Skip to Content

01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

ஆங்கிலம்: லெஸ்லி ஜேகப்ஸ்

தமிழாக்கம்: வித்யா ரங்கன்

திருத்தம்: ஸ்ரீ கர்மயோகி

 

XXVIII. Supermind, Mind and the Overmind Maya
Page 284
Para 13
28. சத்திய ஜீவியம், மனம், தெய்வீக மனத்தின் மாயை
And sti ll we can recognise in the Overmind the original cosmic Maya.
இருந்தாலும் தெய்வீக மனத்தில் நாம் மூலமான பிரபஞ்ச மாயையை அடையாளம் காண முடியும்.
It is not a Maya of Ignorance but a Maya of Knowledge.
அது அறியாமையின் மாயையல்ல, அறிவின் மாயை.
It is yet a Power which has made the Ignorance possible, even inevitable.
இருந்தாலும் அது அறியாமையை சாத்தியமான, தவிர்க்க முடியாத ஒன்றாக ஆக்கிய ஒரு சக்தி.
Each principle loosed into acti on must follow its independent line.
தனித்தனியாகப் பிரிந்த தத்துவங்கள் அதனதன் சொந்த சுதந்திரமான வழியைப் பின்பற்ற வேண்டும்
It must carry out its complete consequences.
அதன் முடிவை முழுமையாக அது நிறைவேற்ற வேண்டும்
If this is so, the principle of separati on must also be allowed.
அப்படியானால், பிரிவினைக்கான தத்துவமும்அனுமதிக்கப்பட வேண்டும்
It must be allowed its complete course.
அது அதன் பாதையில் முழுமையாக அனுமதிக்கப்பட வேண்டும்
It must arrive at its absolute consequence.
அதன் முடிவை அது பூரணமாக அடைய வேண்டும்
This is the inevitable descent, facilis descensus.
இந்த இறக்கம் தவிர்க்க முடியாதது.
Consciousness, admitting the separative principle, follows this descent.
ஜீவியம் தான் தனித்துப் பிரியும் விதியை ஏற்று இறங்குகிறது.
It follows this ti ll it enters, by obscuring infinitesimal fragmentation, tucchyena.
துச்சமான அணுவாகி அதனுள் நுழையும்வரை இதைத் தொடர்கிறது.
It enters into the material Inconscience.
ஜட இருளுக்குள் அது நுழைகிறது.
It is the Inconscient Ocean of the Rig Veda.
ரிக் வேதம் அதை ஜட இருளாலான சமுத்திரம் என்கிறது.
And by its own greatness the One is born from that.
பரமாத்மா அதிலிருந்து பிறக்கும் சிறப்புப் பெற்றது.
Yet it is still at first concealed.
இருப்பினும் முதலில் அது மறைந்து உள்ளது.
It is concealed by a fragmentary separati ve existence.
அணுவாக தனித்துப் பிரிந்து அதனுள் மறைந்துள்ளது.
It is concealed by a consciousness which is ours.
நம் ஜீவியம் அதை மறைத்துள்ளது.
In that consciousness we have to piece things together to arrive at a whole.
அந்த ஜீவியத்தில் நாம் தனித்தனியானவற்றைச் சேர்த்து முழுமையை அடைய வேண்டியுள்ளது.
It is a slow and diffi cult emergence.
அது நிதானமான மற்றும் கடினமான வெளிப்பாடாகும்
In that, a certain semblance of truth is given to the dictum of Heraclitus.
அது ஹெராக்லிடஸ் வெளியிட்ட ஒரு கருத்தின் உண்மையைஒத்துள்ளது.
