Skip to Content

09. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

XX. Death, Desire, and Incapacity
20. மரணம், ஆசை, இயலாமை
Our Mind is conscious.
Page No.195
Para No.11
மனம் தன்னையறியும்.
Hunger is still only a vital hunger. It transforms itself into higher forms.
பசி உயிரின் பசி. பசி அதன் உயர்ந்த உருவமாக மாறுகிறது.
There is hunger in the vital parts.
உயிரில் பசியுண்டு.
It becomes craving of Desire in the mentalised life.
அது மனவாழ்வில் ஆசையின் வேகமாகிறது.
It is straining of Will in the intellectual or thinking life.
சிந்திக்கும் அறிவுடை வாழ்வில் அது சிந்தனையின் சிறப்பாகிறது.
This movement of desire must continue.
இந்த ஆசையின் சலனம் தொடர வேண்டும்.
It must continue until the individual has grown sufficiently.
மனிதன் போதுமான அளவுக்கு வளரும் வரை இது தொடரும்.
So that he can now at last become master of himself.
முடிவாக அவன் தனக்கு அதிபதியாகும்வரை இது தொடர வேண்டும்.
The union with the Infinite increases.
அனந்தத்துடன் ஐக்கியமாவது வளர்கிறது.
It is the Infinite possessor of the universe.
அது பிரபஞ்சத்தை அனந்தமாகத் தன்னுட்கொண்டது.
Desire is the lever.
ஆசை தூண்டுகோல்.
The divine Life-principle effects its end by the desire.
தெய்வீக வாழ்வின் சட்டம் ஆசை மூலம் சாதிக்கிறது.
It is the end of self-affirmation in the universe.
பிரபஞ்சத்தில் தன்னை வற்புறுத்தும் முடிவு அது.
There is an attempt to extinguish it.
அதை அழிக்க முயலலாம்.
It is done in the interests of inertia.
தமஸை காப்பாற்ற அதைச் செய்கிறார்கள்.
It is a denial of the Life-principle.
வாழ்வின் சட்டத்தை மறுக்கும் செயல் அது.
It is a Will-not-to-be.
அது இல்லாத உறுதி.
It is necessarily ignorance.
அது அவசியமாக அஞ்ஞானமாகும்.
One cannot cease to be individually except by being infinitely.
அனந்தமாக இல்லாமல் மனிதனாக இருக்க முடியாது.
It has to progress in the meanwhile.
இதற்கிடையில் அது முன்னேற வேண்டும்.
It begins from a mutually devouring hunger.
ஒருவரையொருவர் விழுங்கும் பசியாக அது ஆரம்பிக்கிறது.
It moves to the type of a mutual giving.
ஒருவருக்கொருவர் கொடுப்பதாக முடிகிறது.
It is an increasingly joyous sacrifice of interchange.
வளரும் ஆனந்த தியாகமான பரிமாறுதல் அது.
The individual gives himself to other individuals.
மனிதர்கள் மற்ற மனிதர்கட்குக் கொடுக்கிறார்கள்.
And receives them back in exchange.
கொடுத்ததைப் பிரதிபலனாகப் பெறுகின்றனர்.
The lower gives itself to the higher.
சிறியது பெரியதற்கு கொடுக்கிறது.
The higher gives itself to the lower.
பெரியது சிறியதற்குத் தன்னையளிக்கும்.
They are fulfilled in each other.
ஒன்றையொன்று பூர்த்தி செய்து கொள்கிறது.
The human gives itself to the Divine.
மனிதன் இறைவனுக்குத் தன்னை அர்ப்பணிக்கிறான்.
The Divine gives itself to the human.
தெய்வம் மனிதனுக்குத் தன்னை அர்ப்பணிக்கிறது.
The All in the individual gives itself to the All in the universe.
தனி மனிதனில் உள்ள எல்லாம் பிரபஞ்சத்திலுள்ள எல்லாவற்றிற்கும்
தன்னை அர்ப்பணிக்கிறது.
And receives its realised universality.
அப்படிப் பூர்த்தியான பிரபஞ்சத்தை ஏற்கிறது.
It is a divine recompense.
அது தெய்வம் தரும் பிரதிபலன்.
There is the Law of Hunger.
பசியின் சட்டமுள்ளது.
There is the Law of Love.
அன்பின் சட்டமுள்ளது.
One should give place to the other.
ஒன்று அடுத்ததற்கு இடம் தர வேண்டும்.
The Law of Division must give place to the law of Unity.
பிரிவினைச் சட்டம் ஐக்கியத்தின் சட்டத்தை ஏற்க வேண்டும்.
The law of Death to the law of immortality.
மரணம் நித்தியத்தை ஏற்க வேண்டும்.
Such is the necessity.
அவசியம் அத்தன்மையொத்தது.
Such is the justification.
இவ்வழி அவை சரியென ஏற்கப்படுகின்றன.
Such is the culmination and self-fulfilment of the Desire.
ஆசையின் முடிவு, அது பூர்த்தியாவதும் இப்படி.
It is at work at the universe.
இது பிரபஞ்சத்தில் செயல்படுகிறது.
Life assumes this mark of Death.
Page No.195
Para No.12
வாழ்வு மரணம் என்ற முகமூடியைப் போட்டுள்ளது.
The finite seeks to affirm its immortality.
சிறியது அதன் நித்தியத்தை வற்புறுத்துகிறது.
Desire is the impulse of the Force of Being.
ஆசை ஜீவனின் சக்தியுடைய வேகம்.
It is individualised in Life.
அது வாழ்வில் தனி மனிதனுக்குரியதாகிறது.
It affirms progressively.
கொஞ்சம் கொஞ்சமாக அது வலியுறுத்துகிறது.
It does so in terms of succession in Time.
காலத்தில் தொடர் நிகழ்ச்சியாக அது செயல்படுகிறது.
 
