Skip to Content

07. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  1. மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியது போல.

    அன்னையை நம்பி ஆற்றில் இறங்கினால் மண்குதிரையும் கரையாது.

  2. கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை.

    மனிதனுக்குத் தெரியுமா, மதருடைய மகிமை.

  3. தாயைப் போல் பிள்ளை, நூலைப் போல சீலை.

    நினைவைப் போல் நிலை.

  4. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

    பெரிய திட்டத்திற்கு ஒரு சொல் பதம்.

  5. உப்பிட்டவரை உள்ளளவும் நினை.

    ஒரு முறை தரிசித்தவரை உயிருள்ளவரைக் காப்பாற்றும் அன்னை.

தொடரும்....

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
  • மலருக்கு மணம் உண்டு.
  • மலர் மற்றவற்றிற்கு மணம் தரும்.
  • மலரிடம் மண்ணும் மனம் பெறும்.

******



book | by Dr. Radut