Skip to Content

03. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

கர்மயோகி

XXII. The Problem of Life
22. வாழ்வின் பிரச்சனை
Life is infinite.
Page No.207
வாழ்வு அனந்தமானது.
It is absolute.
Para No.1
வாழ்வு பிரம்மமானது.
It is untrammelled.
வாழ்வு தடைகளால் பாதிக்கப்படாதது.
It is inalienably possessed of its own unity.
விலக்க முடியாத ஐக்கியத்தால் ஆளப்பட்டது.
It is bliss.
அது ஆனந்தமயமானது.
It is the Conscious-Force of Sachchidananda.
வாழ்வு சச்சிதானந்தத்தின் சித்-சக்தி.
A Conscious-Force puts forth life.
சித்-சக்தி வாழ்வை வெளிப்படுத்துகிறது.
It is done under certain cosmic circumstances.
குறிப்பிட்ட பிரபஞ்ச சந்தர்ப்பத்தில் இது நடக்கிறது.
The nature of life is infinite, absolute, untrammelled, possessed of unity and bliss.
வாழ்வின் சுபாவம் அனந்தம், பிரம்மம், தடையற்ற நிலையில் தன்னை ஆட்கொண்ட ஆனந்தம்.
Mind is its central circumstance.
மனம் வாழ்வின் மையமான சந்தர்ப்பம்.
This Mind is obscured by ignorance.
இந்த மனம் அஞ்ஞானத்தால் சூழப்பட்டுள்ளது.
Life differs in its appearance from purity.
அதன் தூய்மையிலிருந்து வாழ்வு மாறுபட்டுத் தோன்றுகிறது.
It is the purity of infinite Existence.
அனந்தமான வாழ்வின் தூய்மை அது.
The dividing faculty of the Mind is that
circumstance.
மனம் பிரிக்கும் கருவியாக இருப்பது அந்தச் சந்தர்ப்பம்.
It is a divided action of an undivided Force.
முழுமையான சக்தியின் பிரிக்கும் செயலிது.
The result is dualities.
இதன் விளைவாக இரட்டைகள் உற்பத்தியாகின்றன.
Oppositions and denials too arise.
எதிர்ப்பும், மறுப்பும்கூட எழுகின்றது.
The opposition is apparent.
எதிர்ப்பும் தோற்றம்.
The denials too are not real.
மறுப்பும் உண்மையில்லை.
It is a denial of the nature of Sachchidananda.
சச்சிதானந்த இயற்கையை அது மறுக்கிறது.
They are an abiding reality for the mind.
மறுப்பும் எதிர்ப்பும் மனத்தைப் பொருத்தவரை உண்மை.
It is only a phenomenon.
அவை தோற்றம்.
It misrepresents a manifold Reality.
பல அம்ச சத்தியத்தைத் தோற்றம் தவறாகக் காட்டுகிறது.
There is a veil behind mind.
மனத்தின் பின் ஒரு திரையுள்ளது.
There is the divine cosmic consciousness behind mind.
திரைக்குப் பின்னால் தெய்வீக ஜீவியம் மறைந்துள்ளது.
The world takes on an appearance.
எனவே உலகம் ஒரு தோற்றம் பெறுகிறது.
It is a clash of opposing truths.
எதிரான சத்தியம் முரண்படுகின்றது.
They seek to fulfil themselves.
தங்களைப் பூர்த்தி செய்து கொள்ள அவை முயல்கின்றன.
Each has a right to filfilment.
அவற்றிற்கு அவ்வுரிமையுண்டு.
There is a mass of problems.
ஏராளமான பிரச்சனைகள் எழுகின்றன.
Equal amount of mysteries arises.
அதே அளவு புதிர் பிறக்கிறது.
Behind them is the hidden Truth and Unity.
இவற்றிற்குப் பின்னால் மறைந்துள்ள சத்தியமும் ஐக்கியமும் உண்டு.
They press for solution.
