Skip to Content

03. லைப் டிவைன் - கருத்து

லைப் டிவைன் - கருத்து

Process of Creation - சிருஷ்டி

  • எப்படிச் சிருஷ்டி ஏற்பட்டது என்பதைப் பகவான் The Life Divineஇல் 13ஆம் அத்தியாயத்திலிருந்து 25ஆம் அத்தியாயம் வரை கூறுகிறார்.
    1. 13ஆம் அத்தியாயம் - தெய்வீக மாயை - அனைத்தும் அனைத்துள்ளிருக்கும் நிலையை தெய்வீக மாயை ஒன்று பலவிலும், பல ஒன்றிலும் இருக்கும்படி மாற்றுகிறது.
    2. 14ஆம் அத்தியாயம் - சத்தியஜீவியம், சிருஷ்டிகர்த்தா, பிரம்ம திருஷ்டி தான் கண்ட சத்தியத்தைச் சக்தியாகவும், ரூபமாகவும், தன்னுள்ளே வெளிப்படுத்துகிறது.
    3. 15ஆம் அத்தியாயம் - உயர்ந்த சத்திய ஜீவியம் - எல்லாம் பிரம்மத்தாலானவை. பிரம்மம் அனைத்திலும் உள்ளது, பிரம்மத்துள் அனைத்தும் உள்ளன.
    4. 16ஆம் அத்தியாயம் - சத்தியஜீவியத்தின் மூன்று நிலைகள் - அவை கடவுள், ஜீவாத்மா, அகந்தை.
    5. 17ஆம் அத்தியாயம் - தெய்வீக ஆன்மா - எந்த நேரமும் தெய்வீக ஆன்மா பிரம்மத்தின் முன்னிலையில் உள்ளது.
      • இது ஏகனிலும், அநேகனிலும் ஒரே சமயத்தில் வசிக்கிறது.
    6. 18ஆம் அத்தியாயம் - சத்தியஜீவியமும், மனமும் - சத்திய ஜீவியம் இரண்டாகப் பிரியும்பொழுது மனம் ஏற்படுகிறது. இது உயிருடனும், உடலுடனும் ஐக்கியப்படுவதால் அஞ்ஞானம் பூரணமாகிறது.
    7. 19,20,21,22 - வாழ்வைப் பற்றிய 4 அத்தியாயங்கள்.
      • உடல் உணர்வை வாழ்வு, மனத்திற்குக் கொண்டு போய் எண்ணமாக மாற்றி, உடலை எண்ணத்தால் கட்டுப்படுத்துகிறது.
      • ஆசை மனத்தில் அன்பாக மாறுகிறது.
      • மாறிய அன்பு ஜீவியத்தை நோக்கி உயர்கிறது.
      • பிரிந்த சக்தியும், ஜீவியமும் உயர்ந்து சத்திய ஜீவியத்தை அடைந்து சேருகின்றன.
    8. 23 - சைத்தியப் புருஷன் - ஆன்மா, வளரும் ஆன்மாவாக மாறுவது, சைத்தியப் புருஷன். இது அகத்தில் மட்டும் முதிர்ச்சியடைவதால் பாலவாதம், உன்மத்த வாதம், பிசாச வாதம் ஏற்படுகிறது.
    9. 24 - ஜடம் - சத் புருஷன் பிரபஞ்சத்தில் வெளிப்படுவதை மனம், புலன் வழிக் காண்பதால் ஏற்படுவது ஜடம்.
    10. 25 - ஜடத்தின் சிக்கல் - அஞ்ஞானம், தமஸ், பிரிவினையால் ஜடம் திருவுருமாறுவது தடையாகிறது.

மேற்சொன்னவற்றை மேலும் விளக்கலாம்:

  1. பிரம்மம் - சிருஷ்டிக்க முடிவு செய்கிறது - சத் ஏற்படுகிறது.
    சத் என்பது சத் புருஷனாகும்.
    சத் என்பது சத், சித், ஆனந்தமாகும்.
    • சத் தன்னையறிவதால் சித் ஆகிறது.
      சித் தன்னை அனுபவிப்பதால் ஆனந்தம் ஏற்படுகிறது.
    • சச்சிதானந்தம் என்பது அக்ஷரப் பிரம்மம்.
      இது அகம், புறமாகப் பிரிகிறது.
      இப்பிரிவினையே சிருஷ்டிக்கு ஆரம்பம்.
      அகம் - வளரும் ஆன்மாவான சச்சிதானந்தம்.
      புறம் - சத்தியஜீவியம்.

