Skip to Content

01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

XXIII. The Double Soul In Man
23. மனிதனுள் இரட்டை ஆத்மா
Ours is an embodied existence
Page 229
ஆன்மா உடலை ஏற்ற வாழ்வு நம்முடையது.
It expresses the world's dynamism.
Para 13
உலகம் இயங்குவதை நம் உடல் அனுமதிக்கிறது.
The other term is the status of spirit.
இரு நிலைகள் மற்றது ஆன்மாவின் அந்தஸ்து.
They are apparently opposites.
அவை எதிராகத் தோன்றுகின்றன.
It is only because of Ignorance.
இது அறியாமையால் ஏற்படுவது.
A harmony between them must be established.
இவற்றிடையே சுமுகம் வேண்டும்.
The manifested Being has two terms.
சிருஷ்டிக்கும் இரு நிலைகள் உள்ளன.
They are divided and opposed.
அவை பிரிந்து எதிரானவை.
There is the supramental consciousness-energy.
சத்திய ஜீவிய சக்தியுண்டு.
That alone can establish a perfect harmony between them.
அதுவே இவற்றிடையே சிறப்பான சுமுகமேற்படுத்த முடியும்.
Nature has a centre for its order of the
psychological movements.
இயற்கையின் உள்ளுணர்வு ஒழுங்கு பெறும் மையமுண்டு.
It is the secret spiritual-self.
அம்மையம் இரகஸ்யமான ஆன்மாவான பிரம்மம்.
In the ignorance Nature does not centre there.
அஞ்ஞானத்தில் இயற்கை அம்மையத்தை நாடுவதில்லை.
It does so in its substitute.
அதற்குப் பதிலாக ஏற்பட்ட இடத்தை இயற்கை நாடுகிறது.
It is the principle of ego.
அது அகங்காரம், அகந்தை, ஆணவம், "நான்'' எனப்படும்.
The world we live in is full of several things.
நாம் வாழும் உலகம் பலவற்றால் நிறைந்தது.
They are complex contacts, contradictions, dualities, incoherence.
அவை சிக்கலான தொடர்புகள், பிணக்குகள், இரட்டைகள், பொருத்தமற்றவை.
We need a rock of safety.
நமக்கு மலைபோன்ற பாதுகாப்புத் தேவை.
The ego supplies this.
அகந்தை அந்தச் சேவையை நமக்குச் செய்கிறது.
Against the cosmic and infinite we need a defence.
பிரபஞ்சம், அனந்தமிடமிருந்து நமக்குப் பாதுகாப்பு வேண்டும்.
We need a spiritual change.
நாம் தேடுவது ஆன்மீக மாற்றம்.
There this defence must be given up.
அங்கு இந்தப் பாதுகாப்புத் தேவையில்லை.
Ego has to vanish.
அகந்தை அழிய வேண்டும்.
It is the person.
அகந்தை தனி மனிதன்.
The person finds dissolved into a vast impersonality.
பரந்த பொது வாழ்வில் அகந்தை கரைந்து மறைகிறது.
We need an ordered dynamism of action.
நமக்கு முறையாகச் செயல்படும் ஒழுங்கு வேண்டும்.
This is impersonality.
இது பொது லோகம்.
There is no key for order.
ஒழுங்கைக் காணும் அறிகுறியில்லை.
There is a usual result.
வழக்கமான பலன் உண்டு.
One is divided into two parts of being.
மனிதனை இரு பாகங்களாகப் பிரிக்கின்றனர்.
One is the spiritual within.
ஒன்று உள்ளேயுள்ள ஆன்மீக பாகம்.
The other is the natural without.
மற்றது புறத்திலுள்ள இயற்கைக்குரிய பகுதி.
The other is the natural without.
அகத்திலுள்ளதற்குப் பூரண சுதந்திரம் உண்டு.
In it is seated the divine realisation.
அதனுள் தெய்வீக சித்தி உறைகிறது.
The natural part goes on with the old action of Nature.
இயற்கைக்குரியது பழைய பழக்கத்தைத் தொடர்கிறது.
It continues the mechanical movements.
பழைய வழக்கமான பழக்கங்களைத் தொடர்கிறது.
It is of the past energies.
அவை பழைய பழக்கம்.
It is her already transmitted impulse.
ஏற்கனவே நாம் ஏற்றுக்கொண்டவை.
All within may be luminous with the Self.
அகம் ஆத்ம ஜோதியால் மிளிரலாம்.
There may be an entire dissolution of the limited person.
சிறிய அகந்தை முழுவதும் கரையலாம்.
The ego-centric order may dissolve.
அகந்தையின் அதிகாரம் அழியலாம்.
The outer may become the field of an apparent incoherence.
புற ஒழுங்கு அழிந்து பொருந்தாத நிலையையடையலாம்.
Thus we may become outwardly inert and inactive.
புறத்தில் செயலற்று ஜடமாகிறோம்.
We are moved by circumstances and forces.