அவை தீர்வு நாடி எழுகின்றன.
They seek a solution for its unveiled manifestation in the world.
இதன் மூலம் திரை விலகிய சிருஷ்டிக்கு அவை தீர்வை நாடுகின்றன.
This solution has to be sought by the Mind.
Page No.207
தீர்வை மனம் காண வேண்டும்.
But not by the mind alone.
Para No.2
ஆனால் இதை மனம் தனியாகக் காண முடியாது.
It has to be a solution in Life.
இது வாழ்வுக்குரிய தீர்வாக இருக்க வேண்டும்.
It must be a solution in the act of being.
இது ஜீவனின் செயலுக்குரிய தீர்வாக இருக்க வேண்டும்.
It must also be a solution in the consciousness of being.
அது ஜீவனின் ஜீவியத்துக்கும் உரிய தீர்வாக இருக்க வேண்டும்.
The world has movements.
உலகம் இயங்குகிறது.
The movements have their problems.
இயக்கத்திற்குரிய பிரச்சனைகளுண்டு.
Consciousness as Force has created them.
ஜீவியம் சக்தியாக பிரச்சனைகளையும், இயக்கங்களையும் உற்பத்தி செய்தது.
Consciousness as Force has to solve the problems.
ஜீவியம் சக்தியாக, அப்பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும்.
The world-movement has an inevitable fulfilment.
உலக இயக்கம் தவிர்க்க முடியாதபடித் தன்னைப் பூர்த்தி செய்து கொள்ளும்.
It has a secret sense.
அதற்குரிய ரகஸ்ய உணர்வுண்டு.
It has an evolving Truth.
பரிணாம வளர்ச்சி பெறும் சத்தியம் அதற்குண்டு.
Consciousness as Force has created the worldmovement.
ஜீவியம் சக்தியாக உலகத்தை இயக்குகிறது.
It carries it.
உற்பத்தி செய்ததைத் தாங்குகிறது.
But this Life has taken on appearances.
இந்த வாழ்வு தோற்றங்களை ஏற்கிறது.
They are three in succession.
தொடர்ந்த மூன்று தோற்றங்களவை.
The first is material.
முதல் நிலை ஜடம்.
A consciousness is submerged.
ஜீவியம் ஆழ்ந்து மறைந்துள்ளது.
It is concealed in action.
அது செயலால் மறைக்கப்பட்டுள்ளது.
It is superficial as well as expressive.
அச்செயல் மேலெழுந்தவாரியாக வெளிப்படும் தன்மையுடையது.
It is concealed in force.
அது சக்தியுள் மறைந்துள்ளது.
It is a representative form of force.
அது பிரதிநிதித்துவம் வாய்ந்த ரூப சக்தி.
The action has these characteristics.
செயலுக்கு இந்த அம்சங்களுண்டு.
The second is vital.
இரண்டாவது உயிரினுடையது.
There is an emerging consciousness.
ஜீவியம் மறைவிலிருந்து வெளிப்படுகிறது.
It is half-apparent as power.
அது பவராகப் பாதி தெரிகிறது.
It is a power of life.
அது வாழ்வின் பவர்.
It is a process of growth.
அது வளரும் வகை.
It is an activity.
அது செயல்.
It is a decay of form.
அது ரூபம் அழிவது.
It is half delivered out of its original imprisonment.
தான் சிறைப்பட்ட நிலையிலிருந்து பாதி விடுதலை பெறுகிறது.
It has become vibrant in power.
அது பவருடைய துடிப்புள்ளது.
It is seen as vital craving.
அது உயிரின் வேகமானது.
It is vital satisfaction or repulsion.
அது உயிருக்குத் திருப்தி அல்லது வெறுப்பு தரும்.