      சத்
       -  சித்
      - ஆனந்தம்
      -> -> -> (அகம்)
      சத்தியம்
      - ஞானம்
      - அனந்தம்
      -> -> -> (புறம்)

      சத்தியமும் ஜீவியமும் சத்தியஜீவியமாகின்றன.
      சத்தியஜீவியத்தில் அனந்தம் விட்டுப் போகிறது.

  2. சத் புருஷன் மூன்றாகப் பிரியும் பொழுது, அவற்றின் மூன்று சக்திகளும் சேர்ந்து

     பிரம்மம்
    -       புருஷன்
    -       ஈஸ்வரன்
    மாயை
    -       பிரகிருதி
    -       சக்தி என மாறுகின்றன.

    1. மாயை தானே சிந்தனையால் சிருஷ்டிக்க வல்லது - காலம்.
    2. பிரகிருதி மாயை சிருஷ்டித்ததைச் செயல்படுத்த வல்லது - காலத்தைக் கடந்தது.
    3. சக்தி தானே சிருஷ்டித்து செயல்படுத்த வல்லது - மூன்றாம் நிலைக் காலம்.
      • மாயையிலிருந்து பிரகிருதி வழியாக சக்தியை அடையும் பொழுது பிரம்மம் புருஷனாகி ஈஸ்வரனாகிறான்.

        அது காலம் காலத்தைக் கடந்து மூன்றாம் நிலைக் காலமாகும் பாதை.

        அதுவே அற்புதம்.

  3. சத்தியஜீவியம் இரண்டாகப் பிரிந்து மனம் ஏற்படுகிறது.
    சத்தியஜீவியம் சிருஷ்டியை முழுமையாகப் பார்க்க வல்லது.
    மனம் துண்டு செய்யும் கருவி.
    அதன் பார்வை பகுதியானது.
    என்றாலும் அடுத்த பக்கத்தை மாறி பார்க்க முடியும்.
    அப்படிப் பார்க்க மறுத்தால் மனம் சத்தியஜீவியத்தினின்று விலகுகிறது.

    இதுவே அஞ்ஞானம்.

  4. மனத்தில் ஞானம் உறுதியுண்டு.
    ஞானம் உறுதி மேல் செயல்பட்டால் சக்தி வெளிப்படுகிறது.
    அச்சக்தியின் லோகம் வாழ்வு.
      வாழ்வுக்குச் சலனம், சக்தியுண்டு, ரூபமில்லை.
  5. வாழ்வு சலனத்தையிழந்தால் சக்தி ரூபத்துள் மறைகிறது.
    வாழ்வு சலனத்தை முழுமையாக இழந்தால் முழு சக்தியும் ரூபத்துள் மறையும்.
    சக்தியையும், சலனத்தையும் இழந்த ரூபம் ஜடம்.

    இதுவரை சிருஷ்டி.
    இனி பரிணாமம்.

  6. ஜடம் அசைந்தால் சக்தி வெளிப்பட்டு வாழ்வு எனும் லோகம் எழுகிறது.
  7. வாழ்வில் உறுதியும் ஞானமும் இணைந்தால் சலனமிழந்து ஞானம் எழுந்து வாழ்வு மனமாகிறது.
  8. ஞானமும், உறுதியும் ஐக்கியமானால் மனம் உயர்ந்து சத்திய ஜீவியமாகிறது.
  9. இம்மாற்றம் மௌனம், ஜோதி, ஞானம், தெய்வீகம் ஆகிய நிலைகள் வழிச் சென்று,
  10. பொன்மூடியை உடைத்து சத்தியஜீவியத்தை அடைகிறது.

******

 

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
தவிர்க்க முடியாதது முதன் முறை சமர்ப்பணம். ஆனால் அதை ஆரம்பிக்க, பூரணமாக மனம் ஒருநிலைப்படுதல் தேவை. மனம் பூரணமாக ஒருநிலைப்பட்டால், ஜீவன் முழுவதும் இறைவனை நோக்கி விழிப்புறும்.
 
ஜீவன் விழித்தால் சமர்ப்பணம் பலிக்கும்.

*******



book | by Dr. Radut