Skip to Content

09. ஸ்ரீ அரவிந்தரும், மரபும் - Sri Aurobindo and the Tradition

Sri Aurobindo and the Tradition

ஸ்ரீ அரவிந்தரும், மரபும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  1. Tradition knows God in the descent.
    Sri Aurobindo speaks of God in the ascent.

    மரபு படைப்பிலுள்ள கடவுளை அறியும்.
    ஸ்ரீ அரவிந்தர் பரிணாமத்திலுள்ள கடவுளைப் பற்றிப் பேசுகிறார்.

  2. Tradition believes in pralaya when Ishwara dissolves.
    To Him, there is no pralaya, Ishwara reveals, says He, the Marvel of Supermind.

    ஈஸ்வரன் கரையும் போது பிரளயம் உருவாகிறது என மரபு நம்புகிறது.
    பிரளயம் என்பதே இல்லை, ஈஸ்வரன் சத்திய ஜீவியத்தின் அற்புதத்தை வெளிப்படுத்துகிறான் என்று ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்.

  3. Tradition speaks of the Unity of the One.
    Sri Aurobindo tells us of the Unity in multiplicity also.

    மரபு ஒன்றின் ஐக்கியத்தைப் பற்றிப் பேசுகிறது.
    ஸ்ரீ அரவிந்தர் பலவற்றின் ஐக்கியத்தைப் பற்றியும் நமக்குக் கூறுகிறார்.

  4. Jivatma is not eternal for the tradition.
    To Him, Jivatma is Paramatma, the Individual is the Eternal.

    ஜீவாத்மா அழியக்கூடியது என மரபு கூறுகிறது.
    ஜீவாத்மாவே பரமாத்மா, தனியன் அழிவற்றவன் என ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்.

  5. Tradition divides life as Divine and undivine.
    To Him, there is nothing Undivine, all are Divine.

    மரபு வாழ்வை இறைத்தன்மை உடையது, இறைத்தன்மை அற்றது எனப் பிரிக்கிறது.
    இறைத்தன்மை அற்றது என எதுவுமே இல்லை, அனைத்தும் இறைவனே என ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்.

  6. Tradition searched for physical immortality.
    Sri Aurobindo leads Man to spiritual immortality.

    மரபு ஜடத்தின் அமரத்துவத்தைத் தேடியது.
    ஸ்ரீ அரவிந்தர் மனிதனை ஆன்மீக அமரத்துவத்திற்கு இட்டுச் செல்கிறார்.

  7. Moksha can be attained even if ego survives partly or fully.
    Sri Aurobindo's yoga cannot be begun if ego is not dissolved.

    அகந்தை முழுமையாகவோ, சிறிதளவோ இருந்தாலும்கூட மோட்சத்தை அடையலாம் என மரபு கூறுகிறது.
    அகந்தையைக் கரைக்காமல் ஸ்ரீ அரவிந்தரின் யோகத்தை ஆரம்பிக்க முடியாது.

  8. Selfishness is no bar for the traditional goal.
    Self-giving is indispensable for His yoga.

    மரபிற்குச் சுயநலம் தடையில்லை.
    ஸ்ரீ அரவிந்தரின் யோகத்தில் தன்னைத் தருதல் தவிர்க்க முடியாதது.

  9. The traditional yoga can be fulfilled from any part of the being.
    Integral Yoga can only be done from all the parts of Man's being.

    மரபு வழி யோகத்தை ஜீவனின் எப்பகுதி மூலமும் பூர்த்தி செய்ய முடியும்.
    பூரண யோகத்தை மனித ஜீவனின் அனைத்துப் பகுதிகளின் மூலமும் செய்ய வேண்டும்.

  10. All traditional yogas are of the surface Mind.
    Integral Yoga is done from the subliminal which ultimately becomes the surface.

    மரபு வழி யோகங்கள் அனைத்துமே மேல்மனத்தில் செய்யப்படுபவை.
    பூரண யோகம் அடிமனத்திலிருந்து செய்யப்பட்டு இறுதியில் அடிமனம் மேல்மனமாகிறது.

தொடரும்....

*******

ஜீவிய மணி
 
பிழைக்கத் தெரியாதவனுக்குத் தொழில்.
வாழத் தெரியாதவனுக்கு வசதி.
வசதியையும், தொழிலையும் விலக்கும் வலிமை மனிதனை தெய்வமாக்கும்.
 

*******



book | by Dr. Radut