He declared that War is the father of all things.
அவர் போர் அனைத்து விஷயங்களுக்கும் தந்தை என்றார்
For each idea, force enters into collision with others.
ஒவ்வொரு கருத்திற்கும், சக்தி மற்ற சக்திகளோடு மோதுகிறது.
Each separate consciousness and living being collides with others.
ஒவ்வொரு தனித்த ஜீவியமும் உயிருள்ள ஜீவனும் ஒன்று
மற்றதுடன் மோதுகிறது.
By the very necessity of its ignorance it does this.
தவிர்க்க முடியாத அதன் அறியாமையால் அது இதைச்
செய்கிறது.
And it tries to live, grow and fulfi l itself by independent self-asserti on.
அது சுதந்திரமாக தன்னை நிலைநிறுத்தி வாழ, வளர மற்றும்
தன்னிறைவு அடைய முயல்கிறது.
It does not try to grow by harmony with the rest of existence.
மற்ற ஜீவராசிகளோடு சுமுகமாக வளர அது முயற்சிப்பதில்லை.
Yet there is sti ll the unknown underlying Oneness.
இருந்தாலும் அது மறைவான ஒருமைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
It compels us to strive slowly towards some form of harmony.
அது சுமுகத்தின் ஏதாவது ஒரு ரூபத்தை நோக்கி நிதானமாக
நாம் முன்னேற வற்புறுத்துகிறது.
It compels us to strive for interdependence and concord.
அது ஒன்றை ஒன்று சார்ந்து வாழும் உடன்பாட்டை முயன்று பெற கட்டாயப்படுத்துகிறது.
It compels us to strive for a difficult unity.
கடினமான ஒற்றுமையை முயல வற்புறுத்துகிறது.
There is in us concealed superconscient powers of cosmic Truth and Reality.
பரமாத்மாவின் சக்தியான பிரபஞ்ச உண்மை மற்றும் சத்திய
நம்முள் மறைந்துள்ளது.
Only by their evolution the harmony we strive for can be realized.
அவை வெளிப்படும்போதுதான் நாம் முயற்சி செய்யும் சுமுக
நமக்குக் கிட்டும்.
They must be dynamically realized in the very fibre of our being.
அவற்றை நாம் நம் ஜீவனின் ஒவ்வொரு இழையிலும்
சக்திபூர்வமாகப் பெற வேண்டும்
They must become all its self-expression.
அதன் பூரண சுய வெளிப்பாடாக அவை மாற வேண்டும்
This must be not merely in imperfect attempts.
அது அரைகுறை முயற்சியால் அடைவதல்ல
It must not be incomplete constructions or ever-changing approximati ons.
அது முழுமையற்ற அமைப்போ அல்லது மாறும் நிலையுடைய தோராயமான நிலையோ அல்ல
The higher ranges of spiritual Mind have to open upon our being and consciousness.
நம் ஜீவன் மற்றும் ஜீவியத்தில் உயர் நிலைகளுக்குரிய ஆன்மிக மனம் திறக்கப்பட வேண்டும்
Also that which is beyond even spiritual Mind must appear in us.
நம் ஜீவன் மற்றும் ஜீவியத்தில் உயர் நிலைகளுக்குரிய ஆன்மிக மனம் திறக்கப்பட வேண்டும்
This must be done if we are to fulfil the divine possibility of our birth into cosmic existence.
Page 285
Para 14
பிரபஞ்ச வாழ்வில் தெய்வீகம் வெளிப்படும் சாத்திய
பூரணம் பெற இது நிச்சயம் நடைபெற வேண்டும்
