Skip to Content

07. வாழ்க்கையை நம் வழிக்குக் கொண்டு வரும் இரகசியங்கள்

வாழ்க்கையை நம் வழிக்குக் கொண்டு வரும் இரகசியங்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

11. வாழ்க்கைத் தரும் சிரமங்களையும், சவால்களையும் கண்டு மிரளக் கூடாது. தைரியமாக நாம் அவற்றை எதிர் கொள்ள வேண்டும். வாழ்க்கை தரும் சவால்களை நாம் மகிழ்ச்சியோடு எதிர் கொண்டோம் என்றால் பெரிய வெல்ல முடியாத சிரமமாகப்பட்டது நம் கட்டுப்பாட்டிற்குள் வருவதைக் காணலாம்.

  • வாழ்க்கை பொதுவானது. அனைவருக்கும் சமமான வாய்ப்பையே தருகிறது. பெறுபவர் தம் குணவிசேஷத்தால் பெரிய பலனையும், சிறிய பலனையும் பெறுகிறார்கள்.
  • சிரமம், எதிர்ப்பு, தடை, சவால், ஆபத்து, களேபரம் என்பவை வாழ்வின் வண்ணங்கள். அதைக் கண்டவுடன் பின்வாங்குபவர்கள் அநேகர். ஓரிருவரே எதிர்த்து நின்று சமாளிப்பார்கள்.
  • எதிர்ப்பால் விலகுபவரைவிட ஆசைப்பட்டு தடம்மாறி படுகுழியில் விழுபவர் அநேகம்.
  • மாமியார் வக்கிரம். ஒரு மருமகள் வக்கிரத்திற்கு சமமான வக்கிரம். அனைத்தையும் இழந்தார். அடுத்த மருமகள் மாமியார் எப்படியிருந்தாலும் நானிருக்க வேண்டியபடி நானிருக்கிறேன் என்றார். முழுப் பொறுப்பும் அவள் கைக்கு வந்து விட்டது.
  • சர்வதேச ஸ்தாபனம் வெறும் ஜீவனற்றதாயிற்று. ஆனால் பிரபலம் உண்டு. தலைவர், தலைவர் என்ற பிரபலத்தை 8 ஆண்டுகள் அனுபவித்து, அதற்குரியவாறு சட்டங்களை மாற்றி அமைத்தார். அடுத்தவர் வந்தார். சட்டங்களை சாதகமாக்கி எதேச்சதிகாரம் செய்து நன்கொடை கொடுத்த ஒருவரை எதிர்த்தார். நன்கொடை கொடுத்தவர் மட்டும் வேலை செய்பவர். விஷயம் தெரிந்தவர். தலைவர் அவரை விலக்க உத்தரவிட்டார். எதேச்சதிகாரம் பூரணமாயிற்று. பலியானவர் எதிர்ப்பதில்லை, non-reaction என முடிவு செய்தார். பதிலும் கூறவில்லை. அவதூறுகளை ஏற்றுக் கொண்டார். ஸ்தாபனம் உயிர் பெற்றது. செயல்பட்டது. எல்லாக் காரியங்களையும் புது முறையில் அமைத்தனர். எதேச்சதிகாரம் செய்தவர் எல்லாப் பணத்தையும் எடுத்துக் கொண்டு போய்விட்டார். எடுத்த முடிவுகள் போதாது என கோர்ட்டிற்குப் போய் தனக்கு வேண்டாதவர்களை விலக்க கேஸ் போட்டார். கோர்ட் மத்தியஸ்தம் செய்ய ஆர்டர் போட்டது. தலைவர் சமரசத்தை மறுத்தார். அப்பீலுக்குப் போனார். மேல் கோர்ட்டும் சமரசத்தை சிபாரிசு செய்தது. வருஷம் ஓராண்டாயிற்று. 20 இலட்சம் ஸ்தாபனப் பணம் கோர்ட் செலவாயிற்று.
    பலியானவர் பேசாமலிருந்தார். உயிர் பெற்ற ஸ்தாபனம் பலியானவர் சேவையை ஏற்றது. பதவியின்றி சேவை செய்தார் அவர். சிறு செலவுகட்கு கைப்பணத்தைப் போட்டு செலவு செய்தார். ஜெனரல்பாடி கூடியது. தலைவரை விலக்கியது. பணத்தை எல்லாம் திருப்பித்தர உத்தரவு வழங்கியது. புதிய நிர்வாகிகளை ஏற்படுத்தியது. சேவை செய்தவரை அவர்களும் பொருட்படுத்தவில்லை. அவர் தன் செலவில் சேவையைத் தொடர்ந்தார். அவர் பங்கு இது சிறு செலவு பெரிய சேவை. அடுத்த பெரிய ஸ்தாபனம் அவரை நாடியது. ஐரோப்பிய பத்திரிக்கை ஒன்று அவர் சேவையை நாடியது. புதிய கருத்துகளைப் பலியானவர் எழுதினார். European Union தலைவரை அவ்விஷயமாக சந்திக்க முடிந்தது. 100 டைரக்டர்களைச் சந்தித்துப் பேச முடிந்தது. ஒரு பெரிய genius இவரை நாடி வந்தார். அவர் அந்தப் பத்திரிக்கையின் உரிமையாளர். பலியானவரை அப்பத்திரிக்கையை நடத்தச் சொன்னார். குறுகிய காலத்தில் பத்திரிக்கை முக்கியம் பெற்றது. சர்வதேச நிலைமை மாறியது. புது ஸ்தாபன அமைப்பில் இவரைத் தலைவராக (CEO) அழைத்தனர். 20 ஆண்டுகளில் 4 மகா நாட்டிற்குப் போனவர் 8 மாதத்தில் 7 மகா நாட்டிற்கு அழைப்புப் பெற்றார்.
    பழைய தலைவர் கேஸை வாபஸ் செய்தார். ராஜினாமா செய்வதாகக் கூறினார். அவரும் அவரைச் சார்ந்தவர்களும் இருக்குமிடம் தெரியவில்லை. புதிய அமைப்பு பல்வேறு புதுவேலைகளைச் செய்தது. கடந்த 30 ஆண்டில் நடக்காதவை கடந்த 14 மாதத்தில் நடந்தன. செலவுக்கு வேண்டிய பணம் பழைய தலைவரிடம் உள்ளது.
    இவ்வளவு புது வேலைகளும் பலியானவர் செய்ய மற்ற ஸ்தாபனங்கள் செலவு கொடுத்து சன்மானம் கொடுத்து நடத்தச் சொல்லி வேண்டினர். எதிர்ப்பெல்லாம் சாதகமாக மாறியது. புதிய அமைப்பில் உள்ள ஸ்தாபனம் உலகத் தலைமையை நோக்கி உருவாகுகிறது.
  • எதிர்ப்பு ஏற்றம் மிகு எதிர்காலத்தைக் காட்டும்.
  • சிறிய புத்தியுள்ள சிறுமதியுடையவனுக்கு அழிவுகாலம் வந்தால் நல்லவனை அழிக்கக் கங்கணம் கட்டிச் செயல்படுவான்.
  • பரிசு பெற பக்குவம் வேண்டும்.

