Skip to Content

04. யோக வாழ்க்கை விளக்கம்

யோக வாழ்க்கை விளக்கம்

22/2. சமர்ப்பணம் உடலுணர்வால் பூர்த்தியாகும்.

  • சமர்ப்பணம் என்றால் மனித ஜீவன் தெய்வீக ஜீவனைச் சரணடைவது.
  • ஜீவனுக்கு ஜீவியம், சக்தி, ஆனந்தம் உண்டு.
  • சத், சித், ஆனந்தம் நம்மில் சத் ஜீவனாகவும், சித் ஜீவியமாகவும் சக்தியாகவும், ஆனந்தம் ஆனந்தமாகவும் உள்ளது.
  • மனிதன் தெய்வத்திற்குச் செய்யும் சமர்ப்பணம் பூர்த்தியாக அவன் ஜீவனோடு ஜீவியம், சக்தி, ஆனந்தமும் சமர்ப்பணமாக வேண்டும்.
    (உடல், பொருள், ஆவி அனைத்தையும் தருகிறேன் என்பதுபோல)
  • நடைமுறையில் எப்படிச் செய்வது?
  • நான் ஒரு பொருளை தம்பிக்குக் கொடுத்தால், மனதாரக் கொடுக்கிறேன் என்கிறோம்.
    மனம் என்பது அகம்.
    அகத்தில் என் ஜீவன் உள்ளது. அது சம்மதிப்பது மனதாரச் செய்வது.
    அந்த ஜீவனுக்கு ஜீவியம் உண்டு.
    பொருளைக் கொடுக்க தம்பி வீட்டிற்குப் போனால் பொருள் மறந்து போவது, ஜீவன் தயாரானாலும் ஜீவியம் தயாரில்லை என்பது.
    கையில் கொடுக்கும்பொழுது நம் கையால் தவறி கீழே விழுவது சக்திக்குச் சம்மதமில்லை என்பது.
    கொடுத்தபின் நம் முகம் சுருங்குவது ஆனந்தம்
    சமர்ப்பணமாகவில்லை என்பது.
  • செயலுக்குரிய நினைவு, பிரியம், உணர்ச்சி உண்டு.
    நினைவு அறிவுக்குரியது.
    பிரியம் நெஞ்சுக்குரியது.
    உணர்ச்சி உடலுக்குரியது.
    சமர்ப்பணம் உடல் உணர்வில் பூர்த்தியாவது, முன்சொன்ன நான்கு நிலைகளிலும் பூரணமாவது.
  • பேச்சு வழக்கில் ஆத்மார்த்தமாகச் சொன்னேன் என்பதும், மனப்பூர்வமாகக் கூறுகிறேன் என்பதும் மேற்சொன்ன பூரண நிலைகள்.
  • ஆத்மார்த்தமாகச் செய்பவன் அதைச் சொல்ல மாட்டான். செயல் ஆத்மார்த்தமாக இல்லை, மனப்பூர்வமாக இல்லை என்பதை அறிவதால் செயலின் குறையை சொல்லால் நிரப்ப முயலும் பழக்கம் இது.
  • ஒரு உதவி கேட்டால் செய்யப் பிரியப்படுபவன் செய்வான். பிரியப்படாதவன் சொல்வான், பலமுறையும் கூறுவான். சொல்பவன் செய்ய மாட்டான் என நம் வழக்கு அறியும். சகுனம் தலைகீழே தெரிவது, கனவு தலைகீழே பலிப்பது ஆகியவை சிருஷ்டியில் மேல் உள்ள நான்கும் (சத், சித், ஆனந்தம், சத்திய ஜீவியம்) கீழுள்ள நான்காக (ஜடம், வாழ்வு, மனம், சைத்திய புருஷன்) மாறுவதினின்று எழுவது, The Life Divine-இல் 27ஆம் அத்தியாயம் கூறுவது.
  • சமர்ப்பணம் யோகத்தில் முதல் discipline. ஆரம்பிப்பது அரிது.
    ஆரம்பிப்பவர் முழுமையாகச் செய்வது நாமறியாதது.
    பகவானும், அன்னையும் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தனர்.

*********



book | by Dr. Radut