And of self-extension in Space.
பிரம்ம வெளிப்பாடான இடத்திலும் செயல்படுகிறது.
It does so in the framework of the finite.
சிறியதின் கட்டுக்கோப்புக்குள் அது செயல்படுகிறது.
Also in its infinite Bliss.
அனந்தமான ஆனந்தத்தின் எல்லைக்குள் செயல்படுகிறது.
It is the Ananda of Sachchidananda.
அது சச்சிதானந்தத்தின் ஆனந்தம்.
That impulse assumes a mark of Desire.
ஆசையெனும் முகமூடியை அது தரிக்கிறது.
It comes directly from the third phenomenon of Life.
வாழ்வின் மூன்றாம் அம்சத்திலிருந்து அது நேரடியாக எழுகிறது.
It is its law of incapacity.
அது இயலாமை என்ற சட்டம்.
Life is an infinite Force.
வாழ்வு அனந்தமான சக்தி.
It is working in terms of the finite inevitably.
சிறியதன் கணக்குக்குள் அது செயல்படுகிறது, இது தவிர்க்க முடியாதது.
Its overt individualised action is in the finite.
வெளிப்படையான தனித்த செயல் கண்டத்தில் வெளிப்படுகிறது.
Its omnipotence must appear.
அதன் எல்லாம் வல்லமை தெரிய வேண்டும்.
Behind every act of the individual there is something.
தனி நபர் செயலுக்குப்பின் ஒன்றுளது.
It is the whole superconscious and subconscious presence.
அது பாதாளமும், பரமாத்மாவும் சேர்ந்தது.
It is of the infinite omnipotent Force.
அது அனந்தமான எல்லாம் வல்ல சக்தி.
It is there behind it however weak, however stumbling, however
futile.
எவ்வளவு வலிமையற்றதானாலும், பயனற்றதானாலும், தடுமாறுவதானாலும் அது உண்டு.
 
