Skip to Content

11. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

கர்மயோகி

95. ஜடத்தில் சத்திய ஜீவிய ஜோதி - கீரீம் கலர்.

  • ஆன்மீகம் ஒரு பெரிய சாஸ்த்திரம், சமுத்திரம் போன்றது.
  • கணிதம், விஞ்ஞானம், பொருளாதாரம், வரலாறு என சுமார் 50-க்கு மேற்பட்ட கல்வித்துறைகள் ஏற்பட்டு விட்டன.
  • பல ஆயிரம் ஆண்டுகட்குமுன் கல்வி எனில் காவியம் எழுதுவது. காவியம் எழுத ஒருவன் ரிஷியாக இருக்க வேண்டும் என்பது அன்றைய கருத்து.
  • நாகரீகம் வளரும்பொழுது கல்வி, காவியம், தத்துவம் எனப் பிரிந்தது. பிறகு கணிதம் ஏற்பட்டது.
  • பௌதீகம் என்ற ஒரு துறை 20 (அல்லது) 30 ஆகப் பிரிந்து அவற்றிற்கு உட்பிரிவுகள் ஏற்பட்டு வளர்ந்து விட்டன.
  • ஆன்மீகம் கல்வியைவிட உயர்ந்த துறை, அடிப்படையானது.
  • அன்று இத்துறையின் பரப்பு, வீச்சு என்று அறிவதே பிரமிப்பாக இருக்கும். இன்று அதை விவரமாக எழுதினால் அதுவே ஒரு நூலாகும்.
  • பகவான் எழுதிய முப்பது வால்யூம்களும், அன்னை எழுதிய 35 வால்யூம்களும் போக, இதுவரை வெளிவராத எழுத்து, நூல், கருத்து ஏராளமாக உண்டு. கடலினும் பரந்த துறை அன்னை வாழ்வு.
  • சத்திய ஜீவியம் ஜோதியாவது அவற்றுள் ஒரு தலைப்பு.
  • பகவான் ஜெயிலில் கண்ட நாராயண தரிசனம், அர்ஜூனன் பெற்ற விஸ்வரூப தரிசனம். அதுவே பூரண யோகத்திற்கு அடிப்படையான தரிசனம், முதல் சித்தி என்று அறிவேன்.
    அதுவே அனைவரும் அறிந்தது என நான் எண்ணியிருந்தேன்.
    பகவான் அர்ஜூனனுடைய தரிசனமும், தான் பெற்ற தரிசனமும் ஒன்று என்று எங்கும் கூறவில்லை. வேறு என்றும் கூறவில்லை. அதனால் இல்லாததை உண்டு என நினைக்கத் தோன்றுகிறது.
    இத்தவறு அடிக்கடி எழும்.
  • 1980-இல் அஜெண்டா வந்த பொழுது பகவான் கண்டது சத்திய ஜீவிய தரிசனம் என அன்னை கூறுவது தெரிந்தது.
  • அதில் கோர பாவம் இல்லை என்பது நினைவுக்கு வந்தது.
    முதன் முறையாக எனக்குத் தெளிவு ஏற்பட்டது.
  • அஜெண்டாவில் அன்னை அநேக புதிய விஷயங்களைக் கூறுகிறார்.
  • அஜெண்டா புரிவது சிரமம். இது என் இதயம். என் அன்பர்கட்கு வழங்கும் பரிசு என அஜெண்டாவைக் கூறுகிறார்.
  • Evening Talks-இல் பகவானைப் பார்க்க வந்தவர் பிரம்மச்சரியத்தைப்பற்றிக் கேட்கிறார். பகவான் நான் எந்தக் கட்டுப்பாட்டையும் விதிப்பதில்லை. அவரவர்களே ஏற்கும் கட்டுப்பாடே கட்டுப்பாடு என்கிறார்.
  • சிறு தெய்வ வழிபாடு உகந்ததல்ல என பகவான் எழுதுவது உண்டு.
  • அவர் எதையும், எவரையும் கட்டுப்படுத்துவதில்லை.
  • அவர் கூறியவற்றை நம் உள்ளுணர்வில் புரிந்து ஏற்பதே முறை.
  • இதனால் சத்திய ஜீவியம் அருகே வரும் தகுதியுள்ளவர்களும், விலகும் நிலை ஏற்படுகிறது.
  • சத்திய ஜோதி பொன்னிறம்.
  • அது மனத்தில் மஞ்சளாகவும், உயிரில் ஊதாவாகவும், உடலில் சிவப்பாகவும் தெரியும் என எழுதியுள்ளார்.
  • ஒரு அன்பருக்கு கிரீம் கலரில் பகவான் தோன்றுகிறார்.
    எப்படி விளங்கும்.
  • ஜீவனில் சத்திய ஜோதி கிரீம் கலராக இருக்கும் என்று பார்க்கும் பொழுது புரிகிறது.
  • ஆன்மீகம் கடல்.
  • குருவில்லாமல் யோகம் செய்யக்கூடாது.
  • பூரண யோகத்திற்குப் பகவான், அன்னை மட்டுமே குரு.
  • மனித குரு தேவைப்படாத பின்னரே மனத்திலுள்ள ஜகத்குரு வழி காட்டுவார்.
  • பகவானுக்கு அந்நிலை ஏற்பட்டபொழுது மௌன குரு உன்னைப் பிசாசு பிடித்துள்ளது என்றார்.
  • அசரீரியைக் கேட்டுப் பணிந்த பகவான் பிற்காலத்தில் அதை நான் புறக்கணித்தேன் என்கிறார்.
  • இவையெல்லாம் பகவானுடைய நிலை என்றால் அன்பர் தன்னை பகவானோடு ஒப்பிடக் கூடாதல்லவா?
  • எதைச் செய்தாலும் அது முனைப்பு (initiative), அகந்தையின் செயல் என்பதால் யோகத்தை மேற்கொள்ள அதுவும் தடை.
  • சமர்ப்பணம் மட்டுமே சரியெனில், எதையும் எளிதில் சமர்ப்பணம் செய்ய முடிவதில்லை.
  • சமர்ப்பணம் அடியோடு நெடுநாள் மறந்து போவது அன்பர் நிலை.
  • பிரச்சனை தீரவில்லை, பிரார்த்தனை பலிக்கவில்லை என்பது குறைவு.
  • அந்த நிலையில் கேட்கும் முதற்கேள்வி, சமர்ப்பணம் செய்தீர்களா? இல்லை என்ற பதில் தவறாமல் வரும்.
    மேலும் பேசினால் எனக்கு ஒரு வாரமாக சிரமம். அன்னை நினைவே வரவில்லை. நீங்கள் கேட்கும்பொழுதுதான் நினைவு வருகிறது என்பார்.
    சரி இப்பொழுது சமர்ப்பணத்தை ஆரம்பிக்கலாம் எனில், அது ஒன்றுதான் என்னால் முடியாது என்பது தவறாமல் வரும் பதில்.
  • ஆன்மீகம் கடல், பூரண யோகம் சமுத்திரம். படகில் இங்கெல்லாம் பிரயாணம் செய்ய முடியாது. படகுமில்லாமல் பயணம் செய்ய வழி கேட்பது வழக்கம்.

*********



book | by Dr. Radut