Skip to Content

08. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

 

 • அகப்பை செய்தவன் முழு தச்சன்

  அகப்பை தேங்காய் ஓட்டில் 3 கண்கள் உள்ள பகுதியில் செய்யப்படுவது. கண்கள் மென்மையாக இருக்கும். பிடியை 2 கண்கள் வழியாகப் பொருந்தும்படி பொருத்த வேண்டும். கற்பதன் முன் 10 அல்லது 20 பிடிகளும் பொருந்தா. அகப்பையில் தண்ணீரை ஊற்றினால் ஒழுகும். தச்சனிடம் பயிற்சி பெறுபவர் அகப்பையைச் சரியாக செய்தால், பயிற்சி முடிந்துவிட்டது எனப் பொருள்.

  • வீட்டை அதிகபட்சம் வளரும் வகையில் நிர்வாகம் செய்பவன் ஊரை ஆள்வான், உலகையும் ஆள்வான்.
  • அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, நண்பர்கள், உறவினருடன் ஒத்துழைப்பவர் - வீட்டு மனிதர்களை நிர்வாகம் செய்ய நீ உனக்கு அடங்க வேண்டும். வீட்டில் உன் அதிகாரம் சென்றால், உலகில் உன் அதிகாரம் செல்லும்.
  • தோல்வியை நினைத்துப் பார். தோல்வியுற்ற இளைஞனை உன்னால் தோல்வியிலிருந்து விடுவிக்க முடியுமானால், இனி உனக்குத் தோல்வியில்லை. இன்று உலகில் முதன்மையான கம்பனி ஜெனரல் (GM)மோட்டார்ஸ். Ford முதலாவதாகவும் GM தூரத்து இரண்டாம் கம்பனியாகவுமிருந்த பொழுது சுலோவன் என்பவர் தலைவரானார். இவர் இன்ஜீனியரிங் முடித்து வேலைக்குப் போகாமல் 1920இல் தகப்பனாரிடமிருந்து $ 5000 கடன் பெற்று திவாலான கம்பனியை வாங்கி இலாபகரமாக்கினார். பிறகு GMஇல் சேர்ந்து தலைவரானார். Ford காரைக் கண்டுபிடித்தவர். அவர்கள் டெக்னாலஜிக்குப் பேர் போனவர். சுலோவன் டெக்னாலஜியைவிட organisation நிர்வாகம் முக்கியம், மார்க்கட் முக்கியம் என்று அறிந்தவர். 10 அல்லது 20 ஆண்டுகட்குள் GM முதலிடம் வந்துவிட்டது. சுமார் 10ஆண்டுகளாக முதலிடத்திலேயே இருக்கிறது. சட்டம் என்ன?

   முடிந்தால் செய், பிறர் மீது குறை கூறாதே.

  • அகப்பையில் திறமை உண்டு. உலகுக்குத் தேவைப்பட்ட எல்லா திறமைகளும் வீட்டில் உண்டு.
   தொலைந்த பொருளைக் கண்டுபிடிப்பதிலும், விருந்தாளியை வரவேற்பதிலும், பாத்ரூமை சுத்தம் செய்வதிலும் அது தெரியும்.
  • அகப்பை செய்வது சிறிய வேலை. அதில் சூட்சுமமில்லை. ஆனால் தச்சனுக்கு அது முக்கியம்.
 • மனம் என்று இருக்கும்வரை "பொறுக்க முடியாது" என்ற நிலை எழும்
  • எனக்குப் பொறுக்காது, தாங்காது எனக் கூறும்வரை வாழ்வில் எதைப் பெறுகிறார்களோ, அன்னையிடம் எந்த prosperity பலிக்கிறதோ அது விஷயமில்லை.
   • அவர்கட்கு அன்னையின் பெரிய (infinite out of finite) பரிசு - "100 ரூபாயை''க் கடுகாக்கும் பரிசு - இல்லை.
   • மனம் இருந்தால் "நான்” இருக்கும்.
   • அதுவரை - மனமும், நானும் - வாழ்வு, அன்னையில்லை.

    அதுவே கோடு, எல்லை, Line என்பது.

   • எல்லையைத் தாண்டினால், எல்லைகாளியாவோம்.
   • எல்லையைத் தாண்டாதவரை வாக்காளர் (voter), எல்லையைத் தாண்டினால் வேட்பாளர் candidate. எந்த வேட்பாளர் (MLA or MP) candidate என்பதைப் பர்சனாலிட்டி நிர்ணயிக்கும்.
   • எதையும் நிர்ணயிப்பது பர்சனாலிட்டி - நாழியின் அளவு, நானாழி முகக்கும் நாழி தேவை.
 • நமக்கு யாரைப் பிடிக்கும் என்பது நாம் யார் என அறிவிக்கும்
  (We are what we are towards friends and enemies)

  விவரம் தெரிந்தவர்கள் தமக்குப் பிறரைப் பிடிக்கும், பிடிக்காது என எளிதில் சொல்லமாட்டார்கள்.

  • அப்படிச் சொல்வதால், நமது படிப்பு, அறிவு, செல்வம், பதவி, பண்பு, நாகரிகம், இராசி, பதம், பக்குவம் முழுவதும் வெளிப்படையாகத் தெரியும்.