(தொடரும்)

*********

ஸ்ரீ அரவிந்த சுடர்

500 ஆண்டுகட்கு முன் கிருஸ்த்துவ சர்ச்சின் மூடநம்பிக்கையை அழிக்க விஞ்ஞானம் உருவாயிற்று. அதன் விளைவாக Protestant மதம் ஏற்பட்டது. வேதம் கண்ட ஞானத்தையோ, வேதாந்தம் கண்ட பகுத்தறிவையோ விஞ்ஞானம் இன்றுவரை அறியவில்லை. இந்திய சுதந்திரம் அரசியல் தலைவர்களால் இன்று பெரும் செல்வம் பெறும் அரங்கமாகச் செயல்படுகிறது. எந்த ஒரு பெரு இயக்கமும் தன் இலட்சியத்தை இழப்பதுண்டு. நாளடைவில் எதிரான இலட்சியத்தின் கருவியாவதும் உண்டு. உலகம் பன்முறை பெற்ற அனுபவம் இது. அகிம்சையை ஆத்ம ஞானமாகக் கொண்ட மகாத்மாஜீ எவரும் அறியாமல் வன்முறையை வளர்க்கும் பாதையாக அது மாறியதைக் கண்டார். உலகுக்கு அறிவித்தார். அவரே அதற்குப் பலியானார். விஞ்ஞானம் இன்று பகுத்தறிவின் முதல் எதிரியாக போர் தொடுக்கிறது.

********



book | by Dr. Radut