Overmind in its descent reaches a line.
தெய்வீக மனம் அதன் இறக்கத்தில் ஒரு கோட்டை அடைகிறது.
This line divides the cosmic Truth from the cosmic Ignorance.
இக்கோடு பிரபஞ்ச சத்தியத்தை பிரபஞ்ச அறியாமையிலிருந்து பிரிக்கிறது.
It is the line where Consciousness-Force divides Mind.
சித் சக்தி மனத்தைப் பிரிக்கும் இடத்தில் உள்ளது இது.
Consciousness-Force emphasizes the separateness of each independent movement.
சித் சக்தி ஒவ்வொரு தனித்த இயக்கத்தின் பிரிந்த நிலையை
வலியுறுத்துகிறது.
The separateness hides or darkens their unity.
அவற்றின் ஐக்கியத்தைப் பிரிவினை மறைக்கிறது அல்ல இருளாக்குகிறது.
Each independent movement has been created by Overmind.
ஒவ்வொரு தனித்த இயக்கத்தையும் தெய்வீக மனம் உருவாக்குகிறது.
The Force divides Mind by an exclusive concentration from the overmental source.
பிரத்தியேக நிஷ்டையின் மூலம் சக்தி தெய்வீக மனத்திலிருந்து மனத்தைப் பிரிக்கிறது.
There has already been a similar separati on of Overmind from its supramental source
இதே போல் சத்திய ஜீவியத்திலிருந்து தெய்வீக மனம்
பிரிந்தது.
But it has been done with a transparency in the veil.
பிரிந்து திரையிடப்பட்டாலும் ஒளி ஊடுருவும் நிலையில் அது
உள்ளது.
That allows a conscious transmission.
அது விழிப்புள்ள சக்திப் பரிமாற்றத்தை அனுமதிக்கிறது.
It maintains a certain luminous kinship.
அது ஒரு வகையான பிரகாசமான உறவைப் பராமரிக்கிறது.
But here the veil is opaque.
ஆனால் இங்கு திரை ஒளிஊடுருவ முடியாத நிலையில் உள்ளது.
The transmission of the Overmind motives to the Mind is occult and obscure.
மனம் தெய்வீக மனத்தின் நோக்கங்களை சூட்சுமமாகவும்
தெளிவற்றதாகவும் பெறுகின்றது.
Separated Mind acts as if it were an independent principle.
தனித்துப் பிரிந்த மனம் தன்னை ஒரு சுதந்திரமான தத்துவமாக எண்ணிச் செயல்படுகிறது.
Each mental being, each basic mental idea stands separately.
ஒவ்வொரு மனத்தாலான ஜீவனும், ஒவ்வொரு மனத்தை
அடிப்படையாகக் கொண்ட கருத்தும் தனித்து நிற்கிறது.
Each power and force stands similarly on its separate self.
அதுபோல் ஒவ்வொரு சக்தியும் ஆற்றலும் தன் தனித்த
ஜீவனில் நிற்கிறது.
It can communicate or combine with or contact others.
அது பிறவற்றோடு தொடர்பு கொள்ள முடியும் அல்லது கூட்டு
சேர முடியும்.
But it is not with the catholic universality of the Overmind movement.
ஆனால் அது தெய்வீக மனத்தின் இயக்கம் போல் ஒருங்கிணைந்து அகண்டு பரந்த நிலையால் ஏற்படுவது அல்ல.
It is not on a basis of underlying oneness.
அது அடிப்படையான ஒன்றிய நிலையிலிருந்து எழுவது அல்ல
It is as independent units joining.
அது தனித்த பாகங்கள் சேர்வது போன்றது.
They join to form a separate constructed whole.