At first it is not at all so.
ஆரம்பத்தில் அது அது போலில்லை.
Then only it is imperatively vibrant in life.
பிறகு அது தவிர்க்க முடியாத உயிர் துடிப்பைப் பெறுகிறது.
It comes out as knowledge of its own self-existence and environment.
தன் வாழ்வின் ஞானமாக, சூழலின் ஞானமாக அது வெளி வருகிறது.
The third is mental.
மூன்றாம் நிலை மனம்.
An emerged consciousness reflects fact of life.
வெளிப்படும் ஜீவியம் வாழ்வின் உண்மையைப் பிரதிபலிக்கிறது.
It is as mental sense, responsive perception and idea.
மனத்தின் உணர்வாகவும், கண்ட உணர்வாகவும், எண்ணமாகவும் அதுள்ளது.
As a new idea, it tries to become fact of life.
புது எண்ணமாக அது வாழ்வின் உண்மையாக முயல்கிறது.
It attempts to modify the being.
அது ஜீவனை மாற்றியமைக்க முயல்கிறது.
It tries to modify the internal existence of being.
அகத்தின் ஜீவனுடைய வாழ்வை அது மாற்ற முயல்கிறது.
It also tries to modify conformably the external existence of being.
அதே மாற்றத்தைப் புறத்தோற்றத்தில் நடைமுறையையொட்டி மாற்ற முயல்கிறது.
Consciousness is imprisoned in the act.
ஜீவியம் செயலுள் சிறைப்பட்டுள்ளது.
It is in mind.
இது மனம்.
It is also imprisoned in the form of its own force.
அது சக்தியின் ரூபத்திலும் சிறைப்பட்டுள்ளது.
But it is not yet the master of the act and form.
இன்னும் ஜீவியம் செயலுக்கும் ரூபத்திற்கும் அதிகாரம் செலுத்தும் நிலையில்லை.
It emerged as individual consciousness.
இது தனி மனித ஜீவியமாக வெளி வந்துள்ளது.
It is aware of only fragmentary movements.
அதனால் அதற்குச் சிறு பகுதியே தெரியும்.
It is a fragment of its own total activities.
அதன் மொத்த செயலின் சிறு பகுதியையே அது அறியும்.
Contd....
தொடரும்......
ஸ்ரீ அரவிந்த சுடர்
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
பாடம்:
  • அழைப்பை மறுக்காதே.
  • ஆதரவு தராதே.
  • அன்பும் சுயநலமே.
  • எவரையும் நம்பாதே.
  • நீ யாருக்கும் தேவையில்லை; உன் உடைமை தேவை.
  • இல்லாததைக் கொடுக்க முடியாது.
  •  பிறர் சுயநலம் பேணுவது மடையனின் பாவம்.
  • சேவை மனிதனுக்கில்லை.
  • அன்பிருந்தால், அது அவளுக்கில்லை. அவனுக்கு.
  • சிறிய மனிதனில் சிறப்பில்லை.
சமர்ப்பணம் பலிப்பது என்றால் மையம் மனத்திலிருந்து நெஞ்சுக்குப் பின்னால் போகிறது என்று அர்த்தம்.
மனம் வாழ்வுக்குரியது. நெஞ்சம் அன்னைக்குரியது.
மனம் நெஞ்சமாவது வாழ்வு திருவுருமாறுவது.
சமர்ப்பணம் பலிக்க மையம் மாற வேண்டும்.
 
*******
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
 
 
 
 
 
 
 
 
*******
உலகத்திற்குத் தவறானது வாழ்வுக்குச் சரியாகும். வாழ்வுக்குச் சரியானது கடவுளுக்குச் சரியில்லாமலிருக்கும். வாழ்வுக்குத் தவறானது தெய்வத்திற்குச் சரியாகும்.
தெய்வமோ வாழ்வோ இடும் உத்தரவை
ஏற்காவிட்டால், அதற்குரிய தண்டனை கிடைக்கும்.
வாழ்வு வலியுறுத்துவதைச் செய்ய வேண்டும்.
 
******book | by Dr. Radut