Skip to Content

2. ஸாப்ட்வேர் (Software)

ஸாப்ட்வேர் (Software)

மதம் மாறும் மனிதன் மனம் மாறுவதில்லை. உலகம் மாறினால் அவனும் மாறுவான். கம்ப்யூட்டர் வந்தபின் ஸாப்ட்வேர் வேண்டும். இதைப் பணம் போட்டு வாங்க வேண்டும். கம்ப்யூட்டரே வாங்க முடியாதவருக்கு ஸாப்ட்வேர் வாங்கப் பணமிருந்தாலும், பணம் போட்டு வாங்க மனம் வாராது. ஊரெல்லாம் திருட்டு ஸாப்ட்வேர் பரவலாக இனாமாகக் கிடைக்கும் பொழுது, பணம் போட்டு வாங்க மனம் வாராது.

அந்தக் கட்டுப்பாடில்லாதவர் அன்னை அன்பராக முடியாது.

அன்பர் சிரமப்பட்டு கம்ப்யூட்டர் வாங்கினார். திருட்டு ஸாப்ட்வேரைப் பயன்படுத்தினார். ஒரு நேரம் மனம் உறுத்தியது. கொஞ்ச நாள் அப்படியே ஓடிற்று. மனம் மாறி திருட்டு ஸாப்ட்வேர்களை கொடுத்துவிட்டு, வேறு வாங்க முடிவு செய்தபொழுது,

  • மைக்ரோஸாப்ட் கம்பனி ஒரு திட்டத்தில் அவருக்குத் தேவைப்பட்ட ஸாப்ட்வேர்களை எல்லாம் தந்தது.
  • மைக்ரோஸாப்ட் எக்ஸிபிஷனுக்குப் போனார் அன்பர்.
  • அங்கு லாட்டரியில் அவருக்குப் பரிசு வந்தது.
  • அந்தப் பரிசு அவருக்குத் தேவையான இசையாக அமைந்தது.
  • தவறு ஆதாயமெனச் செய்யும் மனப்பான்மை விரும்பத்தக்கதல்ல.
  • தவறு செய்தால் வாழ்வில் தண்டனை கிடைக்கும்.
  • தவறு செய்தால் அன்னையிடம் நெருங்கி வர முடியாது.
    செய்யும் தவறு வரும் பரிசைத் தடுக்கும்.
    பரிசைப் பெற தவற்றைத் தவிர்க்கலாம்.
    தவறு செய்யக்கூடாதென தவற்றைத் தவிர்ப்பது நல்லது.

தவறு செய்யும் மனப்பான்மைக்கு வாழ்வின் பரிசுகள் தென்படா. எதிரிலிருந்தாலும் விலகும்படி அமையும். மனம் உயர்வாக இல்லாமல் அன்னையை அறிய முடியாது. அறிந்தபின் தொடர்ந்து உயர, மனம் உயர்ந்தபடி இருக்க வேண்டும்.

அன்பர் மனம் உயர்வது, அகிலம் அன்னையில் உயர்வதாகும்.

பெருவாழ்வு பிறர்க்குரியது. அதை நாடுவதே என் வாழ்வு.



book | by Dr. Radut