Skip to Content

05. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

கர்மயோகி

117. தீர்க்க முயன்ற பிரச்சனை ஏற்கனவே தீர்ந்திருப்பதைக் கண்டவர் நிற்பது பூரண யோக வாயில்.

  • போலீஸ் ஸ்டேஷனில் திருடு போகாது.
  • காவிரிக்கரையில் தண்ணீர்ப் பஞ்சமில்லை.
  • கம்பன் வீட்டில் கட்டுத் தறியும் கவிபாடும்.
  • அன்னை சூழலில் பிரச்சனைக்கு உயிர் இருக்காது.
  • அன்பர்கள் “பிரச்சனை” என்பது அவர்களை நோக்கி வரும் வாய்ப்பு. அவர் கண்ணுக்குப் “பிரச்சனை” யாகத் தெரிவது.
  • அதைத் தீர்க்க முயன்றால் அது ஏற்கனவே தீர்ந்து விட்டது தெரியும்.
  • மேலும் தொடர்ந்து கவனித்தால் அதனுள் உள்ள வாய்ப்பு தெரியும்.
  • வாய்ப்பைப் பணமாக, உதவியாக, முன்னேறும் வழியாகக் காண்பார்கள்.
    அது பணமில்லை. தொடர்ந்து பணம் உற்பத்தியாகும் ஊற்று எனத் தெரியும்
    அது உதவி மட்டுமல்ல, உதவிக்கு உறைவிடம் எனப் புரியும்
    அது முன்னேறும் வழியில்லை, அதனுள் ஆயிரம் முன்னேற்றமுண்டு எனத் தெரியும்.
    அது யோக வாயில்.
    அது அனைவரும் அதிர்ஷ்டம் பெறும் ஆனந்தம்
    அது நம்மையறியாமல் நமக்குப் புது ஜாதகம் எழுதிய கையாகும்
    அது புது உலகைச் சமைத்து அங்கு நமக்கு உரிøம வழங்குவதாகும்
  • பிரச்சனையைத் தீர்க்க அன்னை பிரார்த்தனையை எதிர்பார்ப்பதில்லை.
  • அன்பருக்குப் பிரச்சனை என்றவுடன் அன்னையிடம் அது போக முயலும்.
    அன்னையைப் பிரச்சனை எட்டுமுன் அது அவர் சூழலைத் தீண்டும்.
  • சூழலுக்கு ஜீவன் உண்டு.
  • சூழல் பிரச்சனையைப் பெற்று எதிரான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும்.
  • சூழலே பிரச்சனையை அழித்து விடும்.
  • ஏற்பட்ட பிரச்சனைக்குக் கர்மத்தில் வேரிருக்கலாம்.
  • அப்படியிருந்தால் அன்பர் அன்னையை அழைத்தவுடன் வேர் அறுபடும்.
  • வேர் அறுபட்டபின் ஜீவனற்ற பிரச்சனை வெட்டப்பட்ட மரமாக அவர் கண்முன் நிற்கும்.
  • அன்பரே முனைந்து மரத்தை அப்புறப்படுத்துவது போல் எஞ்சிய பிரச்சனையின் உருவை விலக்க வேண்டும்.
  • பிரச்சனையை விலக்க சட்டமில்லாவிட்டால் சூழல் சட்டம் இயற்றும்.
  • உள்ள சட்டம் சாதகமானாலும் தேவையான ‘சாட்சியம்’ இல்லாவிட்டால் சூழல் அற்புதமாக டாக்குமெண்ட், சந்தர்ப்பம், சாட்சியை அளிக்கும்.
  • அன்பர் என்பதற்கு விளக்கம் பிரச்சனையற்ற வாழ்வுடையவர்.
  • அவருக்குப் பிரச்சனைகளில்லை.
  • இருந்தால் அவர் முனையுமுன் அவை தீரும்.

**********



book | by Dr. Radut