Skip to Content

06. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

கர்மயோகி

51. தீமையை முழுமையாகக் காணும் திறன் - சிருஷ்டியின் ஒருமை.

  • இது தெய்வங்கட்குரிய திறன். அவர்களையும் சில சமயம் கடந்தது என்று கூறலாம்.
  • தெய்வங்கள் தீமையை அழித்துள்ளதால், அவர்கள் அதை நன்மையாகக் காணவில்லை என்று அறிகிறோம்.
  • அன்னை கடலோரம் உள்ள ஆசிரம தென்னந்தோப்புக்குப் போனார்கள்.
  • ஒரு கருநாகம் அவரை நோக்கி விரைந்து வந்தது.
  • உடனிருந்த சாதகர்கள் ஓடிவிட்டனர்.
  • அன்னை நகரவில்லை.
  • நாகம் அருகில் வந்தது.
  • அன்னை சிரித்து, "என்ன வேண்டும்?'' என்று கேட்டார்.
  • நாகம் படமெடுத்துத் தரையில் படத்தால் அடித்துவிட்டு, வேகமாகத் திரும்பியது.
  • "எனக்கு வணக்கம் சொல்ல வந்தது'' என்றார் அன்னை.
  • அன்னைக்கு நாகம் விஷமல்ல, தீமையல்ல, பயப்படுவதில்லை.
    அன்னையை நாகம் அறிந்தது. நாகத்தை அன்னை அறிவார்.
  • தீமை நன்மையின் பழுத்த ரூபம் நன்மையைக் காவலாகச் சூழ்வது என்று The Life Divine கூறுகிறது.
  • பகவான் கூறுவதால் ஏற்றுக் கொள்ளலாம், நம் அறிவுக்கு எட்டாது.
  • சண்டி செய்யும் குழந்தையின் மீது தாய்க்குள்ளது அன்பு.
  • குழந்தை பள்ளிக்கூடம் போக, மருந்து சாப்பிட, சாப்பாடு சாப்பிட மறுக்கிறது.
  • தாயின் சாதுர்யம் குழந்தையிடம் பலிக்கவில்லை.
  • தனக்குக் குழந்தை மேலுள்ள அன்பை, குழந்தை நலனைத் தாய் காப்பாற்ற வேண்டும்.
  • குழந்தையைக் கண்டிக்கிறாள், பலனில்லை.
  • குழந்தையைக் கடுமையாக அடிக்கிறாள்.
  • தாயின் அன்பு நன்மை.
  • அடிப்பது தீமை.
  • அன்பு கனிந்து, அன்பின் பலனாக உயர்ந்த கல்வியை பாதுகாக்க அரணாக அமைவது தாயின் கொடுமை.
  • நன்மையின் சிறப்பு அரணாக நன்மையைக் காக்கும் திறன், தீமை.
  • ஒரு சிறிய அளவில் டார்சி "பரவாயில்லை'' எனக் கூறியதை எலிசபெத் விளையாட்டாக எடுத்துக் கொண்டதில் காணலாம்.
  • அதே சந்தர்ப்பத்தில் வேறொரு பெண்ணிற்கு எரிச்சல் பொங்கி வரும்.
  • ஆண் பெண் முன் மண்டியிட்டுப் பேசும் நாடு அது.
  • பெண்கள் உள்ளே வந்தால் அனைத்து ஆண்களும் எழுந்து மரியாதை செய்வார்கள்.
  • மனைவி பெண் என்பதால் அவள் செய்வது தவறு எனக் கூறுவது அநாகரிகம் என்பது அந்த நாட்டு நாகரிகம்.
  • ஒரு பெண்ணை உயர்வாக அவளிடம் பேசுவது மரியாதை. உயர்வாகப் பேச மறுப்பது அநாகரிகம்.
  • பரவாயில்லை என்பது, அவள் காதுபடப் பேசுவது மன்னிக்க முடியாத கொடுமை.
  • எலிசபெத் அதைப் பொருட்படுத்தவில்லை. கேலியாக எடுத்துக் கொண்டாள்.
  • அதன் பலனிரண்டு. (1) அவனை வாயாரத் திட்டினாள், (2)பெம்பர்லிக்குத் தலைவியானாள்.

தொடரும்.....

********

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
சொல்லி நடக்காதது மௌனத்தால் நடக்கும்.
மௌனத்தாலும் நடக்காதது மௌனமான செயலால்
நடக்கும்.
சமர்ப்பணமும் சரணாகதியும் அவற்றைக் கடந்தவை.
முடிவில்லாத பொறுமையின் முடிவு யோகம்.
 

 
 
******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
மூலத்தை அறியாமல், எல்லாப் பகுதிகளையும் அறிவதால் ஞானம் பெற முடியாது. மூலம் தெரிந்தவுடன் பகுதிகள் தெளிவு பெறும்.
மூலம் ஞானம் தரும்.
மூலமின்றி முழுமையில்லை.
விபரம் தெரிவதால் மட்டும் விஷயம் தெரியாது.
 
 

********

 



book | by Dr. Radut