Skip to Content

03. சாவித்ரி

சாவித்ரி

Page 165: Amidst his harassed toil and welter of cares

உயிரை எடுக்கும் உழைப்பு பொறுக்க முடியாத பொறுப்பு

  • எண்ணக்குவியல் எழுப்பும் பெரும்பாடு
  • வலிக்கும் புருவத்தில் வதியும் எண்ணங்கள்
  • வாழ்வின் பாட்டை விலக்கும் இயற்கையின் வலிமை
  • இயற்கையின் மௌனம் இயல்பினின்று காப்பாற்றும்
  • அமைதியான அழகு உறையும் தூய்மையான ஆனந்தம்
  • புது வாழ்வு பிறந்தது, பரந்து விரியும் லோகங்களைக் கண்டான்
  • ஆன்மா அன்புடன் அசைத்து ஓய்கிறது
  • வலிமையான விருந்தை ஏற்க முடியாத நிலை
  • பழக்கம், வழக்கம் சப்பெனும் சம்பிரதாயம்
  • தீவிர உற்சாகம் தரும் ஆழ்ந்து பூரிக்கும் மகிழ்ச்சி
  • பிணக்கின் சாயலைப் பெரிதும் பெற்ற வாழ்நாள்
  • காமத்தின் கறுத்த பார்வை வேகம் ரத்தச்சிவப்பாகும் கறை
  • கொலையும் போரும் கொள்ளை இன்பம் தரும் ஆட்டங்கள்
  • பவித்திரமான அகத்தை நாடும் பார்வையை ஏற்கும் மனமில்லை
  • அழிந்த பிரம்மம், இறந்த ஆத்மா அவன் தேடுவது
  • சிறு அச்சில் சுழலும் சிறிய சக்கரங்கள்
  • ஊர்ந்து செல்பவன் அவன் உயர முடியாதவன்
  • வேகமாக நகர மறுக்கும் காலம் எழுப்பும் அவசரம்
  • விதியின் கதியில் வேகத்தை எழுப்பும் விற்பன்னன்
  • ஓடும் இதயம் துடித்து, களைத்து ஓயும்
  • முடிவற்ற பாதையில் ஓய்வின்றி நடக்கும்
  • பெருவாழ்வுக்குரிய பெருமகனார் அங்கில்லை
  • தாழ்ந்த சுருதி அறிந்து எழும் ஸ்தாயி
  • அறியாமை மனையுள் அலங்காரமாக வாழும் ஞானம்
  • அனைத்தும் அறியும் அற்புதத்தை அது ஒருபோதும் தொடவில்லை
  • சொர்க்கம் சிறப்பாகப் பூரிக்கும் பேறு அவனுக்குரியது
  • ஆழ்ந்து மறைந்த உறக்கத்தினின்று எழமுயலும்
  • சிறு மகிழ்ச்சி பெரு ஆரவாரமாக எழுகிறது
  • அருளின் துளி விலகாத அஸ்திவாரம்
  • அவன் பாவத்தின் பாரம் இறங்குகிறது
  • இந்த உள்ளங்கை உலகை சுமுகமாக ஏற்கிறது
  • தன்னைப் போன்ற தகுதியற்றவர் தரும் நிறைவு
  • நேற்றைய எண்ணம் நாளைய நம்பிக்கை
  • தெரிந்த பழங்கபடும் ஆசையும், ஆர்வமும்
  • வலுவான கனத்த குறுகிய வேலி

*********

ஜீவிய மணி
 
ஆத்மாவின் பிரம்மாம்சம் காலத்துள் தன்னையிழந்து மீண்டும் பெறும் லீலையின் அரங்கம் மேல் மனம்.



book | by Dr. Radut