Skip to Content

12. அஜெண்டா - கீழ்ப்படிதல்

அஜெண்டா

கீழ்ப்படிதல்

  • சிறியது விரும்பி பெரியதற்குப் பணிவது சுதந்திரம் அபரிமிதமாகப் பூர்த்தியாக உதவும்.
  • அளவுக்கு மீறி அதிகாரத்திற்கு உட்படுதல் மூட நம்பிக்கை - அன்னை.
  • எவ்வளவுக்கு எவ்வளவு நாம் சிறியதாக உணர்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு எதிர்ப்பு எழும் - அன்னை.
  • மனமும், ஆத்மாவும் சரியானால் எதுவும் தவறாகாது.
  • ஈஸ்வரனே சக்திக்குச் சரணடைந்தபொழுதே ஈஸ்வரனுடைய இறையம்சம் பூர்த்தியாகும்.
    அந்த நிலையிலும் பெண் சற்று அதிகாரம் செய்வாள்.
    இழுத்துப் பிடிப்பது சரி எனப் பகவான் கூறுகிறார்.
  • கடவுள்கள் திருப்தி படாவிட்டால் ரிஷிகளை நேரடியாக சச்சிதானந்தம் போகத் தடை செய்வார்கள்.
  • அன்பானவர் உயர்ந்த ஜீவியமுடையவரானால் அவர் சமைத்த உணவு தேவாமிர்தமாகும். சாப்பிட்டு ஜீரணமாகும் பொழுது உடலெல்லாம் பூரிக்கும், உடலைக் கடந்து ஜீவன் பூரிப்பால் மலரும்.
  • ஆசை எவ்வளவு உயர்ந்ததானாலும், பூர்த்தியான பின் திகட்டும். இது உடலின் ஆசை.
  • உயிரின் ஆசை பூர்த்தியானால், பூர்த்தி செய்தவர் குறையெழும், தவறாக நடக்கச் சொல்லும், துரோகம் எழுந்து நம்மை மீறிச் செயல்படும்.
  • ஆசைக்கோர் அளவில்லை. கிடைக்கிறது கிடைத்தால் ஆச்சரியம் எழும். ஆச்சரியம் சிறிது நேரத்தில் மாறும். பூர்த்தி செய்தவர்மீது பொறாமை எழும். நீ எனக்குச் சேவை செய்யக் கொடுத்து வைத்திருக்கிறாய் என்று மனம் பேசும், வாய் கூசாமல் கூறும். தொடர்ந்து இந்தச் சேவை செய்ய உன்னை அனுமதிக்க மாட்டேன் என கர்ஜனை செய்யும். தொடர்ந்து இந்தச் சேவையை எனக்கு நீ செய்ய வேண்டும், அதனால் உனக்கு நல்ல பெயரும் வரக் கூடாது என வெட்கமில்லாமல் கூறும்.
    ‘நீ எவ்வளவு உயர்ந்தாலும், நான் எவ்வளவு மட்டமாக இருந்தாலும், என் வாயால் உன் உயர்வை ஏற்க மாட்டேன். இந்த ஜென்மத்தில் மட்டுமில்லை, எந்த ஜென்மத்திலும் அந்தப் பாவத்தை நான் செய்ய மாட்டேன்’ என மனம் சபதம் கூறும். சுமார் 14 வருடங்கள் இந்த discipline-ஐ கட்டுப்பாட்டை விரும்பி ஏற்றவருக்கு, முடிவான நிலையிலும் முனைப்பு இல்லாமலிருந்தும், இனி என் வீட்டிற்கு வராதே என அசரீரியாக எழுந்து ஆச்சரியமாக எழுதி கையெழுத்து இட்டு, அவருக்கு அவலத்தினின்று விடுதலை கிடைத்தது. அதன்பின் அதே நிலையிலுள்ள கயமை, சிறுமை, பொய், தீமை அவரை அணுகவில்லை.
  • பொறுமை, தீமை தானே விலக வழி செய்யும்.
  • ஆத்மா பெறும் அனுபவ அறிவு, காலத்தைக் கடந்த நிலையில் அன்பருக்கு விடுதலை தருகிறது. செய்பவன்மீது அனுதாபப்பட்டால் மீண்டும் வரும். தீமை செய்பவன், கயமையான கொடுமையை விரும்பி செய்பவன் கஷ்டப்படக் கூடாது என அறிவோடு விரும்பினால் அவன் நான் கஷ்டப்படுவதால் நீ வருத்தப்படுவதை நான் கண்டு மகிழ வேண்டும் என தன் உபாதையைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்வான்.
  • அதையும் பொறுத்திருந்தால், ‘அந்த உலகில்’ கொடுமைக்கு ஆளானவர் அன்பரின் முயற்சியால் விடுதலை பெற்று பிறருடைய இனிமையான சேவையைப் பெறுவர்.
  • அன்னை கூறியவற்றை அப்படியே வேதவாக்காகப் பின்பற்றினால் வேதம் பெண்களின் தீமையை விவரித்ததையும் கடந்து பலனை வாழ்வில் பெறலாம்.
  • அன்பர் தவறாது பெறலாம்.
  • அன்பர் யோகத்தால் கயமை திருவுருமாறாது. அதற்கு கயமை இசைய வேண்டும்.
  • ‘நம்மை பகவான் பொறுத்துக் கொள்கிறார்’ என்று அன்னை தம்மையே குறிப்பிடுகிறார்.

*********



book | by Dr. Radut