் விட்ட இயற்கையின் செயல்முறைகள் அனைத்தும் தங்கள் விளக்கத்தைக் கண்டடையும்.

Energy seems to create substance.

சக்தி பொருளை உற்பத்தி செய்வதாகத் தெரிகிறது.

But, in reality, substance would be inherent in Energy.

ஆனால், உண்மையில், பொருள் என்பது சக்தியில் ஏற்கனவே புதைந்துள்ளது.

In the same way as existence is inherent in Consciousness-Force.

அதேபோன்று ஜீவியத்தில் வாழ்வு உள்ளார்ந்து அமைந்துள்ளது.

The Energy is a manifestation of the Force.

இயக்காற்றலிலிருந்து சக்தி வெளிப்படுகிறது.

Substance is a manifestation of the secret Existence.

ரகசியமான பெரு வாழ்வு பொருளை வெளிப்படுத்துகிறது.

But it is a spiritual substance, and would not be apprehended by material sense.

ஆனால் அது ஆன்மிகப் பொருளாதலால் ஜட உணர்வால் அதைக் கைப்பற்ற முடியாது. 

It would be seizable by that sense when given the forms of Matter by Energy.

ஜடம் சக்தியால் ரூபம் பெறுவதானால் ஜட உணர்வால் அதை உணர முடியும்.

One begins to understand that design, quantity and number can be a base.

வடிவமைப்பு, அளவு மற்றும் எண்ணிக்கை இவை அடிப்படையானவை என்று ஏற்றுக் கொள்ள முடியும்

They can be a base for the manifestation of quality and property.

இவை தரம் மற்றும் குணத்தை வெளிப்படுத்த அடிப்படையாக இருக்க முடியும்

For design, quantity and number are powers of existencesubstance.

வடிவமைப்பு, அளவு மற்றும் எண்ணிக்கை இவை சத்தின் திறன்.

Quality and property are powers of the consciousness.

தரம் மற்றும் குணம் ஜீவியத்தின் திறன்.

They are powers of its force that reside in the existence.

இவை சத்தில் வதியும் இயக்காற்றலின் திறன் ஆகும்

They can then be made manifest and operative.

அவற்றை வெளிப்படுத்தி இயங்கச் செய்யமுடியும்

They are made operative by a rhythm and process of substance.

பொருளின் லயம் மற்றும் செய்முறையால் அவை இயக்கப்படுகின்றன.

The growth of the tree out of the seed would be accounted for.

விதையிலிருந்து மரம் வெளிப்பட்டு வளர்வதை விளக்க முடியும்.

It is by the indwelling presence of what we have called the Real-Idea.

அது அதனுள் உறையும் முழு எண்ணத்தால் நடைபெறுகிறது.

The Infinite contains a self-perception of the significant form.

அனந்தம் தன் ஒரு குறிப்பிட்ட ரூபத்தைச் சுயமாக உணர்கிறது.

It contains the living body of its power of existence.

அது ஜீவனுள்ள உடலின் சக்தியைத் தன்னுள்ளடக்கியுள்ளது.

That has to emerge from its own self-compression in energy-substance.

அது சக்தியின் பொருளில் தன் சொந்த சுய அழுத்தத்தால் வெளிப்பட வேண்டும்.

This would be carried internally in the form of the seed.

இதைச் சக்தி தன்னுள் விதை எனும் ரூபமாகத் தாங்கி நிற்கும்

It would be carried in the occult consciousness involved in that form.

அந்த ரூபத்தினுள் நுண்ணியமாகப் புதைந்துள்ள ஜீவிய அதைத் தாங்கியிருக்கும்.

It would naturally evolve out of it.

அது இயல்பாகப் பரிணாமம் பெற்று வெளிவரும்

We can understand also the material infinitesimals like gene and chromosome.

நாம் மிகச்சிறிய ஜடப் பொருளான மரபணுவையும் பண்பணுவையும் கூட புரிந்து கொள்ள முடியும்

They carry in themselves psychological elements.

அவை தம்முள் மனோதத்துவக் கூறுகளைத் தாங்கியுள்ளன.

These are to be transmitted to the physical form.

இவை உடலின் ரூபத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்

That form has to emerge from the human seed.

அந்த ரூபம் மனிதனின் வித்திலிருந்து எழும்ப வேண்டும்

It is the same principle in the objectivity of Matter as in our subjective experience.

அகத்தின் அனுபவம் புறத்தில் ஜடப் பொருளாக வெளிப்படும் தத்துவத்தை ஒத்தது இது.

The subconscient physical carries in it a mental

psychological content.

ஆழ்மன உடல் தன்னுள் மனத்தின் உளவியல் உட்பொருளாகத் தாங்கியுள்ளது.

It carries impressions of past events, habits.

அது பழைய நிகழ்வுகள், பழக்கங்கள் இவற்றின் பதிவுகளைத் தன்னுள் தக்கவைத்துள்ளது.

It carries fi xed mental and vital formations, fixed forms of character.

நிலையான மனம் மற்றும் உணர்வின் உருவாக்கங்கள், நிலையான பண்பின் ரூபங்கள் இவற்றை அது தாங்கியுள்ளது.

It sends them up by an occult process to the waking consciousness.

இவற்றை அது நுண்ணியமான செய்முறைகளின் வாயிலாக நம்மில் விழிப்பாக உள்ள ஜீவியத்திற்கு அனுப்புகிறது. 

It thus originates or influences many activities of our nature.

அது இவ்வாறாக நம் குணத்தின் பல செயல்பாடுகளை ஆரம்பித்து வைக்கிறது அல்லது அவற்றில் தாக்க ஏற்படுத்துகிறது.

 Contd...

தொடரும்…

ஸ்ரீ அரவிந்த சுடர் 

 

உலகம் முக்கியமானால் சிந்தனை நிற்காது.

ஸ்ரீ அரவிந்த சுடர் 

 

மோட்சம் முக்கியமானால் சமர்ப்பணம் பூர்த்தியாகாது.



book | by Dr. Radut