Skip to Content

01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

 

 

XXVII. The Sevenfold Chord of Being
Page 264
Para 6
27.சப்த ஜீவன்
The Divine descends from pure existence.
சத் தன் நிலையிலிருந்து கீழிறங்குகிறது.
It descends through the play of Consciousness-Force and Bliss.
சித் மற்றும் ஆனந்தம் எனும் லீலை வழியாக அது கீழிறங்குகிறது.
It descends through the creative medium of Supermind.
ஆக்கபூர்வமான இடைப்பொருளான சத்திய ஜீவியம் வழி அது இறங்குகிறது.
It descends into cosmic being.
பிரபஞ்ச ஜீவனுக்குள் அது இறங்குகிறது.
We ascend from Matter through life, soul and mind.
நாம் ஜடத்திலிருந்து,வாழ்வு,ஆத்மா,மனம் வழியாக மேல் நோக்கி உயருகிறோம்.
We ascend through the medium of Supermind towards the divine being.
நாம் இடைப்பொருளான சத்திய ஜீவியம் வழி சத்தை நோக்கி உயருகிறோம்.
Between the lower and higher hemispheres there is a knot.
இரண்டு அரைக்கோளங்களுக்கும் இடையே ஒரு முடிச்சு உண்டு.
This is where mind and Supermind meet.
இதுவே மனமும், சத்திய ஜீவியமும் சேரும் இடம்.
There is a veil between them.
இவைகளுக்கிடையே திரை உள்ளது.
For the divine life in humanity, the tearing of the veil is the condition;
உலகில் தெய்வீக வாழ்வை மேற்கொள்ள அத்திரை கிழி வேண்டியது அவசியம்.
By that tearing, the illumining descent of the higher takes place.
அத்திரை கிழிவதால் மேலுள்ள அறிவொளி கீழிறங்குவது நடைபெறுகிறது.
It descends into the lower being.
அது மேலிருந்து தாழ்ந்த ஜீவனுக்குள் இறங்குகிறது.
The lower being ascends into the nature of the higher.
தாழ்ந்த ஜீவன் உயர்ந்து, உயர்நிலை ஜீவனின் தன்மையை பெறுகிறது.
The mind can recover its divine light in the all comprehending supermind.
மனம் தன் தெய்வீக ஒளியைக் காலத்தைக் கடந்த சத்தி ஜீவியத்தில் திரும்பப் பெறலாம்
The soul can realise its divine self in the all-blissful Ananda.
ஆத்மா ஆனந்தத்தில் தன்னை பிரம்மமாக அறிய முடியும்
Life can repossess its divine power.
வாழ்வு தன் தெய்வத் திறனை திரும்பப் பெற முடியும்
This power is in the play of omnipotent Conscious-Force.
இத்திறன் சர்வ வல்லமையுள்ள சித் சக்தியின் லீலையும் உள்ளது.
Matter can open to its divine liberty, a form of the divine Existence.
சத்தின் ரூபமான ஜடம் அதன் உரிமையான தெய்வத்துவத்தை அடைய முடியும்.
The human being is the present crown and head of the evolution.
மனிதன் தற்போது பரிணாமத்தின் கிரீடமாகவும், அதன் தலைவனாகவும் உள்ளான்.
The goal of evolution is not an aimless circling.
பரிணாமத்தின் இலட்சியம் ஒரு இலக்கில்லாத சுழல் அல்ல
It is not an individual escape from the circling.
அது சுழலிலிருந்து ஜீவாத்மா விடுதலை பெறுவதல்ல
This creature has an infi nite potentiality.
இப்படைப்பு ஒரு அனந்தமான ஆற்றலைக் கொண்டது.
He alone stands here between Spirit and Matter.
ஆன்மாவிற்கும் ஜடத்திற்குமிடையே இங்கு அவன் மட்டுமே நிற்கிறான்.
He alone has the power to mediate between them.
அவற்றிற்கிடையே மத்தியஸ்தம் செய்ய அவனுக்கு மட்டுமே திறனுண்டு.
It is not just an ultimate awakening from the delusion of life.
அது வாழ்வின் மயக்கத்திலிருந்து பெறும் முடிவான விழிப்பல்ல
It is not awakening by despair and disgust of the cosmic effort.
பிரபஞ்ச முயற்சியால் எழும் வெறுப்பு மற்றும் ஏமாற்றத்திலிருந்து விடுபடும் விழிப்பல்ல
It is not a rejection of life.
அது வாழ்வை விலக்குவதல்ல
His life has meaning.
அவனுடைய வாழ்வு அர்த்தமுடையது.
Its meaning is a luminous, powerful transfiguration.
அதன் அர்த்தம் ஒளி பொருந்தியதும் சக்தி வாய்ந்ததுமான உருமாற்றமாகும்.
It is an emergence of the Divine in the creature.
அது படைப்பிலிருந்து இறைவன் வெளிவருவதாகும்
This must be the high-uplifted goal.
இது ஒரு உன்னதமான உயர்த்தப்பட்ட குறிக்கோளாக இருக்க வேண்டும்.
This is that supreme signifi cance.
Page 265
Para 7
இதுவே அந்த ஒப்புயர்வற்றதன் உட்பொருள் ஆகும்
The transfiguration may be a potentiality, not a possibility.
உருமாற்றம் ஒரு உள்ளாற்றலாகும், சாத்தியக்கூறு அல்ல
There are psychological and practical conditions for it.
மனோதத்துவ மற்றும் நடைமுறை வரையறைகள் அதற்கு உண்டு.
But first we must consider the essential principles of Sachchidananda’s descent.