அவை சேர்ந்து வேறான முழுமையை ரூபமாக எழுப்பும்
It is by this movement that we pass from the cosmic Truth into the cosmic Ignorance.
இவ்வியக்கத்தின் வழியே நாம் பிரபஞ்ச சத்தியத்திலிருந்து
பிரபஞ்ச அறியாமைக்கு நகருகிறோம்
The cosmic Mind on this level, nodoubt, comprehends its own unity.
இந்நிலைக்குரிய பிரபஞ்ச மனம் தெளிவாக அதன் ஐக்கியத்தைப் புரிந்து கொள்கிறது.
But it is not aware of its own source.
ஆனால் அதன் மூலத்தை அது அறிவதில்லை
Its source and foundati on are in the Spirit.
அதன் மூலமும், அஸ்திவாரமும் ஆன்மாவில் உள்ளன.
It can only comprehend it by the intelligence.
அது தன் அறிவால் மட்டுமே அதைப் புரிந்து கொள்ள முடியும்.
It cannot comprehend in any enduring experience.
அது தன் அனுபவத்தால் அதைப் புரிந்து கொள்ள முடியாது.
It acts in itself as if by its own right.
அது தன்னுள் தனக்கு உரிமை உள்ளது போல் செயல்படுகிறது.
It works out what it receives as material.
அதற்கு செய்பொருளாகக் கிடைத்ததைக் கொண்டு அது
செயல்முறையை மேற்கொள்கிறது.
It does this without direct communicati on with the source from which it receives it.
அதன் மூலத்தோடு அதற்கு நேரடித் தொடர்பு இல்லை
Its units also act in ignorance of each other and the cosmic whole.
அதன் பகுதிகளும் ஒன்றோடொன்றும், பிரபஞ்ச
முழுமையிலும் அறியாமையால் செயல்படுகின்றன.
The excepti on is for the knowledge that they can get by contact and communicati on.
அவைகளுக்குக் கிடைத்த தொடர்பு மற்றும் கருத்து பரிமாற்றத்தால் மட்டுமே ஞானத்தை அவை பெற முடியும்
There is a basic sense of identity which is no longer there.
அடிப்படையான ஐக்கிய உணர்வு அங்கில்லை
The mutual penetration and understanding that comes from this identi ty is no longer there.
ஐக்கியத்தால் எழும் பரஸ்பர ஊடுருவல் மற்றும் உணர்திறன்
அங்கில்லை.
All the acti ons of this Mind Energy proceed on the opposite basis of the Ignorance.
மனத்தின் அனைத்து செயல்பாடுகளும் அறியாமையில்
எதிர்மறையான அடிப்படையைக் கொண்டு தொடர்கின்றன.
They are the results of a certain conscious knowledge.
ஒரு வகையான தன்னுணர்வு பெற்ற ஞானத்தின் பலன் அது.
But it is a parti al knowledge.
ஆனால் அது பகுதியான ஞானம்
It is not a true and integral self-knowledge.
அது உண்மையான மற்றும் பூரண சுய ஞானம் அல்ல
Nor is it a true and integral world-knowledge.
அது உண்மையான மற்றும் பூரண உலக ஞானமும் அல்ல
This character persists in Life and in subtle Matter.
இச்சுபாவம் வாழ்விலும் சூட்சுமப் பொருளிலும் தன்னை
வலியுறுத்துகிறது.
It reappears in the gross material universe.
ஸ்தூல ஜடப் பிரபஞ்சத்தில் மீண்டும் தோன்றுகிறது.
That arises from the fi nal lapse into the Inconscience.
Contd...
இது ஜட இருளில் தன்னை முழுவதுமாக இழப்பதால் எழுவது.
 
