Skip to Content

05. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

கர்மயோகி

 

105. ‘சாவித்ரி’யைத் திறந்து பெற்ற அற்புதமான செய்தி.

  • மனம் தெளிவில்லாத சமயம் ‘சாவித்ரி’ வழிகாட்டும்.
  • பலருக்குச் ‘சாவித்ரி’ கூறும் செய்தி என்ன என்று தெரியாது.
  • ஒருவர் தன் எல்லாப் பிரச்சனைகளும் அன்னையால் அழகாகத் தீர்ந்த பின் ‘சாவித்ரி’ யைப் பிரித்துப் பார்த்தார்.

மேலும் என்ன வேண்டும் கேள்”

என்ற செய்தி பெற்றார். கடந்த 20 ஆண்டுகள் அதை உறுதிப்படுத்தின.

  • அவருக்குப் பூரண யோகம் பலிக்கும்.
  • கொஞ்ச நேரம் தியானத்திலிருந்து மனம் அமைதியுற்ற பின் “சாவித்ரி” யை எடுத்து கூரான கத்தி போன்றவற்றால் பிரித்துப் பார்த்தால் கண்ணில் படும் வரி அவருக்குரிய செய்தியாகும்.
  • ஒரு அன்பர் இரு “சாவித்ரி” வால்யூம்களை வாங்கி 1968-இல் அன்னையிடம் அனுப்பினார்.
    அன்னை Blessings பிரசாத பாக்கெட்டும் அனுப்பினார்.
    அன்பர் பிரித்துப் பார்த்தார்.
    “உன் அமைதியான ஆத்மா உன்னை ஏற்றது" என்றிருந்தது.
    அதைத் தொடர்ந்து வந்த 30 அல்லது 40 வரிகள் அவர் வாழ்வில் பலித்தன.
  • அது போன்ற செய்தி பெறும் அன்பர் யோகத்திற்குரியவர்.
  • ஏதோ ஒரு சிலர் அடிக்கடி ‘சாவித்ரி’ யைக் கேட்பார்.
    தொடர்ந்து அவருக்குப் பெரிய நல்ல செய்திகள் வரும்.
    அவர் யோகத்திற்குரியவர்.
  • கல்லூரி மாணவர்கள் எல்லாவிதமான காரியங்களிலும் ஈடுபடுவர்.
    ஆசனம் அவற்றுள் ஒன்று.
    ஹைதராபாத்தில் உள்ள தமிழ் இளைஞர் சென்னைக்கு வந்து பயின்றார். ஆசனத்தில் முழுப் பயிற்சியுடையவர்.
    அவரிடம் ஒரு மாணவன் ஆசனம் பயின்றான்.
    அவரில்லாத பொழுது சவாசனம் அவனுக்குத் தன்னை இழக்கச் செய்தது (He lost his consciousness). அவனுக்குப் பயம் வந்தது. ஆசிரியர் ஆச்சரியப்பட்டார். மாணவனுக்கு யோகத் தகுதியுண்டு என்று கூறினார். மாணவனுக்குப் பயம் மட்டும் தெரிந்து ஆசனத்தைக் கைவிட்டான்.
  • ஆசிரம சமாதியில் உட்கார்ந்தால் தானே கூடி வரும் தியானம் சவாசனமாகும் என பல அன்பர்களுக்குத் தெரியாது.
    அது வாழ்க்கைப் பலனாவதையும் அன்பர்கள் அறிவதில்லை.
    அது பெரிய யோக பாக்கியம்.

*********

ஜீவிய மணி
 
ஒருவரைப் பற்றிக் கசப்பான அபிப்ராயம் கொண்டவர், அதை விலக்கி எவ்வித அபிப்ராயமும் இல்லாது இருந்தால், மற்றவர் அன்புடன் இசைந்து பழக முன்வருவதைப் பார்க்கலாம். அபிப்ராயம் மாறினால் அனைவரும் இனியவர்கள் ஆவார்கள். இதைவிட உயர்ந்த நிலையில் சுபாவத்தை மாற்ற முடிந்தால் அதுவே திருவுருமாற்றமாகும். நாம் அன்னையை நம்பி, சரணாகதி செய்து, சுபாவத்தை ஒப்படைக்க முடிந்தால், அதுவே அன்னையை அறிதல் ஆகும். பிறவிப் பயனை அடைவது ஆகும்.
 



book | by Dr. Radut