Skip to Content

12. லைப் டிவைன் - கருத்து

லைப் டிவைன் - கருத்து

Page 41 சிருஷ்டிக்கு அப்பால் ஜனிக்காததை எட்டினால்
              நமக்குப் பிறப்பு இறப்பிலிருந்து விடுதலையுண்டு.

  • பிறப்பும் இறப்பும் வாழ்வுக்குரியன, ஆத்மாவிற்கல்ல.
  • பிறப்பு, இறப்பு உடல் வாழ்விற்கு, புற வாழ்விற்குரியன.
  • ஆத்மாவிற்குரியது அக வாழ்வு.
  • அகவாழ்வில் ஆத்மாவை மனமும், உணர்வும் சூழ்ந்துள்ளன.
  • மனம் காலத்திற்குரியது.
  • புறம் இடத்திற்குரியது.
  • புறத்திலிருந்து அகத்திற்குச் செல்வது புலனிலிருந்து மனத்தையடைவது.
  • புலனைக் கடந்து மனத்தை அடைவதைப் புறம் அகமாவது என்று கூறலாம்.
  • அகத்தில் மனத்தைக் கடந்தால், ஆத்மாவையடையலாம்.
  • மனம் என்பது நமக்கு நினைவு, சிந்தனை, கற்பனை.
  • நினைவிழந்து, சிந்தனை அற்று, கற்பனை அடங்கினால் மனம் அடங்கும்.
  • மனம் அடங்கினால், மனம் அழிவதாகாது.
  • மனத்தைக் கடக்க மௌனம் தேவை.
  • நினைவழிந்த மௌனம் வேறு, சிந்தனையற்ற மௌனம் வேறு.
  • நினைவு, சிந்தனை, கற்பனை மனத்தின் பகுதிகள்.
  • மௌனம் மனத்தின் பகுதிகளைக் கடக்க உதவும்.
  • மனம் அழியாது, நாம் கடக்கலாம்.
  • மனத்தில் செயல்கள் அடங்கியபின், மனமே அடங்கும்.
  • மனம் அடங்கினால் நாம் மேல் மனத்தைக் கடக்கலாம்.
  • அதனால் அடிமனம் போய்ச் சேரலாம்.
  • ஜனிக்காததை எட்ட, சிருஷ்டியைக் கடக்க வேண்டும்.
  • சிருஷ்டியைக் கடக்க, பிரம்மத்தை எட்ட வேண்டும்.
  • பிரபஞ்ச மூலமோ, பிரபஞ்சத்தைத் தவிர்த்தோ பிரம்மத்தை அடையலாம்.
  • பிரம்மத்தை அடைவது ஜனிக்காதவனை அடைவது.
  • அதனால் பிறவிச்சூழலிலிருந்து விடுதலையுண்டு.
  • நாம் இதை மோட்சம் என்று கூறுகிறோம்.
  • மோட்சம் ஐந்து நிலைகளில் உண்டு.
  • ஜீவன் முக்தன், பரமாத்ம மோட்சம், பிரம்மத்தின் மூன்று நிலைகள்.
  • பிரம்மத்தின் முதல் நிலையை அடைந்தாலும் பிறவிச் சூழலிலிருந்து விடுதலையுண்டு.

*******

ஜீவிய மணி
 
சிறியது கீழே வந்தால் பெரியதாகும்.

******



book | by Dr. Radut