Skip to Content

04. யோக வாழ்க்கை விளக்கம்

யோக வாழ்க்கை விளக்கம்

22/12. மௌனத்தில் ஆத்மா விழித்து மேலிருந்து வரும்

சத்திய ஜீவியத்துடன் இணைந்த விழிப்பு ஆர்வம்

  • மௌனம் என்ற கருத்து பேச்சு ஏற்பட்டபின் உலகில் எழுந்தது.
  • மனிதன் பேசுமுன் மௌனம் என்பதில்லை. அப்படி ஒரு மௌனமிருந்தால் அது உடலின் மௌனம் எனப் பெயர்.
  • வாயால் பேசுபவன் பேச்சை நிறுத்துவது வாயின் மௌனம்.
  • மனத்துள் பேசுபவன் அப்பேச்சை நிறுத்துவது எண்ணத்தின் மௌனம்.
  • பேச்சிற்குரிய மௌனம், எண்ணத்திற்குரிய மௌனம், சிந்தனைக்குரிய மௌனம், உணர்ச்சிக்குரிய மௌனம், உடல் உணர்ச்சிக்குரிய மௌனம், ஜீவனின் மௌனம், ஆத்மாவின் மௌனம், பிரபஞ்ச மௌனம், பிரம்ம மௌனம் என மௌனம் எல்லா நிலைகளிலும் உள்ளது.
  • இவற்றுள் சத்திய ஜீவிய மௌனம் சிருஷ்டியில் சிறப்பானது.
  • சத்திய ஜீவிய அன்பு சத்திய ஜீவிய மௌனத்தில் எழுகிறது.
  • விழிப்பு ஜடத்திலிருந்து பிரம்மம் வரைக்கும் உண்டு.
  • ஆர்வமும் அத்தனை நிலைகட்கும் உண்டு.
  • மௌனம், சலனம், சத்தியம், நன்மை, சக்தி, அழகு, அன்பு, சந்தோஷம், இனிமை, ஆர்வம், தடை, எதிர்ப்பு, ஜோதி, இருள் என உலகில் உள்ள எல்லா அம்சங்களும் சிருஷ்டியில் உள்ள எல்லா லோகங்கட்கும் உண்டு.
  • ஜட லோகம், பிராண லோகம், மனோ லோகம், தெய்வ லோகம், சத்திய ஜீவிய லோகம், பிரபஞ்சம், அதைக் கடந்த பிரம்மம் என லோகங்கள் அடுக்கடுக்காய் உள.
  • இத்தனை லோகங்கட்கும் உரிய தொடர்பான லோகங்கள் நம் ஜீவனில் உண்டு.
  • தூக்கம் விழிப்பது உடலின் விழிப்பு.
  • கனவில் அன்னை தரிசனம் தருவது சூட்சுமம் நம் சூட்சும உடலில் விழிப்பது.
  • புதுவைக்கு வரும் ரிச்சர்ட்டிடம் அன்னை 1914-க்கு முன் இந்தியாவில் டேவிட் சிம்பலை விளக்கும் ரிஷிகளைக் காணும்படிக் கூறினார்.
  • தியானத்தில் பகவானைக் கண்டு கிருஷ்ணா எனப் பெயரிட்டு அவருக்குச் செய்தி அனுப்பி, பகவானைக் கண்டு அவரே தானறிந்த கிருஷ்ணா என உணர்ந்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து அகண்ட மௌனத்தைக் கேட்காமல் பெற்று, மீண்டும் அவருடனே வந்து தங்கியது

பூமாதேவியின் புனித ஆர்வமாகும்.

  • ஆர்வமும், விழிப்பும் அனைவரும் பெறுவதில்லை.
    ஆனால், ஆர்வத்திற்கும் விழிப்பிற்கும் அனைவருக்கும் உரிமை உண்டு.
    கொடுப்பார் பகவானுக்கு முன் வரவில்லை.
    கொடுத்தால் பெறுபவரில்லை.

பெறுபவர் எதிர்ப்பு பெரிய எதிர்ப்பு.

*********

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அறிவுக்கு உரிய மந்திரம் ஞானம். உணர்வுக்கு உரிய மந்திரம் பக்தி. உடலுக்கு உரிய மந்திரம் செய்யும் காரியம் கூடி வருவது.
ஜீவனுக்கு உரிய மந்திரம் யோகம்.



book | by Dr. Radut