முதலில் நாம் சச்சிதானந்தத்தின் இறங்குதலுக்கான அத்தியாவசியமான தத்துவங்களைக் கருத வேண்டும்
We have already seen its descent into cosmic existence.
பிரபஞ்ச வாழ்வில் அதன் இறங்குதலை ஏற்கனவே பார்த்தோம்
We must now consider the large plan of its order here.
இப்போது நாம் இங்கு அதன் ஒழுங்கு முறைக்கான பெரிய திட்டத்தைக் கருத வேண்டும்
We must consider the nature of the power of Conscious-Force.
சித் சக்திக்கான திறனின் தன்மையை நாம் கருத வேண்டும்.
It reigns over the conditions under which we now exist.
நாம் இப்போது உள்ள சூழ்நிலையை அது ஆட்சி செய்கிறது.
The 7 or 8 principles are essential to all cosmic creation.
ஏழு அல்லது எட்டு தத்துவங்கள் எல்லா பிரபஞ்ச படைப்பிற்கும் அத்தியாவசியமாகிறது.
They are manifested or as yet unmanifested in ourselves.
அவைகள் நம்முள் வெளிப்பட்டும், இன்னும் வெளிப்படாமலும் உள்ளன.
We are sti ll this ‘Infant of a year’.
நாம் இன்னும் ஒரு வயதுக் குழந்தையாகவே உள்ளோம்.
We are far from being adults of evoluti onary Nature.
பரிணாமத்திற்கான வயது வந்தவர்களாக நாம் மாறவே இல்லை.
The higher Trinity is the source and basis of all existence.
உயர்ந்த திரித்துவம் எல்லா வாழ்வுக்கும் ஆதாரமாகவும் அடிப்படையாகவும் உள்ளது.
It is the basis of all play of existence.
வாழ்வு எனும் லீலைக்கு அது அடிப்படையாக உள்ளது.
All cosmos is an expression and action of its reality.
எல்லா பிரபஞ்சமும் அதன் சத்தியத்தின் வெளிப்பாடு மற்றும் செயலாகும்.
No universe can be merely a form of being.
எந்தப் பிரபஞ்சமும் ஒரு ஜீவனின் வெளித் தோற்றமாக இருக்க முடியாது.
It cannot have sprung up in an absolute nullity and void.
வெறுமையான சூன்யத்திலிருந்து அது தோன்றியிருக்க முடியாது.
It cannot remain standing out against a non-existent emptiness.
இல்லாத ஒரு வெறுமைக்கு எதிராக அது நின்று கொண்டிருக்க முடியாது.
It must be a figure of existence.
அது ஜீவனின் உருவமாக இருக்க வேண்டும்
This must be within the infinite Existence behind all figure.
எல்லா தோற்றத்திற்கும் பின்னால் இது அனந்தமான வாழ்வுக்குள்ளும் இருக்க வேண்டும்
Or it must be itself the All-Existence.
அல்லது அதுவே பரம்பொருளாக இருக்க வேண்டும்
We can unify our self with cosmic being.
பிரபஞ்ச ஜீவனோடு நாம் நம்மை ஒருங்கிணைத்துக் கொள்ளலாம்.
We then see it is really both these things at once.
அப்போது நாம் அது ஒரே சமயத்தில் இரண்டுமாகவும் உள்ள உண்மையைப் பார்க்கலாம்.
It is the All-Existent fi guring Himself out.
அது பரம்பொருள் தன்னைத் தோற்றமாக வெளிப்படுத்துவது ஆகும்.
He figures Himself in an infinite series of rhythms.
அது தன்னை எல்லையற்ற தொடரின் லயமாக, தோற்றமாக வெளிப்படுத்துகிறது.
He does so in His own concepti ve extension of Himself.
அது தன்னையே தான் விரிவுபடுத்துவதன் மூலம் அதைச் செய்கிறது.
This extension is of Time and Space.
இந்த விரிவு காலமும் இடமுமாகிறது.
Any cosmic action is impossible without the play of Force of Existence.
பிரபஞ்சத்தின் எந்தச் செயலும், சத் சக்தியின் லீலையின்றி செயல்பட முடியாது.
It produces and regulates all these forms and movements.
அது இத்தோற்றங்களையும், சலனங்களையும் உருவாக்கி ஒழுங்குபடுத்துகிறது.
That Force is equally the action of an infinite Consciousness.
இதுவும் அனந்த ஜீவியத்தின் செயலே ஆகும்
This is because it is by nature a cosmic Will.
ஏனென்றால், அது இயற்கையில் பிரபஞ்சத்தின் உறுதியாகும்
It determines all relations.
அது எல்லா தொடர்புகளையும் நிர்ணயிக்கிறது.
It apprehends them by its own mode of awareness.
அது தனக்கேயுரிய விழிப்புணர்வுக்கான முறையில் அவைகளைக் கைப்பற்றுகிறது.
It could not do so without a comprehensive Consciousness behind.
அதன் பின்னால் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு ஜீவியம் இல்லாமல் அது செயல்பட முடியாது.
This Consciousness is behind that mode of cosmic awareness.
இந்த ஜீவியம் பிரபஞ்ச விழிப்புணர்வுக்கான முறையின் பின் உள்ளது.
It originates as well as holds and fi xes the relati ons of Being.
ஜீவனின் தொடர்புகளை அது எழுப்புகிறது, நிலைக்க வைக்கிறது, பொருத்துகிறது.
The relations of Being are a developing formation.
ஜீவனின் தொடர்புகள் உருவாக்கம் வளர்வதாகும்.
Or they are a becoming of itself which we call a universe.
அல்லது அவை தானே பிரபஞ்சமாக ஆவதாகும்.