 
Without that presence behind it no least single movement in the cosmos can happen.
பின்னணியில் அந்தச் சக்தியின்றி பிரபஞ்சத்தில் எந்த ஒரு சலனமும் ஏற்பட முடியாது.
Supermind is inherent in things.
பொருள்களில் சத்தியஜீவியம் பிறப்பிலேயே இயல்பாக இருக்கிறது.
There is the omnipresent omniscient force.
எல்லாம் வல்ல எல்லாம் அறிந்தது சக்தியாக வேலை செய்கிறது.
There is the sum of universal action.
பிரபஞ்ச செயல்களின் தொகுதியுண்டு.
Each act and movement falls by a fiat.
ஒவ்வொரு செயலும் சலனமும் அதனால் விழுகிறது.
That fiat works as the Supermind.
அந்தச் சக்தி சத்தியஜீவியம்.
But there is the individualised life force.
தனிப்பட்டதாக எழும் வாழ்வின் சக்தியுள்ளது.
This force is limited to its consciousness.
இந்தச் சக்தி தன் ஜீவியத்துள் மட்டும் வேலை செய்கிறது.
It is full of incapacity.
இதன் இயலாமை முழுமையானது.
It has to work against two things.
அது இரு சக்திகளை எதிர்த்து வேலை செய்கிறது.
One is the mass of other environing individualised life forces.
தனிப்பட்ட வாழ்வின் சக்திகளின் தொகுப்பு ஒன்று.
It is subject to control and denial by the infinite Life itself.
அனந்தமான வாழ்வின் கட்டுப்பாட்டிற்கும், மறுப்புக்கும் அது உட்பட்டது.
It has a total will.
அதற்கு மொத்தமான உறுதியுண்டு.
It has its own will and trend.
அதற்கென்று சொந்தமான உறுதியுண்டு.
They may not immediately agree.
அவை உடனே ஒத்துக்கொள்ள மறுக்கும்.
Limitation of force is there.
சக்திக்கு அளவுண்டு.
There is phenomenon of incapacity.
இயலாமை என்ற விஷயம் உண்டு.
Therefore this is the third characteristic.
அதனால் இது மூன்றாம் அம்சம்.
It is the characteristic of individualised divided life.
தனிப்பட்ட பிரிக்கப்பட்ட வாழ்வின் மூன்று அம்சங்கள் இவை.
On the other hand, there are other things.
மறுபக்கம் மற்றவையுள்ளன.
There is the impulse of self-enlargement.
தான் பெருகும் வேகம் உண்டு.
The impulse of all possession remains.
அனைத்தையும் தன்னுட்கொள்ளும் வேகமும் உண்டு.
It does not or is not meant to measure things.
அது பொருள்களை அளப்பதில்லை, அதற்காக ஏற்பட்டதில்லை.
It does not limit itself by the limit of its present capacity.
தன்னை அளவுக்குட்படுத்திக் கொள்வதில்லை, தன் இன்றைய திறமையால் செய்வதில்லை.
Hence a gulf arises.
எனவே ஒரு இடைவெளி எழுகிறது.
It is between the impulse to possess and the force of possession.
ஆட்கொள்ளும் சக்திக்கும் அதன் வேகத்திற்கும் இடைப்பட்டது அது.
Desire arises in it.
அதை ஆசை எழுப்புகிறது.
Such discrepancy may not be there.
அப்படிப்பட்ட வேறுபாடுகள் இல்லாமலிருக்கலாம்.
The force may always take possession of its object.
சக்தி தன் பொருளை எப்பொழுதும் எடுத்துக் கொள்ளும்.
Always attain securely its end.
அதன் குறிக்கோளை எப்பொழுதும் உறுதியாய் அடையும்.
Then desire would not come into existence.
அப்படியானால் ஆசை எழாது.
There would be only a calm self possessed will.
நிதானமான தன் சக்தியைத் தன்னுட்கொண்ட உறுதி மட்டுமிருக்கும்.
Without craving, such as the will of the Divine.
திருவுள்ளம் போல் அதற்குப் பெறும் வேகமிருக்காது.
Contd....
தொடரும்....

******



book | by Dr. Radut