Skip to Content

09. மனித வாழ்வின் சூட்சுமங்கள்

மனித வாழ்வின் சூட்சுமங்கள்

கர்மயோகி

  • மனிதன் குடும்பத்தின் பகுதி. குடும்பம் சமூ கத்தின் பகுதி.
  • குடும்பம், சமூகம் மனிதன் skyscraper போல வளர உதவுகின்றன.
  • குடும்பம், சமூகமில்லாவிட்டால் மனிதன் மணல் மேடு போல் உயர்வான்.
  • மனித வாழ்வு செயல்களாலானது.
  • அச்செயல்கள் புறச் செயல்களுடன் தொடர்புள்ளன.
  • அவற்றுள் சில அவனை உயர்த்துவதாகவும், பல அழிப்பதாகவும் அமைந்துள்ளன.
  • மனிதன் உணர்வாலானவன்.
  • குடும்பத்திலும், சமூகத்திலும் அவன் உணர்வுக்குரியவருண்டு.
  • இத்தொடர்புகளில் சில உயர்த்துவதாகவும், பல அழிப்பதாகவும் அமையும்.
  • உணர்வைக் கடந்த குணங்களுண்டு.
  • பக்தன் மனதில் அன்னை மையமாக வீற்றுள்ளார்.
  • அன்னை குணம், சக்தி, ஜீவியத்தாலான சூட்சும உருவம்.
  • பக்தனுடைய குணங்கள், வெளியில் குடும்பத்துடனும், சமூகத்துடனும், உள்ளே அன்னையுடனும் தொடர்பு கொண்டுள்ளன.
  • அவற்றுள் அழிப்பவற்றை அவன் அறிவான்.
  • அத்தனை தொடர்புகளும் அடைக்கப்பட வேண்டியவை.
  • அன்னை நம்மை உள்ளே தொடும் இடமெல்லாம் தொடர்புகள்.
  • அத்தனை தொடர்புகளும் நம்மை உயர்த்தக் கூடியவை.
  • இன்று மனிதனுடைய maximum சொஸைட்டியின் உச்சக் கட்டம்.
  • சொஸைட்டியின் maximum அன்னைக்கு maximum.
  • அன்னையுடன் குணங்களால் தொடர்பு கொண்டால் சொஸைட்டியின் உச்சிக்குப் போவோம்.
  • அன்னையுடன் ஜீவனுள்ள தொடர்பிருந்தால் அன்னை நம்மை தன் maximum-க்குக் கொண்டு செல்வார்.
  • கடினமான காரியம் நம் குணமாறுதலால் சுலபமாக நடந்தால் அது சொஸைட்டியின் உச்சிக்குப் போக வழியுண்டு எனக் காட்டுகிறது.
  • நடக்காதது நடந்தால், அது அன்னையின் சக்தி செயல்படுவதையும், அன்னையின் maximum-த்திற்குப் போக வழி ஏற்படுகிறது எனவும் கூறும்.
  • நாள் முழுவதும் சிறியது, பெரியதை வெளிப்படுத்தினால், கடினமானவை எளிதாக நடந்தால், நடக்காதது நடந்தால், நடக்கவே முடியாது என்பவை நடந்தால், நாம் தயாராகிறோம் எனப் பொருள்.
  • சுமுகம் முதற்படி; Goodwill அடுத்தது; இனம் புரியாத சந்தோஷம் அடுத்தது; பிறர் பெறும் நல்லது மனதைப் பூரிக்க வைப்பது முடிவானது.

சுமுகமாக நம்மை மனிதர்கள் — விரோதிகள் — நாடுவது சரியான Life Response.

********

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
பெருமை அகந்தைக்குரியது.
ஆத்ம நிறைவு அனைவருக்கும் உரியது.
ஒரு ஆத்மாவின் சாதனை அனைவர் வாழ்விலும்
அபரிமிதமான பெருமை நிறையும் திருப்தி தரவல்லது.
 

********



book | by Dr. Radut