   ஒருவர் தமக்கு நல்ல பழக்கமான பெரிய மனிதர்கள் பெயரையும், இடங்களையும் கூறினால், அவர் அந்தஸ்தில்லாதவர் என அறிவிப்பதாகும்.

   நாகரிகமான ஊர்களிலிருந்து நாகரிகமற்ற ஊர் மனிதர்களைச் சந்தித்தால் இந்த வேறுபாடு உடனே தெரியும்.

   ஆங்கிலேயர் நாட்டை ஆண்ட நாளில் அவர்களை நடமாடும் தெய்வமாக நினைத்தனர். "துரை' என அழைத்தனர். தஞ்சாவூர் என அவருக்கு வாயில் வரவில்லையெனில் Tanjore என்றார். அதைப் பார்த்துத் தமிழ்நாடு 200 ஆண்டுகளாக Tanjore எனப் பெருமையாகக் கூறியது. வெள்ளைக்கார மோகம் உச்சகட்டமாக இருந்த காலத்தில் நடந்த செய்திகள் பல. வெள்ளைக்காரர் குளிக்காததால் நம்மவரில் சிலர் அவர்களைப் போல் குளிக்கமாட்டார்கள். குளிக்கவில்லை எனப் பெருமையாகவும் கூறுவார்கள். நம்மவரில் பெரும்பான்மையோரால் குளிக்காமலிருக்க முடியாது. அது வீட்டுப் பழக்கம். பிறந்த ஊர், வறண்ட பிரதேசம், அநாகரிகமான பெற்றோர் பெற்றவர் குளிக்காமலிருப்பதுண்டு. அவர்கள் ஆங்கிலேயர் போல் தாமும் குளிக்கவில்லையென நினைத்தால் மற்றவர் அவருடைய வீட்டுப் பண்பைப் புரிந்து கொள்வார் என அவர்கள் அறியார். அது தெரிந்தால் இப்படிப் பெருமைப்படமாட்டார்கள்.

   எதற்குப் பெருமைப்படுவது என்ற பாகுபாடில்லையா?

  • தான் படித்த பெரிய புத்தகங்களைப் பற்றிப் பேசுபவர் மொத்தமாக அவர் படித்தது 4, 5 புத்தகம் என்று அறிவிக்கிறார் என அறியமாட்டார்.
  • "நான் உதவி பெறமாட்டேன்' என்பவர் "நான் சுயநலம்”, "எவருக்கும் உதவமாட்டேன்” எனக் கூறுகிறார். நாம் எப்படிப் பழகினாலும் உள்ளது வெளி வந்துவிடும்.
 • தலைகீழ் மாற்றம்
  • நடந்ததை மறந்து ஏற்பதைவிட நடந்தது நல்லது என அறிந்து ஏற்பது பூரணயோகம்.

   இதன் நிலைகள் எட்டு.

   முரண்பாடு உடன்பாடு என்பது முதல்.

   இறைவனை எதிர்த்துப் போரிட்டு சீக்கிரம் அடையலாம் என்பது எட்டாம் நிலை.

   நம் வாழ்வில் இவ்வெட்டு நிலைகளையும் அறிவது ஆத்ம ஞானம், ஏற்பது யோகம்.

   சூன்யம் வைத்ததால் ஆழ்ந்த நம்பிக்கை ஏற்பட்டது.

   நண்பர் செய்த துரோகம், தியாகி நம்பிக்கை துரோகம் செய்தது, முழு நம்பிக்கை முழுத் துரோகமானது, பொறுப்பை ஏற்று அது தன்னிடமிருப்பதால் சொத்தை அழித்து ஆர்ப்பாட்டம் செய்தது, கொடுத்ததை வாங்கிவிட முடியுமா எனக் கொக்கரித்தது, தானே வந்து சேர்ந்து உரிமை கொண்டாடுவது, கேட்கமாட்டார் என்பதால் கேவலமாக நடப்பது, நடந்தபின் அது ஒரு பெரிய விஷயமா எனக் கேட்பது, உரிமையுள்ளவர் உதவ மறுத்து பிறகு உதவி கேட்பது, காலணா தனக்கு ஆதாயத்திற்குப் பிறருக்கு நாலணா நஷ்டம் வைக்கக் கூச்சப்படாதது, கோள் சொல்வதற்குப் பெருமைப்படுவது, ஜாக்கிரதை, ஒட்டுக் கேட்டு உயிரை எடுப்பேன் என வெட்கமின்றிப் பேசுவது, தான் பெருநஷ்டமடைந்தாலும் பிறருக்கு உள்ள உரிமையை மறுக்கும் ஆர்வமாகச் செயல்படுவது போன்ற பழக்கங்கள் மனித சுபாவத்தை மனத்திற்கு விளக்கும்.

தொடரும்....

********

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அன்னை The Life Divine படிக்க உதவும் மூக்குக் கண்ணாடி.
 

 
*****
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அன்னையை அழைக்கும் பொழுது அழைப்பு சந்தோஷம் கொடுத்தால் அந்த நேரம், ஞானம், அன்பாக மாறும் நேரம்.
 
 
 
******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
கடந்ததை அன்னையிடம் கூறினால் கர்மம் கரையும்.
பட்டவனிடம் செய்த பாவத்தைக் கூறினால் கர்மம்
கரைந்து அதிர்ஷ்டம் உற்பத்தியாகும்.
 
 
 
******

 

 book | by Dr. Radut