 

************

ஜீவிய மணி
ஜீவனின் ஆழத்திலிருந்து எழும் சொல்லே மந்திரம். அதை ஜபித்தால் மனதில் சக்தி எழுந்து சூழல் அதிர்ந்து, காரியம் கைகூடுகிறது. அச்சக்தி எழும் இடத்திலிருந்து அன்னையை நினைத்தால் உமிழ் நீர் தித்திக்கும். அங்கேயே தங்க முடிந்தால் யோகம் பலிக்கும். தங்கியவர்கள் அன்னையின் குழந்தைகள். சமர்ப்பணம், அர்ப்பணம் பயிலும் இடம் அது.
 
 
*************
 

 

ஜீவிய மணி
முற்பிறவியின் புண்ணியத்தால் அனுபவிக்கும் பேறுகளில் அதிர்ஷ்டம் சிகரமானது. அன்னையை அறிவது அதனினும் சிறப்பானது. செய்யும் செயல்களில் சிறு குறையும் எழவில்லையெனில் அது ஒருவருடைய வாழ்வின் அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது. மேலும் ஆன்ம வளர்ச்சி, ஆத்ம நிறைவு, பிறவிப்பயன் ஆகியன பூர்த்தியாவதையும் காட்டுகிறது.



book | by Dr. Radut