சந்தர்ப்பத்தாலும் சக்திகளாலும் நாம் உந்தப்படுகிறோம்.
Not self-mobile.
நாமே இயங்க முடிவதில்லை.
Though consciousness may be enlightened inside.
அகத்தில் ஜீவியம் ஒளி வீசலாம் (ஜடவாதம்).
Or as a child with plenary self-knowledge.
குழந்தைபோல் அகன்ற ஆத்ம ஞானம் பெறலாம் (பாலவாதம்).
Or as one inconsequent in thought and impulse.
அல்லது முன்னுக்குப் பின் முரணான எண்ணமும் செயலும் உடையனவாயிருக்கலாம்.
There will be utter calm and serenity within.
உள்ளே பெரு அமைதியும் தெளிவுமிருக்கலாம் (உன்மத்த வாதம்).
Or be a wild and disordered soul.
தாறுமாறான தீவிர ஆத்மாவாகலாம் (பிசாசவாதம்).
Though there is purity and poise of the spirit inside.
உள்ளே தூய்மையும் அமைதியும் இருக்கலாம்.
There may be ordered dynamism in the order nature.
வெளி சுபாவம் ஒழுங்கான தீவிரம் உள்ளதாக இருக்கலாம்.
It may be a continuation of the superficial
ego-action.
அது புறத்தில் அகந்தையின் செயலாக மேலெழுந்தவாரியாக அமையலாம்.
But it may not have been accepted inside.
அதை அகம் ஏற்காமலிருக்கலாம்.
Or a mental dynamism that cannot be perfectly expressive of the inner spiritual realisation.
அது அகத்தில் ஆன்மீகச் சித்தியை தெளிவாக வெளிப்படுத்தாத மனத்தின் தீவிரமாக இருக்கலாம்.
There is no equipollence between action of mind and the status of spirit.
ஆத்மா நிலைக்கும் மனதின் செயலுக்குமிடையே சக்தி சமமாக இல்லை.
There may be intuitive guidance of Light from within.
உள்ளிருந்து ஜோதியின் நேரடி ஞானம் வழி நடத்தலாம்.
Its dynamism of action must be imperfect.
அதன் செயலின் தீவிரம் குறையுடையதாக இருக்கும்.
Its nature of its expression will be imperfect.
அதன் இயற்கை வெளிப்பாடு குறையுடையதாக இருக்கும்.
They are the imperfections of mind, life and body.
அவை மனம், வாழ்வு, உடலின் குறையாகும்.
It is like a King with incapable ministers.
திறமையற்ற மந்திரிகளைக் கொண்ட அரசன் போலிருக்கும்.
It is a knowledge expressed in the values of
Ignorance.
அறிவை அறியாமை மூலம் வெளிப்படுத்துவது போலாகும்.
We need harmony of outer and inner Spirit.
அகம், புறம் ஆத்ம சுமுகம் பெற வேண்டும்.
It can be done by the descent of Supermind.
சத்திய ஜீவியம் வருவதால் அது முடியும்.
It has the perfect unity of Truth-Knowledge and Truth-Will.
சத்திய ஞானமும் சத்திய உறுதியும் பூரணமாக இணைந்த நிலை அதனுடையது.
It can establish it.
அதனால் முடியும்.
The values of Ignorance must be changed into the values of knowledge.
அறியாமையின் செயலை அறிவின் செயலாக மாற்ற வேண்டும்.
It alone can do it.
சத்திய ஜீவியம் மட்டும் இதைச் செய்ய முடியும்.
Fulfillment of our psychic being is the aim.   
Page 230
Para 14
சைத்திய புருஷன் பூரணம் பெறுவது குறிக்கோள்.
The same as in the consummation of life and mind.
மனமும் வாழ்வும் பூர்த்தியானது இதே சட்டப்படிதான்.
The rule is to relate it to the divine source.
சட்டம் ஒன்றே. தெய்வீக மூலத்தைத் தொடுவதே சட்டம்.
The rule is to relate to the corresponding truth.
இதற்குரிய சத்தியத்துடன் இணைவது சட்டம்.
That truth is in the Supreme Reality.
அந்தச் சத்தியம் உயர்ந்த சத்தியத்தில் உள்ளது.
That is the indispensable movement.
தவிர்க்க முடியாத கட்டம் அது.
Here too as there.
இங்கும் அங்கும் சட்டம் ஒன்றே.
It is by the power of Supermind.
நடப்பது சத்திய ஜீவிய சக்தியால்.
It can be done.
அதைச் சாதிக்கலாம்.
Done in integral completeness.
இணைந்து நிற்கும் பூரணமாகலாம்.
We reach an intimacy there.
ஒரு நெருக்கம் வரும்.
It becomes an authentic identity.
நெருக்கம் ஐக்கியமாகும் - உள்ளதை உணர்த்தும் ஐக்கியம்.
The One Existence has two hemispheres.
ஏகனுக்கு இரு லோகங்கள் உண்டு.
They are the higher and the lower ones.
அவை உயர்ந்தது, தாழ்ந்தது எனப்படும்.