தொடரும்

 

 ********

ஸ்ரீ அரவிந்த சுடர்

அநித்யமான அனைத்தின் பின்னும் நித்யமான ஒன்று உள்ளது என்பதும், அனைத்து ஜீவன்களாகவும், நாமாகவும் இருப்பது பிரம்மமே என்பதும் உபநிஷத உண்மைகள். பகவான் இவற்றின் சாராம்சமாக, புற நிகழ்ச்சிகள் அக உணர்வைப் பிரதிபலிக்கின்றன என்று கூறுகிறார். வெளிச் செயல்பாடு புற நிகழ்ச்சிகள்; மனோபாவம் அகவுணர்வு; உள்ளே இருப்பது அம்சம்; வெளியே இருப்பது செயல். இவை இரண்டும் முரண்படும்; பிளவுபடும்.எனினும், சில ஒற்றுமைகளும் உண்டு. இறைவனுக்கு உரியவர் குடும்ப வாழ்வில் அமிழ்வதும், நாத்திகனாகி இறைவனை எதிர்ப்பதும் முரண்பாடு, பிளவின் தோற்றங்கள்.

ஆழ்மனத்தை மேல்மனம் பிரதிபலிப்பது உண்மை (sincerity). இரண்டும் ஒன்றுபோல் அமைவது சுமுகம்; ஆன்ம விழிப்பு. உள்ளும் புறமும் ஒன்று போல் மனம் அமைந்தால் அவன் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்வான். அவை மாறுபட்டால் பிணக்கு ஏற்படும். மேல்மனத்திற்கு உரிய அகந்தை சுமுகம் வரவிடாது. இரண்டிற்கும் உரிய தன்மைகள் (formations) மறைந்தால்தான் பிணக்கு மறையும்.

பிணக்கின் அறிகுறிகள் வாழ்வில் பலவிதம். கனவுகளும் மேல்மனத்தையோ, ஆழ்மனத்தையோ பிரதிபலிக்கும். “பரோபகாரமும்” பிறர் நலத்திற்கும் ஆன்மிக முன்னேற்றத்திற்கும் தடையாகக் கூடும். அகந்தை, பெருமையுறப் பிறர்க்குத் தர முன்வருகிறது என்கிறார் பகவான். அன்னைக்குச் சேவை செய்ய வந்தவர் உள்மனத்தில் பேராசை இருப்பது உண்டு.

இப்பிணக்குகள் ஒழிந்த மனமே சுமுகம் உடையது.

********

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஒவ்வோர் ஆத்மாவும் ஒரு குறிக்கோளை நாடி உலகில் பிறந்துள்ளது. அவரவர் இலட்சியத்தை அவரவர் நாடுவதைப் பிறர் தடை செய்தல் தவறு. 48 நாட்கள் நாட்டு மருந்து உப்பில்லாப் பத்தியத்துடன் சாப்பிடுபவரை, நாம் நம் சந்தோஷத்திற்காக நம் வீட்டில் சாப்பிடும்படி உபசாரம் செய்வது சரியன்று. அவருக்கு அது ஊறு செய்யும். ஒருவர் வலியை அனுபவித்தறியப் பிறந்திருந்தால், அவர் ஆன்மா வலியை அனுபவித்தறிவது ஆத்ம பலனையும், திருப்தியையும் அளிக்கும். அவர் படும் வேதனையை நாம் விலக்க முனைவது அவரது ஆன்மிக முன்னேற்றத்திற்குத் தடையை ஏற்படுத்துவதாகும். இந்த நோக்கில் பகவான் எழுதியுள்ளது,

ஒருவர் வேதனையை நாம் விலக்குவதால் அவர் உடலுக்கோ,
மனத்திற்கோ, ஆன்மாவிற்கோ, நமக்கோ பலன் தராது.

இதுவே தத்துவமானால் நாம் பிறருக்கு உதவுவது சுயநலம் என்கிறார் பகவான். நம் அகந்தை தான் பெருமையுறப் பிறர்க்கு உதவ முன் வருகிறது என்கிறார். பிறருக்கு நல்லது செய்யும் நல்ல நோக்கமும், அகந்தையை வளர்க்கும் தவறான நோக்கம், எண்ணம் ஆகியவற்றின் வெளிப்பாடாகவும் அமையும்.

சோகமே உருவானவர்கள் உண்டு. இவர்களைச் சோகத்திலிருந்து மீட்கச் செய்யும் முயற்சிகள் முழுத் தோல்வியை அடையும். அப்படிப்பட்டவர்கள் அன்னையை நாடி வந்தால் பெரும்பாலோர் சோகத்தை இழந்து விடுகிறார்கள்.ஒரு சிலருக்குச் சோகம் போவதில்லை. அப்படிப்பட்டவர்களைப் பற்றி அன்னை கூறியது.

இங்கு வந்து ஒருவருக்குச் சோகம் அழியவில்லை எனில் அவர் சோகம் அழியாது.

*********



book | by Dr. Radut