Skip to Content

06. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

கர்மயோகி

63. எரிச்சல் பட முடியாதது - சமத்துவம்.

  • மனித குணங்களில் ரஜஸ் ஒன்று.
  • அதற்குப் பிடித்ததை ஏற்கும், பிடிக்காவிட்டால் எரிச்சல்படும்.
  • தெய்வங்களும் அதற்கு முழுமையாக விலக்கில்லை.
  • எரிச்சல்படாவிட்டால் எதிராகச் செயல்படும்.
  • பஸ்மாசூரனை தகிக்க விஷ்ணு செயல்பட்டார்.
  • இது செயலுக்குரிய எரிச்சல்.
  • எரிச்சல்படவில்லையெனில் எதிரி மறைவான்.
  • மேடம் அலெக்ஸாண்டர் பு- நெருங்கி வந்தபொழுது எரிச்சல் படவில்லை, கண்ணை மூடி தியானத்தில் அமர்ந்தார். புபோய் விட்டது.
  • அதைவிட உயர்ந்த கட்டம் புலி என்னைத் தின்னப் பிரியப்பட்டேன் என்பது.
  • அதிகபட்சம் மனிதன் எரிச்சலைக் காட்டாமலிருக்கலாம்.
  • உள்ளே எரிச்சல் படாமலிருக்க சாட்சி புருஷனாயிருக்க வேண்டும்.
  • எரிச்சல் பட முடியாதவனுக்கு யோகம் பலிக்கும்.
  • எரிச்சல் படாமலிருக்க ஞானம் தேவை.
  • ஏன் எதிரி எரிச்சல் மூட்டுகிறான் என்பது அந்த ஞானம்.
  • அந்த ஞானமிருந்தால் உள்ளே எரிச்சல் எழாது.
  • தான் விரும்பும் பெண் அழகனான அயோக்கியனை விரும்புகிறாள் என்றறிந்து டார்சி எரிச்சல்படுவதைவிட அது நிலைக்காது என்ற ஞானம் பெற்றிருந்ததால், அவனை விலக்கி அவளைப் பெற முடிந்தது. இது பிரம்மப் பிரயத்தனம்.
  • எரிச்சல் படக்கூடாது என்ற முடிவு இதுவரை எழாத எரிச்சலைத் தரும்.
  • அந்த முடிவு சில நாள் நீடித்தால், பல நாள் பயில முடிந்தால், அன்பர் வாழ்வு அர்த்தமுள்ளதாகும்.
  • முதலாவதாக மற்றவர் அர்த்தமற்ற ஆழ்ந்த அபிப்பிராயங்கள் தெரியும்.
  • அடுத்தது நாமும் அது போலிருப்பதால் நமக்கு அது வருகிறது எனத் தெரியும்.
  • எரிச்சல்படாததோடு, எரிச்சலை விலக்க முடியுமானால் swimming poolல் இருந்து கடலுள் வந்தது தெரியும்.
  • அர்த்தமற்ற வெறும் பெண்ணான மனைவியில் ஆழ்ந்த மனைவியின் பாசம் தெரியும்.
  • பாகற்காயின் ருசி கசப்பு, இப்பொழுது பாகற்காய் ணீ நிமிஷம் இனிக்கும்.
  • தானே சுற்றுப்புறம் சுத்தமாகும்.
  • அமைதி என்றால் என்ன என்று முதன்முறையாகப் புரியும்.
  • ஓரளவு அன்பு நாடி வரும்.
  • பெரும் அளவு அன்பு செலுத்த முடியும்.
  • அர்த்தமற்றவையின் அர்த்தம் விளங்கும்.
  • சிலையும், படமும் உயிர் பெறும்.
  • மேலேபடும் காற்று தென்றலாக இனிக்கும்.
  • இனிப்பின் சுவையைக் கடந்த உயர்ந்த சுவை இனிப்பின் பின்னால் தெரியும்.
  • நல்ல சொல் பேசியறியாதவர் நம்மிடம் இனிக்கப் பேசுவார்.
  • வாய் ஓயாமல் பேசுபவர் வாய் மௌனமாகும்.
  • பரம்பரையான ஆசாரம், கட்டுப்பெட்டி, மடியானவர் தன் பெரும் அசுத்தத்தை அறிவார்.
  • உயர்ந்தோர் தம்மை உயர்ந்தோரில்லை என எளிதில் காண்பார்.
  • அற்புதம் மின்னலாகத் தெறிக்கும்.

தொடரும்.....

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
மனித முயற்சி எதிரிக்குத் துணை செய்யும்.
தெய்வ முயற்சிக்கு எதிரி இல்லை; எதிரும் இல்லை.
 

 
*******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
நடக்கும் நல்ல காரியங்களை அருள் செய்வதாகவும்,
நடக்காததைத் தம் குணம் மறுத்ததாகவும்
புரிந்து கொள்வது அறிவுடைமை.
 
                                                                    
*******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
இடைவிடாது நெஞ்சு அன்னையை அழைக்கும்
பொழுதும், உடல் அன்னை பக்கம் திரும்ப மறுக்கிறது.
உடலே அன்னையை அழைத்தால் உலகமே நகரும்.
 
 
********

 



book | by Dr. Radut