Skip to Content

12. அஜெண்டா

அஜெண்டா

Volume 4, Page 367

அஜெண்டாவை எழுத அன்னை ஒரு பிரெஞ்சுக்காரரைத் தேர்ந்தெடுத்துள்ளார். அவருக்குச் சத் பிரேம் எனப் பெயரிட்டார். அவருக்கு ராமேஸ்வரத்தில் நீலகண்ட ஜோஷி என ஒரு குரு உண்டு. அவரிடம் கொஞ்ச நாள் போயிருப்பார். பொதுவாக சிஷ்யர் மாதிரி நடக்க மாட்டார். சுதந்திரமாக இருப்பார். சுதந்திரமாகப் பேசுவார். இந்தியர் போல் பஞ்சகச்சமும் அங்கவஸ்த்திரமும் உடுத்தியிருப்பார்.

20 ஆண்டுகளாக அன்னை வாரத்தில் 2 நாள் அவரை 2 அல்லது 3 மணி சந்தித்துப் பேசுவார். அவர் பேசியவற்றை டேப் ரிகார்டில் எடுத்து வெளியிட்டது சத் பிரேம். முதலில் பிரெஞ்சிலும், மீண்டும் ஆங்கிலத்திலும் வெளிவந்தவை 13 வால்யூம்கள்.

அவர் பிறந்த நாள் அக்டோபர் 30.

அன்று அன்னை அவருக்காக எழுதிய செய்தி

"நம் அழகிய கனவுகளெல்லாம் பலிக்கும் நாள் வரும். பலிக்கும் பொழுது நாம் கனவு கண்டதைவிட அதிகபட்சம் சித்திக்கும்.

எங்கள் ஆசியுடன்"

பொதுவாக அன்னை என் ஆசியுடன் என எழுதுவார்கள். "நான், எங்கள் என எழுதினேன்'' என்றார். பகவானும் அன்னையும் இணைந்த ஆசி.

இதைப் பிரெஞ்சில் எழுதினேன். இது பகவான் ஸ்ரீ அரவிந்தரி- டமிருந்து வருகிறது.

பகவான் அடித்துச் சொன்னார்.

"இதை சத்பிரேமிடம் கூறு. அழகு நிறைந்தது, அற்புத- மானது, கற்பனைக்கெட்டாதவை நாம் கனவு கண்டவை. அவை பலிக்கும்பொழுது பலிப்பது இவற்றையெல்லாம் அர்த்தமற்றவையாக்கும் என்பதை சத்பிரேமுக்கு வற்புறுத்திக் கூறு" என்றார் பகவான்.

அன்று உன் பிறந்த நாளன்று என்ன சொல்வது என நான் வியந்த பொழுது சூட்சுமத்தில் பகவான் "இதைக் கூறு" என்றார்.

    இது சத்பிரேமுக்கு மட்டும் பகவான் கூறியதில்லை.

 சூட்சுமமிருந்தால் நம் பிறந்த நாளன்று பகவான் பேசுவது, அன்னை கூறுவது இப்படியிருக்கும்.

ஆன்மீகம் தருவது உயிருள்ள சந்தனக் காடு.

நாம் பெறுவது கடையில் வாங்கும் சந்தனக் கட்டை.

அதை இழைத்து மஞ்சள் கலந்து உருண்டையாக விற்கிறார்கள்.

அதிலும் சந்தன வாசனையுண்டு.

  • 2000 ஆண்டு முன்னிருந்த மனிதன் இன்று வந்து பார்த்தால் அவனுக்கு ஏற்படும் ஆச்சரியம் நாம் அன்னை அருளை அறியும்பொழுது ஏற்படும் ஆச்சரியத்தில் சிறு பகுதி.
    • நாம் காண்பது ஜட உலகம்.
      அது நடப்பது காரண லோகம்.
      சூட்சும லோகம் வழி அது நமக்கு வருகிறது.
    • மருமகளுக்கு மாமியார் மூலம் பரிசு தருவது போன்றது எனலாம்.
      சூரியனை நாம் பார்த்தால் வெளிச்சமாக இருக்கிறது.
      நாம் எதைக் கண்டோம், என்ன அளவில் கண்டோம் என நாமறிவதில்லை.
      அதன் நிலை பெரியது. நாம் காண்பது சிறியது.
      குருடன் கொக்கைப் புரிந்து கொண்டது போலும் குருடர்கள் யானையைத் தொட்டு அறிவது போலும்

      நம் பார்வை ஊனம்.
      ஊனக்கண்ணிற்குப் பார்வையில்லை.

நம் பிறந்த தினத்தன்று மேற்கூறிய செய்தியை நமக்காகக் கூறியதாக நினைத்துப் படிக்க வேண்டும். இன்று அப்படிப் படித்தால் இன்றே பிறந்த தினமாகும்.

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
செல்வாக்கால் உயர்ந்தவர் தாழ்ந்த நிலையிலுள்ளவரிடமிருந்து ஆன்மீகப் பலன், விவேகம் பெறும் நிலையில் இருப்பார்கள். சமூகத்தில் தங்களுக்குத் தேவையான உதவியையும் அவர்களிடமிருந்து பெறும் நேரமுண்டு. பொருளாகவும் அவ்வுதவியை நாடும் நிலையும் ஏற்படும். இந்நிலைகள், உயர்ந்தவனை, தாழ்ந்தவனைவிடத் தாழ்ந்த நிலைக்குக் கொண்டு செல்கிறது என்ற உண்மையை அறிந்து ஏற்றுக்கொள்வது உண்மையான அடக்கம்.
 
வாழ்வில் உயர்ந்தவன்
ஆன்மாவில் உயர்ந்தவனைவிடத் தாழ்ந்தவன்.

******



book | by Dr. Radut