Skip to Content

06. அஜெண்டா

அஜெண்டா

பவித்ராவின் ஆத்மா அன்னையுள் வந்து

இரண்டறக் கலக்க முயன்றதை அன்னை தடுத்தார்

Volume 12, page 268

  • பவித்ரா ஒரு பிரெஞ்சு இன்ஜினீயர்.
  • இவர் ஜப்பானுக்குப் போய் பௌத்தம் கற்று, திபெத் போகும் வழியில் புதுவை வந்தார்.
  • பகவான் தினமும் இவரைச் சந்தித்துப் பேசுவார்.
  • இங்கேயே தங்கி யோகம் பயின்றால் பலிக்கும் என்றார்.
    பவித்ரா தங்கி விட்டார். ஆசிரமப்பள்ளி ஆரம்பித்தபொழுது இவரையே முதல் டைரக்டராக அன்னை நியமித்தார்.
    1927-இல் எழுதிய குறிப்பில் பவித்ரா பூர்வ ஜென்மத்தில் இராமகிருஷ்ணராக இருந்ததாக பகவான் எழுதியுள்ளார்.
  • 11 வயதில் தகப்பனார் கொடுத்த சைக்கிளை முழுவதும் பிரித்து விட்டார்.
    திரும்பப் பூட்ட முடியவில்லை. அவரே பூட்ட வேண்டும் என தகப்பனார் ஆணையிட்டார்.
    அதன்படி பூட்டியதில் பெரும் அனுபவம் பெற்றார்•
  • யோகம், தவம், நம் மரபில் மோட்சத்தை நாடுவது. அத்துடன் வாழ்வைத் துறப்பது, துறப்பது என்பது முடிவில் வெறுப்பதாகியது. வாழ்வைத் துறப்பதால், பெண்ணையும், பொன்னையும் துறந்தனர். உடலைத் துறந்தனர். புறக்கணித்தனர். துறவறமே கடுமையானது. துறவிகள் அதன் கடுமையைக் கொடுமையாக்கினர்.
  • பூரண யோகம் வாழ்வை யோகமாகக் கருதுவது. வெறுப்பு எதன்மீது எழுந்தாலும் அது ஆன்மாவை வெறுப்பதாகும். வெறுப்புக்கும், கசப்புக்கும், புறக்கணிப்பதற்கும், விலகுவதற்கும் இங்கு இடமில்லை.
  • வாழ்வை ஏற்பது எனில், வாழ்வின் உயர்ந்த அம்சத்தை ஏற்பது என்றாகும்.
  • வாழ்வை ஏற்பது எனில், வாழ்வில் தாழ்ந்ததை விலக்கி, உயர்ந்ததை ஏற்பது எனப் பொருள்.
  • அடுத்த கட்டத்தில் வாழ்வை ஏற்று, அதன் தாழ்ந்த அம்சங்களை உயர்ந்த அம்சமாகத் திருவுருமாற்றி ஏற்பது எனப் பொருள்.
  • உலக ஆன்மீகத்திற்கு முதலாக இருப்பது இந்தியா என்றும் அடுத்ததாக இருப்பது பிரான்ஸ் என்றும் அன்னை கூறுகிறார்.
    அக்காரணத்தால்தான் தான் பிரான்சில் பிறந்ததாகவும் கூறுகிறார்.
    பிரான்சில் பிறந்த நெப்போலின் பகவானுடைய முன்பிறப்பு.
    நெப்போலியன் பிறந்த தேதி August 15 என்றும் நாமறிவோம்.
  • பூர்வ ஜென்மம் சூட்சும லோகத்தில் உயர்ந்த நிலைக்குரியது.
    சூட்சும லோகத்தில் அன்னை இறந்தவரைச் சந்திப்பதுண்டு.
  • உயிரோடுள்ளவரும் சூட்சும லோகத்தில் வாசம் செய்பவர்.
    உயிருடனுள்ளவரை சூட்சும லோகத்தில் அன்னை காணும்பொழுது அவர் சண்டையிட்டதாகக் கூறுகிறார். அன்றாட வாழ்வில் அவரிருவர் போடும் சண்டைகளை விலக்குவது அன்னைக்குப் பெரிய வேலை.
  • பூர்வ ஜென்மத்தைக் கொண்டு ஒருவரை இந்த ஜென்மத்தில் புரிந்து கொள்ள முடியாது.
    பல பெரிய அம்சங்கள் தொடரும்.
    பல சிறு அம்சங்கள் தொடரும்.
    பல பெரிய, சிறிய அம்சங்கள் தலைகீழே மாறியிருக்கும்.
    நம் போன்றவர் எதையும் அறுதியிட்டுக் கூற முடியாது.
    அந்த மாற்றம் ஆத்மாவின் சூட்சும யோகம்.
  • யோகம் ஒருவருக்கு ஜடத்திலும், சூட்சுமத்திலும், காரணத்திலும் நடக்கும்.
    யோகம் மனிதன் அறிந்து நடப்பது மனிதனைப் பெரிய யோகியாக்கும்.
    மனிதன் அறியாமல் நடக்கும் யோகம் (subconscious yoga) ஆழ்மன யோகம் எனப்படும்.
  • பகவான், அன்னை தொடர்பு எந்த அளவில் ஏற்பட்டாலும் அது யுகாந்த காலத்திற்கும் நீடிக்கும்.
    எல்லோரும் என்னை முழுவதும் மறந்தபின், நான் விழிப்போடு உங்கள் வாழ்வில் செயல்படுவேன் என்று அன்னை கூறுகிறார்.
    யோகத்தின் நிலைகளை குரு-சிஷ்ய உறவில் வரையறுத்துக் கூறலாம்.
    பூரண யோகத்தில் பகவான் எவரையும் இதைச் செய்ய அழைக்கவில்லை.
    அன்னை தானே வந்த பெரும்பாலோரை யோகத்திற்கு அனுமதித்தார்.
    அவர்கள் யோகம் செய்வதை பகவானுக்குக் கூறினார்.
    பகவான் 1950 வரை அனைவர் யோகத்தையும் தானே செய்தார்.
    அன்னை ஆசிரம வேலைகளைக் கவனித்தார்.

    1950-க்குப் பின் அனைவர் யோகத்தையும் ஆசிரம வேலைகளுடன் அன்னையே ஏற்றுக்கொண்டது பிரபஞ்ச வரலாற்றில் பெரிய கட்டம்.
    அதில் முக்கியமானவர் பவித்ரா.
    உயிர் பிரிந்தவுடன் பவித்ரா அன்னை நெஞ்சில் வந்து குடியேறினார்.
    ஒரு கணம் கூட மற்றவர் போல அதை விட்டு அகலவில்லை.
    அன்னையுடன் அவர் ஆத்மா இரண்டறக் கலக்க முயன்றதை அன்னை தடுத்ததாக மேலே எழுதியுள்ளார்.
    இரண்டறக் கலந்தால் அது மோட்ச நிலையை நாடும்.
    அதனால் அன்னை அதைத் தடுத்து விட்டார் போலும்.

*********

ஜீவிய மணி
 
எண்ணத்தின் மூலம் எண்ணத்தைக் கடந்தது எண்ணத்திற்கு அகப்படாதது.
 



book | by Dr. Radut