It is the Supermind that links the two.
இரண்டையும் இணைப்பது சத்திய ஜீவியம்.
In Supermind is the integrating Light.
சத்திய ஜீவியத்தில் இணைக்கும் ஜோதியுள்ளது.
It is the consummating Force.
அதுவே பூரணம் தரும் சக்தி.
It is the wide entry into the supreme Ananda.
வளரும் அனந்தமான உயர்ந்த ஆனந்த லோக வாயில் அது.
The psychic being is uplifted by that Light and Force.
அந்த ஜோதி சக்தி சைத்திய புருஷனை உயர்த்துகிறது.
It can unite itself with the original Delight of
existence.
மூலமான பிரம்மத்திற்குரிய ஆனந்தத்துடன் அது இணையும்.
It came from there.
அங்கிருந்து எழுந்ததுவே அவ்வானந்தம்.
It overcomes the dualistic pain and pleasure.
வலி, சந்தோஷம் இரட்டை மாறுதல்களைக் கடக்கும்.
Mind, life and body are delivered from all fear and shrinking.
பயம், சுருக்கத்தினின்று மனம், உயிர், உடலை விடுவிக்கும்.
It can recast the contacts.
தொடர்புகளைப் புதிய அச்சில் வார்க்கும்.
They are the contacts of existence in the world.
அவை உலகில் ஆன்மீக வாழ்வின் தொடர்புகள்.
They are cast into terms of Divine Ananda.
அவை தெய்வீக ஆனந்த ரூபங்களாக வார்த்தெடுக்கப்படும்.
IDEAS IN EACH PARA:
ஒவ்வொரு பாராவிலும் உள்ள கருத்துகள்:
1) Life rises from dumb material to original delight through desire and Love.
1) இருண்ட ஜடத்திலிருந்து வாழ்வு ஆசை, அன்பு மூலம் ஆனந்தத்தை அடைகிறது.
2) Delight is the secret, it is its motive and object.
2) ஆனந்தம் இரகஸ்யம், ஆனந்தம் நோக்கம், ஆனந்தம் இலட்சியம்.
3) Delight must be achieved in the action of the universal.
3) பிரபஞ்ச வாழ்வில் ஆனந்தம் பெற வேண்டும்.
4) The larger truer psychic soul should come to the surface.
4) பரந்த உண்மையான சைத்திய புருஷன் மேலே வர வேண்டும்.
5) The larger individuality is in the subliminal. It must emerge.
5) பரந்த அடிமன தனித்தன்மை வெளிவர வேண்டும்.
6) The cosmic delight is dwarfed and distorted by the ego that shuts it out from being fully enjoyed.
6) பிரபஞ்ச ஆனந்தம் சுருங்கிச் சிதறி அகந்தையால் தடை செய்யப்படுகிறது.
7) The desire soul distorts the pure Delight into pleasure, pain and indifferences.
7) ஆசை ஆனந்தத்தை வலி, பாராமுகமாக மாற்றுகிறது.
8) The desire soul left to itself will be moving in the same grooves.
8) ஆசை செய்ததையே செய்யும்.
9) Impersonality overcomes the difficulty of ego.
9) அகந்தையின் சிரமத்தைப் பொதுத்தன்மை கடக்கும்.
10) The secret psychic Person, the true soul, the real conscience, coming out to the surface.
10) இரகஸ்ய சைத்திய புருஷன், உண்மை ஆத்மா, உண்மையான மனசாட்சி, மேலே வருவது வெற்றி. இது ஆன்மீக வாழ்வுக்கு உயர்வது.
11) The Psychic, behind the heart, of the size of the thumb is of the Self. Still more is possible.
11) கட்டை விரல் பரிமாணமான சைத்திய புருஷன் பிரம்மம்.
12) The psychic is lifted into the supermind where division of Mind disappears.
12) மனத்தின் பிரிவினை சத்திய ஜீவியத்தில் கரைகிறது.
13) The disharmony created by Mind can only be removed by the descent of supermind.
13) மனம் ஏற்படுத்திய பிணக்கு சத்திய ஜீவியம் வருவதால் அழியும்.
14) Values of Mind are cast into terms of the Divine Ananda.
14) மனத்தின் பண்பு, தெய்வீக ஆனந்தப் பண்பாகிறது.
 
 
Contd....
 
 
தொடரும்......
 

 

*****

 

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அன்னையை நினைப்பவன் பக்தன்.
அன்னையை மட்டும் நினைப்பவன் சாதகன்.
அன்னையைத் தவிர வேறெதையும் நினைக்க முடியாதவன்
சத்திய ஜீவியத்தை நோக்கிப் போகின்றவன்.
 
 
******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
க்ஷணம் தவறாத சமர்ப்பணம் அன்னை தரிசனம்.
 
 
 
******
 
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
ஆபத்தில் அன்னை நினைவு வருவது அருள்.
 

 

******



book | by Dr. Radut