Skip to Content

04. சாவித்ரி

சாவித்ரி

P.143 As if a stranger or enemy at its door

முகம் தெரியாத மனிதன், எதிரி வாயில் வந்து

  • அதிர்ச்சி பெற்ற புலன்கள் அனுமதித்த எண்ணங்கள்
  • ரூபத்தின் ஜீவனை இழந்த அவ்வெண்ணங்கள்
  • கண்டதை விண்டுணராத விநோத இதயம்
  • செயலைக் கண்டும் அதன் திறனையறியாத
  • நிகழ்ச்சிகள் உணர்த்தும் நித்தியத்தைத் தவறவிடும்
  • அதன் பொருளென்ன என்று அறிய முயலாத நிலை
  • மனித ரூபம் பெற்ற ஜீவன்கள் நிறைந்த இடம்
  • நேரம் கண்ட வேகத்துள் முழுதும் இழந்த பெருநிலை
  • என்னவென்று அறியாத, ஏன் வாழ்கிறோம் என்றுணராத
  • இயற்கை தரும் இன்பம் எழில் தரும் முடிவென
  • புறம் தரும் புலனுணர்வு புலப்படும் நிலை
  • உடல் பெற்றதே உலகம் பெற்றதாக உணரும் பாங்கு
  • உணர்ந்து, செயல்பட்டு, புலனாலறிந்து, புலப்படுவது தவிர வேறில்லை
  • ஆத்மாவின் புற ஆடையுடன் ஐக்கியமாகி
  • ஆழ்ந்து ஒளிந்துள்ள அறிவு கண்டுகொள்ளும்
  • அகக் கண்ணை அவன் மீதே பொருத்த மறுத்து
  • நாடகக் கர்த்தாவை தேடி மறுத்து
  • கண்டது மேடை, கண்ணில் பட்டது நாடகம்
  • ஆழ்ந்து உணரும் ஆராய்ச்சியுணர்வில்லை
  • சிந்தனை எழுந்து சிறக்கும் சிரமத்தை ஏற்கவில்லை
  • இயற்கையைக் கண்ட மனம் ஏதும் அறியவில்லை
  • வரத்தைப் போற்றி, வலியெழ அடித்ததைக் கண்டு பயந்து
  • அவள் சட்டத்தின் மந்திர யுக்தியை மனதில் கொள்ளவில்லை
  • சத்தியம் ஊறும் ஊற்றைக் காணத் துடிக்க மறுத்து
  • ஏராளமான தகவலை தஸ்தாவேஜாக்கி
  • தெளிவான நூலிழை கோர்க்கும் உணர்ச்சி மணிகள்
  • வேட்டையாடி, விரைந்து சென்று, நுகர்ந்து பார்த்து
  • ஒளியிலும், ஓடும் காற்றிலும் ஒடுங்கி நிற்கும் தமஸ்
  • உலகோடு இணைந்து மறையும் ஸ்பர்சத்தை நாடி
  • மேல் மன உணர்வை மேலோடு திருப்தி செய்து
  • இவை வாழ்வின் துடிப்பை மேலோடு தொட்டு
  • மறைவிலுள்ள ஆத்மாவின் ஸ்பர்சத்தை அறியாமல்
  • உள்ள ரூபத்தை வெளி ரூபத்தின்று காப்பாற்ற
  • பிழைத்தெழுந்து அனுபவிப்பதே நோக்கம்
  • குறுகிய வாழ்வின் குட்டை நாட்கள் நிரம்பின

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
நடந்தவை எல்லாம் நல்லது என்பவருக்கு
நல்லது மட்டுமே நடக்கும்.
 

*******



book | by Dr. Radut